Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
uruthiyAna....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


         Vol.3 1st May 2016 Issue: 17


உறுதியான மாற்றத்திற்கு….

லயோலாக் கல்லூரியின் கருத்துக் கணிப்பு வந்துவிட்டது. இனி தி.மு.க. ஆட்சிதான். இதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்று ஒரு கருத்து பலரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கணிப்பெல்லாம் வெறும் மாயை. ஏற்கனவே எங்கள் ஆஸ்தான உளவுத்துறையின் கணிப்புப்படி அ.தி.மு.க.தான் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை என்று அந்த கட்சியினரும் மிதப்பில் இருக்கின்றனர். நாங்கள்தான் மாற்று சக்தி என்று தே.மு.தி.கவும் மக்கள் நலக்கூட்டணியும் மார்த்தட்டிக் கொண்டிருக்கின்றன. இவர்களை விட்டால் தமிழகத்தை ஆளத் தகுதியானவர்கள் இல்லையா என்ற ஏக்கத்துடன் பொதுமக்கள் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்றைய தமிழக அரசியலில் பொதுமக்களின் தலையாய பங்கு யாராவது நம்மை காப்பாற்ற வரமாட்டார்களா என்று ஏக்கத்துடன் பார்ப்பதுதான்!

தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் இருந்தால் அந்தக் கட்சியைப் புறக்கணித்துவிடுங்கள். சென்ற ஆட்சியாளர்கள் இலவசங்களைக் கொடுத்து மக்களின் வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றியிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். ஒரு ஆயிரமோ இரண்டாயிரமோ மக்களுக்கு கொடுத்துவிட்டு ஆட்சியாளர்கள் தங்கள் சொத்துக் கணக்கை எப்படியெல்லாம் உயர்த்தியிருக்கிறார்கள் என்று பாருங்கள். கமிஷன் இல்லாத ஒப்பந்தங்கள் இல்லை. எதை வாங்கினாலும் யாருக்காக வாங்கினாலும் கமிஷன் என்று கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்ட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்! மக்களை மயங்கச்செய்யும் வாக்குறுதிகள். அந்த மயக்கம் தீராமல் அவர்களையே மீண்டும் தேர்ந்தெடுக்கச் செய்யும் மதியை மழுங்கச் செய்த மயக்கம். இந்த தீராத மயக்கத்திலிருந்து விடுபட மக்களுக்குச் சிந்தனை என்கின்ற தண்ணீரை தெளிக்க…வேண்டாம்…வேண்டாம் கொட்டவேண்டும். அப்போதுதான் மக்களிடம் தெளிவான சிந்தனை வளரும். 

மக்களை சிந்திக்க விடாமல் செய்ய மதுக்கடைகள். சென்ற தி.மு.க. ஆட்சிக்காலத்தில் லாட்டரி எனும் பேய் உழைப்பையே மறக்கடித்தது. குடும்பத்தை கடனாளியாக்கியது. இந்த ஆட்சி மது குடும்பத்தையே மறக்கடித்தது. குடும்பம் சீரழிந்தது. குடும்பப் பெண்களின் நிலையோ சங்கடத்திற்குள்ளானது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் என்று ஒரு புதிய கோட்டையை உருவாக்கி அதனுள் மக்களை தள்ளிவிட இவர்கள் அதிகார பலம் கொண்ட கோட்டைக்குள் வாசம் செய்ய தொடங்கினார்கள். 

தொழில் கல்வி பொருளாதாரம் என்று நோக்கும்போது நாம் இழந்தவிட்ட நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவைகளை திரும்ப பெற இன்னும் இரண்டு தலைமுறைக்கு நாம் பாடுபட வேண்டும். இந்த நிலை மாற ஆட்சியாளர்கள் மாற வேண்டும். கட்சிகள் மாறவேண்டும். அந்த மாற்றத்தை மக்கள் கொண்டுவர முனைப்புடன் 100 சதம் என்ற நோக்கில் வாக்களிக்க வேண்டும். ஜனநாயகத்தை புரிந்துகொண்டு அனைவரும் வாக்களித்தால் மாற்றம் உறுதியாக ஏற்படும். 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 9 =