Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni kaLatni 1-9

நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த நம் சமூக மாணவர் அவினாஷ் ஒரு விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்புக்களை தானம் செய்துள்ளார். அவரால் நான்கு பேர் பார்வை பெற்றுள்ளனர். ரஷ்யாவில் உள்ள ஒருவருக்கு இவருடைய இருதயம் பொருத்தப்பட்டு உள்ளது. ஆவினாஷால் ஏழு நோயாளிகள் பிழைத்துள்ளார்கள். ஏழ்மையிலும் பிறர்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவரது குடும்பத்தாரை உயர்த்தியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியினர் அவினாஷை கௌரவிக்கும் வகையிலும் அவரது குடும்பத்தாரை பெருமைப்படுத்தும் வகையிலும் திருநெல்வேலியில் உள்ள ஒரு தெருவிற்கு அவினாஷ் இ.பி.எப். தெரு என்று பெயரிட்டுள்ளனர்.  ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தலைவர் திருநெல்வேலி மாநகராட்சி மேயருக்கு சமூகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும் கிழக்குச் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மாண்புமிகு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடிதம் எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 
உடலுருப்பை தானமாக வழங்கிய சிறுவன் அவினாஷின் குடும்பத்திற்கு விரைவில் புதுவையில் நடைபெற உள்ள ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் நிர்வாக சபைக்கூட்டத்தில் பாராட்டும் நிதியுதவியும் வழங்க இருப்பதாக தலைவர் ஈஸ்வரமூர்த்தி அறிவித்துள்ளார். 

நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த நம் சமூக மாணவர் அவினாஷ் ஒரு விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்புக்களை தானம் செய்துள்ளார். அவரால் நான்கு பேர் பார்வை பெற்றுள்ளனர். ரஷ்யாவில் உள்ள ஒருவருக்கு இவருடைய இருதயம் பொருத்தப்பட்டு உள்ளது. ஆவினாஷால் ஏழு நோயாளிகள் பிழைத்துள்ளார்கள். ஏழ்மையிலும் பிறர்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவரது குடும்பத்தாரை உயர்த்தியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியினர் அவினாஷை கௌரவிக்கும் வகையிலும் அவரது குடும்பத்தாரை பெருமைப்படுத்தும் வகையிலும் திருநெல்வேலியில் உள்ள ஒரு தெருவிற்கு அவினாஷ் இ.பி.எப். தெரு என்று பெயரிட்டுள்ளனர்.  ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தலைவர் திருநெல்வேலி மாநகராட்சி மேயருக்கு சமூகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும் கிழக்குச் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மாண்புமிகு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடிதம் எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

உடலுறுப்பை தானமாக வழங்கிய சிறுவன் அவினாஷின் குடும்பத்திற்கு விரைவில் புதுவையில் நடைபெற உள்ள ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் நிர்வாக சபைக்கூட்டத்தில் பாராட்டும் நிதியுதவியும் வழங்க இருப்பதாக தலைவர் ஈஸ்வரமூர்த்தி அறிவித்துள்ளார். 

ஸெளராஷ்ட்ர ஸாஹித்ய ஸதஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் சார்பில் ஸெளராஷ்ட்ர இலக்கியங்கள் மக்களுக்கு சென்றடையும் விதத்தில் பேரூரைகள் திறனாய்வுகள் என்று நிகழ்த்த தீர்மானித்து முதல் கட்டமாக இன்று (03-09-2016) மதுரை சோலைஸ்ரீமுருகன் திருமண மண்டபத்தில் பேராசிரியர் ஜி.ஆர்.மகாதேவன் ஸ்ரீநாயகி சுவாமிகளின் படைப்பாற்றல் என்னும் தலைப்பில் இலக்கியப் பேரூரை நிகழ்ச்சி நடைப்பெற்றது.  குருபக்திää தாய் தந்தையர் பக்திää நிலையாமை என்ற மூன்று கருத்துக்களை வலியுறுத்தும் வண்ணம் நாயகியார் தமது பாடல்களில் கூறியுள்ள விதம்பற்றி விளக்கி பேசினார். ஸெளராஷ்ட்ர மொழி, இலக்கிய ஆர்வலர்களும் மாணவர்களும் வருகை புரிந்து சிறப்பித்தனர். இவ்விழாவிற்கு ஸதஸின் தலைவர் சோலை குமரேஷ் வரவேற்றுப் பேசினார். கிருஷ்ணமாச்சாரி இறைவணக்கம் பாடினார். மகாதேவன் நிகழ்த்திய மாபெரும் உரைக்குப் பின்னர் செயலாளர் அருண் பிரசாத் நன்றி கூறினார்.

இராசிபுரம் ஸெளராஷ்ட்ர கலாச்சார அறக்கட்டளையின் 22-ஆம் ஆண்டு விழா வருகின்ற 10-09-2016 அன்று மாலை 6.00 மணிக்கு இராசிபுரம் ஸெளராஷ்ட்ர விப்ரகுல சமூக பஜனை மடத்தில் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக தேர்ச்சிப் பெற்ற மாணவ-மாணவியர்க்கு ஊக்கப்பரிசும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஸெளராஷ்ட்ர சமூகத்தில் மொழிக்காக சேவை செய்துவருவோர்களை அழைத்து சிறப்பு கௌரவம் செய்துவரும் இந்த அமைப்பினர் இந்த ஆண்டு ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகை ஆசிரியர் எஸ்.டி.ஞானேஸ்வரன் சிறப்பாக கௌரவிக்கப்படுகிறார்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 8 =