Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
ezhuththu oru thadaiyaa

 

ஸெளராஷ்ட்ர இலக்கிய வளர்ச்சிக்கு எழுத்து ஒரு தடையா?
சூரியாஞானேஸ்வர்
சமீப காலமாக முகநூலில் ஸெளராஷ்;ட்ர லிபி பற்றி ஒரு சிலர் பிரச்னையில் ஈடுப்பட்டுவருகின்றனர். எனக்குத் தெரிந்து 1975 முதல் இந்த பிரச்னை ஓய்ந்தபாடில்லை. இந்த பிரச்னையால் நம் மொழிக்குக் கிடைத்த லாபம் என்ன என்று யாராவது சொல்லமுடியுமா? கடந்த 40 ஆண்டு காலத்தில் மாற்றுக்கருத்து கொண்ட மொழி ஆர்வலர்கள் தேவநாகரி லிபியி;ல் எத்தனை புத்தகங்கள் வெளியிட்டுள்ளனர்? மொழி பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் எழுத்துப்பற்றி பேச வேண்டும் என்றால் அதற்கு போதிய மொழியியல் அறிவு வேண்டும். மொதிரெத்து மாதஇதழில் அதன் ஆசிரியர் குறிப்பிட்டப்படி பத்து பொழுதுப்போக்கு ஆசாமிகள் கூடி முடிவெடுக்கக்கூடிய விஷயமல்ல. இது முற்றிலும் அறிவாளிகள் சம்பந்தப்பட்ட விஷயம். 
ஒரு மொழிக்கு வரி வடிவம் உருவாக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. அது விஞ்ஞான ரீதியாக அந்த மொழிப் பேசுவோரின் உச்சரிக்கும் தன்மைக்கேற்ப அனைத்து வார்த்தைகளுக்கும் சரியான முறையில் எழுத்துக்களை அமைக்கவேண்டும். அத்துடன் அவைகளை அச்சில் ஏற்றி அச்சிடும் தன்மையில்; நிலைநிறுத்த வேண்டும். பல மொழிகளை அறிந்திருக்க வேண்டும். மொழியியல் அறிவும் வேண்டும். இத்தகு தன்மையுடன் தனது வாழ்நாளில் தன் சொத்துக்களை எல்லாம் நமது மொழிக்காகவே செலவழித்து பாடுபட்ட மேதாவி இராமராயின் அரிய பணியை நாம் உதாசீனப்படுத்துவதுடன் அவமரியாதையும் செய்து வருவது மிகவும் வேதனைக்குரியதாகும். அவருடைய கடின உழைப்பு தான் ஸெளராஷ்ட்ர லிபி என்று சொல்லப்படுகிற எழுத்துக்கள். அப்போதே சில விஷமிகளால் அவர் அச்சிட்டு வெளியிட்டப் புத்தகங்கள் அச்சு எழுத்துக்கள் என்று யாவையும் அழித்து விட்டனர். இதனால் நமது மொழிக்குத்தான் நஷ்டம். இன்றுவரை நமது மொழியில் உள்ள இலக்கியங்கள் என்று பட்டியலிட்டுக் காட்டத்தான் முடிகிறதே தவிர அவைகளை கண்ணால் காணக்கூடிய பாக்கியம் பலருக்கும் கிட்டவி;ல்லை.
நம்முடைய மொழியின்பால் ஆர்வமும் அக்கறையும் கொண்ட சிலர் மொழியை வளர்க்கிறேன் என்று சொல்லி தேவநாகரி எழுத்தினை நம் மொழிக்குரிய எழுத்து என்று தேவையற்ற பிரச்னைகளை இழுத்துவிட்டு மொழி வளர்ச்சிக்கு முழுக்க முழுக்க தடையாக இருப்பதும் இவர்களே. உங்களுக்கு லிபி ஒரு பிரச்னையாக இருந்தால் முதலில் அனைவருக்கும் தெரிந்த லிபியில் இலக்கியங்களை படைக்க வாருங்கள். நம் மொழிக்கு இலக்கிய வளர்ச்சி என்பது மிகவும் குறைவு. நமது முன்னோர்கள் படைத்திருக்கும் சாகித்யங்கள் பல. ஆனால் கையில்; கிடைத்து அச்சில் ஏறியவை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இன்னும் இருந்து வருகிறது. ஸெளராஷ்ட்ர மொழியி;ல் இலக்கியங்கள் ஏராளமாக உள்ளன என்ற நிலைக்கு வரும்போது லிபி பற்றி தீர்க்கமாக சிந்திக்கலாம். 
அப்போதும்கூட நம்முடைய மொழியின் உச்சரிக்கும் தன்மைக்கேற்ற லிபி மேதாவி இராமராய் அவர்களால் சீர்படுத்தப்பட்ட லிபிதான் உகந்ததாக இருக்கும். தமிழ் எழுத்தை இப்போது யாரும் வீரமாமுனிவர் எழுத்து என்று கூறுவதில்லையே. நம் இனத்தவர்க்கு மட்டும் ஏன் நம் முன்னோர்களை மதித்து கௌரவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து உருவாகிறது? எல்லாம் இந்த பாழாய் போன பணத்தாலேதான். யாரோ அள்ளிக்கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் நமக்குள்ளே கருத்துவேறுபாட்டை உருவாக்கி தொடர்ந்து மொழி இலக்கிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர். இதனால் நம் மொழிக்கு என்ன லாபம் என்று சிந்தித்துப் பார்த்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதை தவிர்த்துவிடுவது ஒன்றே ஸெளராஷ்ட்ர இலக்கியப் பணிக்கு செய்யும் மகத்தான சேவையாக கொள்ளலாம்.
உண்மையான மொழியார்வம் படைத்தவர்கள் தமிழ் எழுத்தைப் பயன்படுத்தி தங்கள் படைப்புக்களையும் நமது முன்னோர்களின் இலக்கியங்களையும் அச்சிட்டு புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பின்வரும் சந்ததியினருக்குப் பயன்படும் என்று நம்பிதான் தங்கள் சொந்தப் பணத்தை செலவிட்டு திரும்ப கிடைக்காது என்ற மனப்பான்மையி;ல் தான் இந்த சேவையை செய்து வருகிறார்கள். 
எழுத்து என்பது பிரச்னையல்ல. கணினி தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இந்த சூழ்நிலையில் நமது ஸெளராஷ்ட்ர எழுத்தினை கணினியில் டைப் செய்ய இளைஞர்கள் முன்வந்தாலே போதும். அடுத்த எழுத்தை சுவீகாரம் செய்து கொள்ளவேண்டிய அவசியமே இருக்காது. இப்போது நம் இலக்கிய வளர்ச்சி நம் கண்முன்னே இ:ருக்கிறது. பயன்படுத்திக் கொள்ள தெரிந்தால் போதும் என்பதே என் கருத்து. உடன் வாருங்கள் ஒத்துழைப்புத் தாருங்கள். சாதனைகள் புரிந்துக் காட்டுவோம்!

ஸெளராஷ்ட்ர இலக்கிய வளர்ச்சிக்கு எழுத்து ஒரு தடையா?

சூரியாஞானேஸ்வர்

சமீப காலமாக முகநூலில் ஸெளராஷ்ட்ர லிபி பற்றி ஒரு சிலர் பிரச்னையில் ஈடுப்பட்டுவருகின்றனர். எனக்குத் தெரிந்து 1975 முதல் இந்த பிரச்னை ஓய்ந்தபாடில்லை. இந்த பிரச்னையால் நம் மொழிக்குக் கிடைத்த லாபம் என்ன என்று யாராவது சொல்லமுடியுமா? கடந்த 40 ஆண்டு காலத்தில் மாற்றுக்கருத்து கொண்ட மொழி ஆர்வலர்கள் தேவநாகரி லிபியில் எத்தனை புத்தகங்கள் வெளியிட்டுள்ளனர்? மொழி பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் எழுத்துப்பற்றி பேச வேண்டும் என்றால் அதற்கு போதிய மொழியியல் அறிவு வேண்டும். மொதிரெத்து மாதஇதழில் அதன் ஆசிரியர் குறிப்பிட்டப்படி பத்து பொழுதுப்போக்கு ஆசாமிகள் கூடி முடிவெடுக்கக்கூடிய விஷயமல்ல. இது முற்றிலும் அறிவாளிகள் சம்பந்தப்பட்ட விஷயம். 

ஒரு மொழிக்கு வரி வடிவம் உருவாக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. அது விஞ்ஞான ரீதியாக அந்த மொழிப் பேசுவோரின் உச்சரிக்கும் தன்மைக்கேற்ப அனைத்து வார்த்தைகளுக்கும் சரியான முறையில் எழுத்துக்களை அமைக்கவேண்டும். அத்துடன் அவைகளை அச்சில் ஏற்றி அச்சிடும் தன்மையில் நிலைநிறுத்த வேண்டும். பல மொழிகளை அறிந்திருக்க வேண்டும். மொழியியல் அறிவும் வேண்டும். இத்தகு தன்மையுடன் தனது வாழ்நாளில் தன் சொத்துக்களை எல்லாம் நமது மொழிக்காகவே செலவழித்து பாடுபட்ட மேதாவி இராமராயின் அரிய பணியை நாம் உதாசீனப்படுத்துவதுடன் அவமரியாதையும் செய்து வருவது மிகவும் வேதனைக்குரியதாகும். அவருடைய கடின உழைப்பு தான் ஸெளராஷ்ட்ர லிபி என்று சொல்லப்படுகிற எழுத்துக்கள். அப்போதே சில விஷமிகளால் அவர் அச்சிட்டு வெளியிட்டப் புத்தகங்கள் அச்சு எழுத்துக்கள் என்று யாவையும் அழித்து விட்டனர். இதனால் நமது மொழிக்குத்தான் நஷ்டம். இன்றுவரை நமது மொழியில் உள்ள இலக்கியங்கள் என்று பட்டியலிட்டுக் காட்டத்தான் முடிகிறதே தவிர அவைகளை கண்ணால் காணக்கூடிய பாக்கியம் பலருக்கும் கிட்டவில்லை.

நம்முடைய மொழியின்பால் ஆர்வமும் அக்கறையும் கொண்ட சிலர் மொழியை வளர்க்கிறேன் என்று சொல்லி தேவநாகரி எழுத்தினை நம் மொழிக்குரிய எழுத்து என்று தேவையற்ற பிரச்னைகளை இழுத்துவிட்டு மொழி வளர்ச்சிக்கு முழுக்க முழுக்க தடையாக இருப்பதும் இவர்களே. உங்களுக்கு லிபி ஒரு பிரச்னையாக இருந்தால் முதலில் அனைவருக்கும் தெரிந்த லிபியில் இலக்கியங்களை படைக்க வாருங்கள். நம் மொழிக்கு இலக்கிய வளர்ச்சி என்பது மிகவும் குறைவு. நமது முன்னோர்கள் படைத்திருக்கும் சாகித்யங்கள் பல. ஆனால் கையில்; கிடைத்து அச்சில் ஏறியவை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இன்னும் இருந்து வருகிறது. ஸெளராஷ்ட்ர மொழியி;ல் இலக்கியங்கள் ஏராளமாக உள்ளன என்ற நிலைக்கு வரும்போது லிபி பற்றி தீர்க்கமாக சிந்திக்கலாம். 

அப்போதும்கூட நம்முடைய மொழியின் உச்சரிக்கும் தன்மைக்கேற்ற லிபி மேதாவி இராமராய் அவர்களால் சீர்படுத்தப்பட்ட லிபிதான் உகந்ததாக இருக்கும். தமிழ் எழுத்தை இப்போது யாரும் வீரமாமுனிவர் எழுத்து என்று கூறுவதில்லையே. நம் இனத்தவர்க்கு மட்டும் ஏன் நம் முன்னோர்களை மதித்து கௌரவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து உருவாகிறது? எல்லாம் இந்த பாழாய் போன பணத்தாலேதான். யாரோ அள்ளிக்கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் நமக்குள்ளே கருத்துவேறுபாட்டை உருவாக்கி தொடர்ந்து மொழி இலக்கிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர். இதனால் நம் மொழிக்கு என்ன லாபம் என்று சிந்தித்துப் பார்த்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதை தவிர்த்துவிடுவது ஒன்றே ஸெளராஷ்ட்ர இலக்கியப் பணிக்கு செய்யும் மகத்தான சேவையாக கொள்ளலாம்.

உண்மையான மொழியார்வம் படைத்தவர்கள் தமிழ் எழுத்தைப் பயன்படுத்தி தங்கள் படைப்புக்களையும் நமது முன்னோர்களின் இலக்கியங்களையும் அச்சிட்டு புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பின்வரும் சந்ததியினருக்குப் பயன்படும் என்று நம்பிதான் தங்கள் சொந்தப் பணத்தை செலவிட்டு திரும்ப கிடைக்காது என்ற மனப்பான்மையில் தான் இந்த சேவையை செய்து வருகிறார்கள். 

எழுத்து என்பது பிரச்னையல்ல. அச்சிடும் வசதிகள் இல்லை என்ற காலக்கட்டத்தில் வேண்டுமானால் எழுத்து ஒரு தடையாக இருந்திருக்கலாம். ஆனால் நிலைமை தற்போது அப்படி இல்லை. கணினி தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இந்த சூழ்நிலையில் நமது ஸெளராஷ்ட்ர எழுத்தினை கணினியில் டைப் செய்ய இளைஞர்கள் முன்வந்தாலே போதும். அடுத்த எழுத்தை சுவீகாரம் செய்து கொள்ளவேண்டிய அவசியமே இருக்காது. இப்போது நம் இலக்கிய வளர்ச்சி நம் கண்முன்னே இருக்கிறது. பயன்படுத்திக் கொள்ள தெரிந்தால் போதும் என்பதே என் கருத்து. உடன் வாருங்கள் ஒத்துழைப்புத் தாருங்கள். சாதனைகள் புரிந்துக் காட்டுவோம்!

 

User Comments
O.S.Subramanian
First the supporters of Devanagari Script should publish a list of Sourashtra language books printed using Devanagari Script right from the year 1920. Then they should also publish the list of persons who are engaged in the development of Sourashtra language using Devanagari Script. They should publish the memoranda submitted to the Commissioner of Linguisting Minorities regarding the introduction of Sourashtra language in Schools. Will they do all?
Krish Pathy, Bangalore
amre samuuham phiri phiri 1920, 1981, 2009 vousunum asaki amre samuuham mhaTTaanuk aski cherchili Devanagari lipi aski kaamunuk upayOg kerno, Rama Rai lipi-k ghenam keri kapaDi thevluno meni tiirmaan kerriyaas. tisaniis Rama Rai lipi dhavraanum likki thevi, sri Rama Rainu vigraham meLLi theviraas. tengo holle askitengo maryaada sEtte. attaa dinnum amre pillal poLTamunum kOn lipi sikkilyet sommar avattak hEtukan rhaai meni yOchan keriis Devanagari meni tiirmaan kerraatte. tye lipi sikkaDattak amre samuuham Sourashtra Madhya Sabha Govt.-uk likki yErpaaD kerattak paye sEste kerlEt sE. tengo ami askin aadarav diikin senam poLTamunum amre bhaaShe sikkaDattak hEtu kerno. oNTe sO vorsu vivaad kerriyaas, angun kerlEt rhavaay. hoyet pillaluk sikkaDatte attenguD dobbi javaDan hOnaa.
Ravindranath Konda
திரு சூர்யா ஞானேஸ்வர் அவர்களே .... எனக்கு நம் சௌராஷ்டிரா மொழியை தமிழ, ஆங்கிலம், சௌராஷ்டிரா தேவநாகரி லிபி, மற்றும் ராமாரை லிபி ஆகிய எல்லா லிபிகளிலும் எழுதத்தெரியும். ஏற்கனவே எல்லா முகநூல்களிலும் எல்லா லிபியிலும் எழுதியும் பதிவும் செய்து உள்ளேன் . நம் மொழியில் சாகிதியம் எழுதவேண்டும் என்றால் தகுந்த உச்சரிப்பு கொடுக்கக்கூடிய எழுத்து தேவை. அதனால் தேவநாகரி எழுத்திலோ அல்லது ரமாராய் லிபியிலோ தான் எழுதவேண்டும். நம் சௌராஷ்டிரா மொழியை சௌராஷ்டிரா தேவநாகரி லிபியில் எழுதினால் ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதம் படிக்க தெரிந்தவர்கள் சுலபமாக படித்து விடுவார்கள். நம் சௌராஷ்டிரா சமூகத்தில் ஹிந்தி மற்றும் சம்ச்கிருதம் படிக்கத் தெரிந்தவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ரமாராய் லிபியை படிக்கத்தெரிந்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? நம் மக்கள் படிக்கத்தெரியாத லிபியில் எழுதி என்ன பயன்? என் பொன்னான நேரத்தை மக்கள் படிக்கத்தெரியாத லிபியில் எழுதி வீணாக்க விரும்பவில்லை. நம் சௌராஷ்டிரா சாஹித்திய வளர்ச்சிக்கு லிபி ஒரு தடை இல்லை என்றால், நான் நம் சௌராஷ்டிரா மொழியில் சௌராஷ்டிரா தேவநாகரி லிபியில் எழுதும் சாஹித்தியங்களை தாங்கள் வெளியிடும் பத்திரிக்கையில் வெளியிடலாமே.
குடுவா சுந்தரம்ஜெ
சௌ.மத்ய ஸபாவின் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு நாகரி லிபியை பள்ளிகளில் கற்பிக்க தேவையான முயற்ச்சிகளை ஸபாவும், மொழி அறிஞர்களும் துரிதபடுத்தவேண்டும்.நம் மாணவர்களில் பெரும்பாலோர் ஸி.பி.எஸ்.ஸி பள்ளிகளில் ஹிந்தி,ஸம்ஸ்கிருதம் படிப்பதால் அவர்கள் எளிதில் சௌராஸ்ட்ர நாகரி லிபியில் நம் மொழியை உபயோகிப்பார்கள். மேலும் பல மாணவர்கள் வேலை வாய்ப்பு போன்ற காரணங்களால் ஹிந்தியை தனியார் நிறுவனங்களில் பயில்கிறார்கள். அவர்களாலும் நாகரி லிபியில் நம் மொழியை உபயோகிக்க முடியும்.ஸ்டேட் போர்ட் மாணவர்களுக்கு மட்டும் பள்ளியில் நாகரி லிபி மூலம் நம் மொழியை கற்பித்தால் போதும். பல நல்ல இலக்கியங்களை நாகரி லிபியில் நம் மொழியில் உருவாக்க முடியும். உணர்ச்சிகரமாய் சிந்திக்காமல் நடைமுறை எளிமை எது என்று சிந்தித்தால் நாகரி லிபியே மிக அதிகமானவர்கள் பயனடைய வாய்ப்பு உள்ளது. நமது சகோதர மொழியான மராத்திமொழிக்கும் பழைய லிபி இருந்தது. அவர்கள் நாகரி லிபிக்கு மாறி தங்கள் மொழி இலக்கியத்தை வளர்த்து பல ஞானபீட விருதுகளையும் ஸாஹித்ய அகடாமி விருதுகளையும் தமதாக்கியுள்ளனர். உலகளவில் பார்த்தாலும் பல நாடுகள் தங்கள் மொழியிலுள்ள பழைய லிபியை மாற்றி நடைமுறையில் உள்ள லிபியில் பயின்று முன்னேறியுள்ளன.துரிக்கி நாட்டில் பல நூற்றாண்டு வழக்கில் இருந்த, வலதில் இருந்து இடப்பக்கமாக எழுதும் பெர்ஸியன்/அரபு லிபியை கமால் பாட்சா என்ற அன்னாட்டின் அதிபர், கல்வி அறிவு தம் அண்டை ஐரோப்பிய நாடுகளுடன் போட்டியிட்டு வளரவேண்டி, இடமிருந்து வலப்புரமாக எழுதும் ரோமன் லிபியை எல்லோரும் உபயோகிக்க கட்டளை இட்டார். துருக்கி இன்று மற்ற இஸ்லாமிய நாடுகளைப்போல் இல்லாமல் கல்வி பொருளாதரத்தில் சிறந்து விளங்குகிறது. நாமும் நம் மொழியை மாணவர்களுக்கு நாகரி லிபியில் பயிற்றுவித்து மொழி வளர்ப்போம்.
Information
Name
Comments
 
Verification Code
3 + 5 =