Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni_6-5

 

தமிழ்நாடு ஸெளராஷ்ட்ரக் கல்வியாளர் கூட்டமைப்பின் சார்பாக மதுரை ஸெளராஷ்ட்ர மேனிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவியர்க்கு கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் 6-5-2017 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை தனலட்சுமி பொறியியல் கல்லூரி தலைவர் முனைவர். வி.பி.இராமமூர்த்தி தலைமையில் நடைப்பெற்றது. 

 

மதுரை கே.எல்.என். பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ராதாகிருஷ்ணன், கே.எல்.என். பொறியியல் கல்லூரி தலைவர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்க ஸெளராஷ்ட்ர மேனிலைப் பள்ளித் தாளாளர் ஜெகந்நாத் வரவேற்புரையாற்றினார். வழிக்காட்டி பட்டறையில் பயிற்சியளிக்க வந்துள்ளவர்களை கூட்டமைப்பின் சார்பில் அனந்தராமன் அறிமுகவுரையாற்றினார். 

 

மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவுடன் தங்களுக்கு கிடைத்துள்ள மதிப்பெண்ணைக் கொண்டு தங்களுக்கு எந்தப் பாடத்தில் ஆர்வம் அதிகம் உள்ளது என்பதை உணர்ந்து அந்த பாடப்பிரிவை தேர்வு செய்யவேண்டும். பின்னர் மதிப்பெண்படி அதற்கு எந்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும் என்பதை சிந்தித்து முடிவு செய்து கொண்டு அதன்படி கல்லூரியில் சேர்ந்து இஷ்டப்பட்டு படித்து சாதிக்கவேண்டும் என்பதை தனது தலைமையுரையில் தனலட்சுமி பொறியில் கல்லூரி தலைவர் ராமமூர்த்தி குறிப்பிட்டார்.

 

நாம் படிக்கின்ற காலத்தில் இதுபோன்ற வழிகாட்டுதல் இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும். எங்கள் காலத்தில் இதுபோன்ற வழிகாட்டுதல் இருந்திருந்தால் எங்களுடைய வாழ்க்கை நிலைமையே மாறியிருக்கும் என்று மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

 

மாணவர்களுக்கான வழிகாட்டும் வகுப்புகளை ஸெளராஷ்ட்ர மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானச்சந்திரன் தலைமையில் நடந்தது. தலைமை பண்பு என்ற தலைப்பில் ரமேஷ், உயர்நிலை வேலைகளுக்கு வழிக்காட்டி என்ற தலைப்பில் பேராசிரியர். அஸ்வத்பாபு, ஆளுமை வளர்ச்சி என்ற தலைப்பில் தயானந்தன், தொழில் நுட்பம் மற்றும் நிர்வாக இயல் பற்றி பேராசிரியர் ராம்குமார், நேர்முகத் தேர்வில் தெரிந்து கொள்ளவேண்டியவைப் பற்றி தேசியப் பயிற்சியாளர் ராம்பிரசாத் ஆகியோர் மாணவர்களை தயார்ப்படுத்துகிறார்கள்.

 

ஸெளராஷ்ட்ர மத்ய சபை பொதுக்காரியதரிசி ராமசுப்பிரமணியன் நன்றியுரையுடன் தொடக்க விழா நிறைவுற்றது. 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 7 =