Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Paalakeerai


 பாலக்கீரை புலாவ்

 

 

பூஷிதா அஜித், பெங்களுர்


 

தேவையான பொருட்கள்:

 

 பிரியாணி அரிசி அரை படி

பாலக்கீரை 1 கட்டு

பச்சை பட்டாணி 100கிராம்

காரட் 100 கிராம்

கேப்சிகன் 1

பச்சை மிளகாய் 3

பெரிய வெங்காயம் 2

தக்காளி 2

மிளகாய்த்தூள் சிறிதளவு

மல்லித் தழை மற்றும் புதினா சிறிதளவு

தேவையான அளவு மசாலா வகைகள்

தேவையான அளவு உப்பு

 

செய்முறை:

முதலில் பெரிய வெங்காயம், தக்காளி, காரட், கேப்சிகன் பச்சைமிளகாய் மல்லி, புதினா மற்றும் பாலக்கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிரியாணி அரிசியை கழுவி வறுத்து வைத்துக் கொள்ளவும். 


ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்தவுடன் பிரிஞ்சி இலை. பட்டை போடவும். அதன்பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு கிளறி விடவும். பின்னர் காரட், கேப்சிகன், பச்சைமிளகாய், பச்சை பட்டாணி ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி விடவும். சிறிதளவு மிளகாய்த்தூள் போட்டுவிட்டு மல்லித்தழை புதினா ஆகியவற்றை போடவும். அதன் பின்னர் பாலக்கீரையை போட்டு கிளறி விடவும். பாலக்கீரை வதக்கும் போது நீர் ஊறும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பின்னர் தக்காளியை போட்டு வதக்கிவிடவும்.       


       ஒரு குக்கரில் அரிசியின் அளவில் ஒன்றை மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்தவுடன் கடாயில் வதக்கியதை போடவும். நன்றாக கலக்கிவிட்டு பிரியாணி அரிசியை போட்டு கலக்கி விடவும். சுவைக்கு தேவையான அளவு உப்பை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து சமைப்பது நல்லது. நீர் வற்றி கெட்டியாகும் பக்குவத்தில் குக்கரின் மூடியை மூடிவைத்துவிடவும். பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடவும். பின்னர் ஒரு பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்து சாதத்தை கிளறிவிட்டு பரிமாறினால் பாலக்கீரை பிரியாணி புரட்டாசி மாதத்தில் சாப்பிட சுவையாக இருக்கும். பழகி விட்டால் அடிக்கடி செய்து சாப்பிடலாம். சைவப்பிரியர்களுக்கு சாதகமான சாப்பாடு. ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 7 =