Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Thirunthia mozhi

 

ஸெளராஷ்ட்ர மொழி ஒரு திருந்திய மொழியே!
எஸ்.டி. ஞானேஸ்வரன்
1977ஆம் ஆண்டில் மொதிரெத்து பங்குனி உற்சவ மலரில் வெளியானது இக்கட்டுரை. இன்றைய தலைமுறையினரும் நம் மொழி பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கலாம் என்பதற்காகவே இதனை மறுபிரசுரம் செய்துள்ளேன். இக்கட்டுரை எழுதியதற்குப்;பின் கே. ஆர். சேதுராமன் எழுதிய சௌராஷ்ட்ரர் - முழு வரலாறு வேங்கடஸ{ரி ராமாயணம் ராமாராயின் வசன ராமாயணம் எஸ். எஸ். ராம் எழுதிய திருக்குறள் மொழிப்பெயர்ப்பு நூல் உறையூர் ரெங்கநாதன் எழுதிய சௌராஷ்ட்ரர் வரலாறு போன்று இன்னும் பல நூல்கள் இன்றளவில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.-ஆசிரியர்.
மொழிகளின் தோற்றம் (பொது):
மக்கள் அனைவரும் பிரிந்து வாழ தலைப்பட்டபோது பேசும் ஆற்றலைப் பெற்று விட்டனர். பல நாடுகளாகவும் பல்வகை இனங்களாகவும் பிரிந்து வாழ்ந்தனர். இதனால் மக்கள் மொழியென தனியாக ஒருமொழி உருவாகாமல் பல்வேறு மொழிகள் பல்வேறு இனத்தவர்களுக்கேற்ப தோன்றியது. 
இந்தியாவில் தோன்றிய பலவேறு மொழிகளில் ஸெளராஷ்ட்ர மொழியும் ஒன்றாகும். இம்மொழி பேசுவோர் ஸெளராஷ்ட்ர தேசத்தில் வாழ்ந்தவர்கள். எனவே அங்கு பேசப்பட்ட மொழி ஸெளராஷ்ட்ர மொழி என்றும் ஊரின் பெயரை முன்னிடுகையாகக் கொண்டு ஸெளராஷ்ட்ர மொழி என்றும் வழங்கியிருக்கலாம் என்று கருத இடமுள்ளது. 
தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மொழி தமிழ்மொழி எனவும் சிங்கள நாட்டைச் சேர்ந்தவர் மொழி சிங்கள மொழி எனவும் கூறுவது போல ஸெளராஷ்ட்ர மொழிக்கும் இந்த பெயர் வந்திருக்கலாம். 
ஸெளராஷ்ட்ரம் - பெயர்க்காரணம்:
ஸெளராஷ்ட்ரர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஸெளராஷ்ட்ரர் என்பதற்கு சூரியனை வழிபடுவோர் எனவும் கூறுகின்றனர். ஸெளராஷ்ட்ரர்களின் முன்னோர்கள் கத்தியவார் என்று சொல்லப்படும் ஸெளராஷ்ட்ர நாட்டைச் சேர்ந்தவர்களானதால் ஸெளராஷ்ட்ரர் எனப்படுகிறார்கள் என்று கூறுதல் பொருந்தும். அங்கு அவர்கள் செய்துவந்த தொழில் பட்டுநூல் நெசவாகும். இவர்களில் ஒரு பகுதியினர் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் குமாரகுப்தன் என்ற குப்தமன்னன் விருப்பப்படி மேற்கு மாளவ நாட்டிலுள்ள மந்தசோர் என்ற நகரத்தில் குடியேறினர். இதுபற்றி அந்த நகரத்தில் உள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றனவாம். அந்த கல்வெட்டில் ஸெளராஷ்ட்ரர்களை பட்டவாயகர் என்று குறிக்கப்பட்டுள்ளது. இதன் நேரான தமிழ் மொழிப்பெயர்ப்பு பட்டுநூல்காரர் என்பதாகும் என்று அ. கி. பரந்தாமனார் அவர்கள் தமது மதுரை நாயக்கர் வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். 
நூறு தேசத்தவர்கள் ஒன்றுகூடி வாழ்ந்த இடத்தை ஸெளராஷ்ட்ரம் என்றும் அவர்களே ஸெளராஷ்ட்ரர் என்றும் கொள்ள இடமுண்டு. ஸெள என்பதற்கு வடமொழியில் நூறு என்று பொருள். ராஷ்ட்ரம் என்பது நாட்டைக் குறிக்கும் சொல். எனவே இப்படியும் கருத்துக் கொள்ள இடமுண்டு. 
ஸெளராஷ்ட்ர மொழியின் தனி வரிவடிவம்:
தனித்தனியே பிரிந்த மொழிகளில் பல இன்றுவரை தனி வரி வடிவமின்றியே இயங்கி வருவதைக் காணலாம். ஆனால் இத்தகைய நிலை ஸெளராஷ்ட்ர மொழிக்கு இல்லை. அது தனக்கென தனி வரிவடிவம் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
ஸெளராஷ்ட்ரர்களின் மொழி ஸெளராஷ்ட்ரம். இதற்கு தனியே எழுத்துக்கள் உண்டு. இம்மொழியில் சமய இலக்கியங்கள் சிறிய அளவில் இருக்கின்றன என்று அ. கி. பரந்தாமனார் குறிப்பிடுகிறார்.
ஸெளராஷ்ட்ரர்கள் நாயக்கர்கள் காலத்தில் குடியேறியவர்கள். அப்போதே அவர்களுக்கு எழுத்து உண்டு என்ற விபரம் தெரியவருகிறது. தமிழ்நாட்டில் ஸெளராஷ்ட்ரர்கள் குடியேறிய காலம் ஏறத்தாழ கி.பி. 1400 முதல் 1450 வரை என்று கூறலாம்.
திருந்திய மொழி – வரையறை:
மேற்கூறியபடி தனியே பிரிந்த மொழிகள் தனி வரி வடிவம் பெற்று அம்மொழியின் சிறப்பை பறையறைத்துக் காட்டவல்ல சீரிய இலக்கிய வளமும் இலக்கணமும் இருப்பின் அம்மொழி திருந்திய மொழி என்று டாக்டர் கால்டுவெல் என்னும் மொழியியல் வல்லுனர் குறிப்பிடுகிறார்.
திராவிட மொழிகளை ஆய்ந்த இவர் திராவிட மொழிகளை திருந்தியவை-திருந்தாதவை என இரண்டாக பகுத்து தமது ஆய்வினை மேற்கொள்கிறார். இவரது காலம் 1814-91. இவர் ஆய்ந்த திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு 1856. தமிழ்ää தெலுங்குää கன்னடம்ää மலையாளம்ää துளுää குடகு என்னும் ஆறு மொழிகளும் திருந்திய திராவிட மொழிகள் என்று கூறுகிறார்.  
துளு மொழிக்கு தனியே வரி வடிவமில்லை. இலக்கியமுமில்லை. பின் எவ்வாறு திருந்திய மொழியில் கால்டுவெல் இணைத்தார் என்று ஐயம் ஏற்படலாம். துளு மொழி பேசுவோர் நாகரீகம் மிக்கவர்களாக காணப்படுவதால் இதனை திருந்திய மொழியாக சேர்த்ததாகக் கூறுகிறார். இம்மொழி பேசுவோர் தொகை 500ää000க்கும் மேற்பட்டதாகும். டாக்டர். பிரிகேல் என்பவர் இதற்கு இலக்கணம் செய்துள்ளார்.
இதேபோல் ஸெளராஷ்ட்ர மொழியை எடுத்துக் கொண்டோமேயானால் அது தனக்கென தனி வரி வடிவம் பெற்றுள்ளது. இலக்கணமும் உள்ளது. சிறந்த இலக்கிய வளமும் உள்ளது. எனவே ஸெளராஷ்ட்ர மொழியும் ஒரு திருந்திய மொழியே என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்லலாம். இதன் வரிவடிவம் இம்மொழி உச்சரிப்போரின் தன்மைக்கேற்ப விஞ்ஞான ரீதியில் அமைந்துள்ளதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹெச். என். ராண்டேல் என்பவர் குறிப்பிடுகிறார். 
தனக்கே உரிய தனி வரிவடிவம்:
வட்ட எழுத்தாக இருந்த தமிழ் எழுத்தை அச்சு எழுத்தாக (வுலிநள) கொண்டுவர இத்தாலி நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் வீ;ரமாமுனிவர் சற்றே திருத்தியமைத்ததாக கூறுவதுபோல ஸெளராஷ்ட்ர மொழிக்கும் எழுத்தின் கடுமைக் கருதியும் அச்சுவடிவாக்கும் எளிமைக் கருதியும் பேராசிரியர் தொ.மு. இராமாராய் என்பவரும் சற்றே திருத்தியமைத்தார் என்பது உண்மை. ஆனால் வேற்றுமொழி எழுத்தினை அவர் கையாளவில்லை என்பது குறிக்கத்தக்கதாகும். டாக்;டர். கால்டுவெல் அவர்களும் பேராசிரியர் தொ.மு. இராமாராய் அவர்களும் சமகாலத்தவரே. இராமாராய் அவர்களின் காலம் 1852-1913. கால்டுவெல் அவர்களின் காலம் 1814-1891.
ஸெளராஷ்ட்ர இலக்கணம்:
ஸெளராஷ்ட்ர மொழி ஒரு திருந்திய மொழி என்பதற்குச் சான்றாக முதலில் தனி வரிவடிவம் உண்டு என்பதைக் கண்டோம். இப்போது அதற்கு இலக்கணமும் உண்டு என்பதைக் காண்போம். பேராசிரியர் தொ.மு. இராமாராய் அவர்கள் முதன் முதலில் எழுதியதாக கூறப்படும் தற்போது நம் கைவசம் உள்ளதுமான ஸெளராஷ்ட்ர வியாகரணு என்னும் இலக்கண நூலே. 
இலக்கியங்கள் அன்றும் - இன்றும்:
ஸெளராஷ்ட்ர மொழிக்கு இலக்கணம் உண்டு என்பதை அறிந்தோம். இனி அதன் இலக்கியங்களைப் பற்றி ஆய்வோம். 
கவி. வேங்கடஸ{ரி சுவாமிகள் எழுதிய ஸெளராஷ்ட்ர ஸங்கீத ராமாயணு என்னும் தலைசிறந்த இராமகாவியம் ஒன்றுள்ளது. இதில் ஆறு காண்டங்கள் உள்ளன. இதன் ஒவ்வொரு பாடலும் தேனைப்போன்று இனிமையான இசைப்பாடல்களே. இதன் கண்ணுள்ள உவமை நயமும் சொல்லாற்றலும் சிறந்தவை. உயிர்த்துடிப்பான காவியம் என்று கற்றோரால் போற்றப்படும் ஓர் அற்புத காவியமாகும். மேலும் இவர் நௌகா சரிதம் என்ற சமஸ்கிருத காவியத்தையும் ஸாலக்கிராம மகிமை முதலான மராட்டிய மொழி ஸாஹித்யங்களையும் அருளியுள்ளார். இவரது காலம் கி.பி. 1817-89 ஆகும். 
அடுத்துää குருக்கு. சுப்பார்யர். சீதாராமாஞ்சநேயம்ää லவகுச சரிதம்ää கார்த்தீக புராணம் ஆகியவை இவரது படைப்புகள். அனுபவ பஞ்சரத்தினம் என்பது இவரது படைப்புகளில் சிறந்தது. இதில் இம்மகான் தாம் உணர்ந்த அனுபவங்களை ஸெளராஷ்ட்ர மொழியில் தௌ;ளத்தெளிவாக காட்டியுள்ளார். இவரது காலம் 1814-74 ஆகும். 
புட்டா. அழகார்யர் என்னும் இவர் விஷ்ணு புராணம்ää நரஸிம்ம ஸதகுää ஆஸெளஸவிதிää ஸெளராஷ்ட்ர வியாகரணுää பக்தி மார்க்க கீர்த்தானனுää ஸிங்காரவர்ணா ரோஹண கீர்த்தனான்ää பஞ்சல் சரித்ரு போன்ற காவியங்களைப் படைத்தருளியுள்ளார். இவற்றுள் பஞ்சல் சரித்ரு என்பது நௌகா சரித்திரத்தின் சார்பு நூல் என்று சொல்லப்படுகிறது. ஸ்ரீதியாகராஜ சுவாமிகளால் தெலுங்கில் இசை நாடகமாக இயற்றப்பட்டது முதல்நூல். கவி. வேங்கடஸ{ரி இதனை ஸ்லோகக் காவியமாக சமஸ்கிருதத்தில் இயற்றியுள்ளார். எனவே இது வழி நூல். இவற்றைச் சார்ந்து தியாகைய்யரின் பாணியிலேயே ராக தாளங்களுடன் பத்ய கீர்த்தனைகளுடன் நேர் ஸெளராஷ்ட்ர மொழியாக்கத்துடன் அழகார்யர் பஞ்சல் சரித்ரு என்னும் தலைப்பில் இயற்றியதால் இது சார்புநூலாகும். இவரது காலம் 1832-1906 ஆகும்.
ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் கண்ணனைக் கலந்து நாயகி பாவத்துடன் பாடிய ஒவ்வொரு பாடலும் அதன் இசையும் கருத்தாழமும் அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மையது. இவர் ஸெளராஷ்;ட்ர மொழியிலும் தமிழ் மொழியிலும் பாடியுள்ளார். இவருடைய பாடல்களில் சமுதாயச் சிந்தனையுடன் ஆன்மீகச் சிந்தனையே மேலோங்கியுள்ளது. ஆழ்வார் பாசுரங்களும் மிளர்கின்றன. ஓவ்வொரு பாடலிலும் இலக்கிய வளமும் தத்துவமும் வைஷ்ணவ நெறியும் கூறப்படுகிறது. இவரை ஆழ்வார்களுள் ஒருவராகவே கருதுகிறார்கள். தமிழ் இலக்கிய உலகில் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் எவ்வளவு சிறப்புடையுடையதோ அதே போன்று ஸெளராஷ்ட்ர இலக்கிய உலகில் இவரது பாடல்கள் சிறப்புடையது. நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாடலோடு ஒப்புநோக்கும் திறன் இவரது பாடலில் உண்டு. இவரது காலம் 1843-1914.
மேதாவி என்று அன்புடன் அழைக்கப்படும் தொ. மு. இராமாராய் அவர்கள் தாய்மொழிப் பற்றுடையவர். இவர் ஒரு பன்மொழி புலவர். தாய்மொழிக்காகவே தமது செல்வம் முழுமையும் தியாகம் செய்தவர். இன்று ஸெளராஷ்ட்ர இலக்கிய உலகில் அதிகமான இலக்கியங்களை படைத்த சிறப்பு இவரையே சாரும். இவருடைய படைப்புகளில் மிகச் சிறந்தது ஸெளராஷ்ட்ர நீதி ஸம்பு என்னும் நீதி நூலாகும். இந்நூல் திருக்குறளைப் போன்றது. இதன் சிறப்பை உணர்ந்த டாக்டர் ஹெச். என். ராண்டேல் தமது கைப்பட ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். இம்மொழிப்பெயர்ப்பு ஸாஹித்ய அகாடமியினரால் விரைவில் பிரசுரம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நந்தி நிகண்டு என்னும் ஸெளராஷ்ட்ர அகராதி. 
ஸெளராஷ்ட்ர மொழி சொற்களுக்குரிய பொருளை தமிழ்ää தெலுங்குää இந்தி ஆகிய மொழிகளில் திரட்டிய சதுர்பாஷா வல்லரி என்னும் மற்றொரு அரிய பொக்கிஷம். மேலும் வசன நடையில் எழுதிய வசன ராமாயணம். சதுர்வேத ஸந்தியா வந்தனம்ää ஸெளராஷ்ட்ர ஜன மனோரஞ்ஜனிää ஸெளராஷ்ட்ர சரித்ரோää ப10கோள விவரணொää ஹிந்து தேஸி லகுசரித்ரோää லகு ஸங்க்யாவளிää லகு வியாகரணுää பஞ்ச ரத்னம்ää தாது ரூபாவளிää பால ராமாயணுää க்ளு கிரியாவல்லரிää ஸ்ரீபாகவதோää ஸ்ரீபாரதோää துலாகாவேரி மஹிமொää ஷந்தஸ{ää அலம்பரோ முதலான நூல்களை எழுதிய இவர் ஸெளராஷ்ட்ர மொழியின் மீது கொண்ட அளவற்றக் காதலால் ஸெளராஷ்ட்ரர் மட்டுமின்றி ஸெளராஷ்ட்ரர் அல்லாதோரும் இம்மொழியினைக் கற்றுக்கொள்ளும் விதத்தில் பாடப்புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். ஸெளராஷ்ட்ர போதனொ என்னும் நூல் 1880ல் வெளியிடப்பட்டுள்ளது. ஸெளராஷ்ட்ர பிரைமர்ää ஸெளராஷ்ட்ர முதல் பாடம்ää இரண்டாம் பாடம்ää ஸெளராஷ்ட்ர போதினி போன்ற நூல்களும் இவரால் வெளியிடப்பட்டுள்ளது.
இத்துணை இலக்கியங்களைப் பெற்ற ஸெளராஷ்ட்ர மொழி ஓர் உரையாசிரியரையும் ஈன்று கொடுத்த சால்புடையது. 1891ஆம் ஆண்டு அவதரித்த மகாபுருஷர்ää பன்மொழிப்புலவர்ää ஸங்கீத ஸிரோன்மணி வந்தவாசி குப்புசாமி பாகவதர் ஆவார். இவர் கவி வேங்கடஸ{ரி படைத்த ஸங்கீத இராமாயணத்திற்கு உரை எழுதியவர். மற்றும் பேராசிரியர் தொ.மு. ராமாராய் எழுதிய பால ராமாயணத்திற்கும் உரை எழுதியுள்ளார். ஸெளராஷ்ட்ர மொழி இலக்கியங்களுக்கு உரை எழுதியவர் என்ற வரிசையில் முன்னணியில் உள்ளவர் இவரே.
தமிழ் தாத்தா என்று செல்லமாக அழைக்கப்படும் உ.வே. சாமிநாதய்யரின் பணி போற்றத்தக்கது. அவருடைய தன்னலமற்ற முயற்சியின் பலனே இன்றைய தினம் தமிழ் இலக்கியங்கள் வனப்புடன் காட்சி தருகின்றன. இதேபோல் ஸெளராஷ்ட்ர மொழி இலக்கியங்கள் இன்று நம்மிடையே தவழ காரணமாக இருப்பவர் மதுரையைச் சேர்ந்த கு.வே. பத்மநாபய்யர் அவர்கள். இவரது காலம் 1894-1973.
இவர் தமது காலத்தில் ஸ்ரீஸ{கந்த தூபதீர்த்தார்யர்ää சதுர்வேதி லெட்சுமணாச்சாரியார்ää ஸ்ரீசீனிவாசாச்சாரிää கவி. வேங்கடஸ{ரிää சேலம் புட்டா அழகார்யர்ää மேதாவி இராமாராய் ஆகியோரின் படைப்புக்களை ஸெளராஷ்ட்ரம்ää தமிழ்ää தெலுங்குää ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளார். மேலும் பல இலக்கியங்கள் மதுரை ஸெளராஷ்ட்ர சபையிலும் மற்ற ஊர் சபைகளிலும் முக்கிய பிரமுகர்களிடமும் ஏட்டு வடிவமாகவும் கையெழுத்துப் பிரதிகளாகவும் உள்ளதாக உறுதிபடக் கூறுகிறார்கள். 
வேங்கடரமண பாகவதரின் இசைப்பணி போற்றுதற்குரியது. 
ஸ்ரீமத் பகவத் கீதையை தௌ;ளமுதனைய ஸெளராஷ்ட்ர மொழியில் மொழியாக்கம் செய்தää ஸெளராஷ்ட்ர பிராமண 9வது மகாநாட்டில் கீதாஷ்டவதானி என்னும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் தொ. ரா. பத்மநாபய்யர். இவர் அண்ணலின் உப்புச்சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கு பெற்று மூதறிஞர் இராஜாஜி தலைமையில் வேதாரண்யம் போந்து சிறை சென்றவர். 
தெய்வப்புலவராம் திருவள்ளுவப் பெருந்தகை இயற்றிய திருக்குறளினை இன்றைய நாளில் மொழிப்பெயர்க்காத மொழியே இல்லை எனலாம். அத்தகுச் சிறப்புடைய குறளினை மதுரை எஸ்.எஸ். ராம் என்பவர் ஸெளரஷ்ட்ர மொழியில் சிறிதும் கருத்தும் வார்த்தைகளும் மாறுபடாமல் மொழிப்பெயர்த்துள்ளார். 
ஸெளராஷ்ட்ர மொழி கவிஞர்கள் என்னும் வரிசையில் தற்போது திரளாக நிற்கின்றனர். இவர்கள் எழுதும் கவிதைகளில் மொழியார்வம் தூண்டும் சிறந்த கவிதைகளும் இலக்கிய நயமிக்க கவிதைகளும் சிந்தனையைத் தூண்டும் கவிதைகளும் உள்ளன. தற்பொழுது பல நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. புலவர் சி.இரா. சாரநாத் என்னும் தமிழாசிரியர் பை4கு….(தம்பிக்கு) என்னும் ஸெளராஷ்ட்ரரின் வரலாறு பற்றிய ஆய்வு நூலை எழுதியுள்ளார்.
மேலும் - மேதாவி இராமாராய் எழுதிய சதுர்பாஷா வல்லரி என்னும் அகராதி நூலானது ஸெளராஷ்ட்ர மொழி சொற்களுக்கு தமிழ்ää தெலுங்குää ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொருள் திரட்டப்பட்டுள்ளது என்பதைக் கண்டோம். ஆனால் புலவர் சி.இரா. சாரநாத் ஸெளராஷ்ட்ர மொழி சொற்களுக்கு ஸெளராஷ்ட்ர மொழியிலேயே அர்த்தங்கள் எழுதி ஸெளராஷ்ட்ர பாஷா வல்லரி என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.
பி.என். இராஜன் என்பவர் த4டொ (வாசல்) என்னும் ஒரு சிறு நீதி நூலை எழுதி அதனை ஸெளராஷ்ட்ர ஜோதி என்னும் பத்திரிகையில் தொடராக வெளியிட்டார்.
உரையாசிரியர்களும் திறனாய்வாளர்களும்:
வந்தவாசி குப்புசாமி பாகவதர்க்குப்பின் உரையாசிரியர்கள் தற்பொழுது தோன்றியுள்ளார்கள். தற்பொழுது உரையாசிரியர்களின் தொண்டினை உடனடியாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற காரணத்தால் வழக்கறிஞர் ஆர். ஏ. மோகன்ராம் உரை எழுதும் கவி. வேங்கடஸ{ரியின் இராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாஷாபிமானி என்னும் பத்திரிகையி;ல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதை இங்கு குறிப்பிடுகிறேன். 
மேலும் - திறனாய்வு என்னும் முறையில் எழுதுவோர் அதிகமாக உள்ளனர். புலவர் சி.இரா.சாரநாத் ஸெளராஷ்ட்ர இலக்கியங்கள் அனைத்தும் (அதாவது அச்சில் உள்ள நூல்கள்) கற்றவர். இவர் ஆய்ந்தெழுதிய காவிய தரிசனம் ஸெளராஷ்ட்ர ஜோதியில் வெளிவந்தது. இதில் கவி வேங்கடஸ{ரி இராமாயணத்தை கம்ப ராமாயணத்தோடும் துளசி ராமாயணத்தோடும் ஒப்பிட்டு எழுதியுள்ளார். இதில் ஸெளராஷ்ட்ர ஸங்கீத ராமாணத்தின் சிறப்பு மிளிர்கிறது.
அடுத்து கே.ஆர். கிருஷ்ணமாச்சாரி என்பவர் ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் பாடல்களுக்குரிய பொருளை சிறப்பான முறையில் ஆய்ந்து சௌராஷ்ட்ர மணி என்னும் பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வந்தார். 
ஸெளராஷ்ட்ர நீதி ஸம்புவை ஆய்ந்து மொதிரெத்து ஆண்டு மலரில் என்னால் சிறப்பான முறையில் எழுதப்பட்டு பலராலும் பாராட்டுதல் பெற்றுள்ளேன். விரைவில் நீதி ஸம்பு முழுமைக்கும் உரை எழுதி முழு நூலாக வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரசங்கம் என்னும் முறையில் சில திறனாய்வாளர்கள் உள்ளனர். சிவானந்த விஜயலட்சுமி என்பவர் நாயகி சுவாமிகளின் வரலாற்றினையும் பாடல்களின் சிறப்பனையையும் அழகுற உபந்நியாசம் செய்து வருகிறார். மேலும் இவர் கண்ணனை கலந்த காதலர் என்ற நூலையும் எழுதியுள்ளார். இது தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இவர் ஸெளராஷ்ட்ரர் அல்லாதவராக இருந்தபோதிலும் இவரது பணி ஸெளராஷ்ட்ரர்களால் பெரிதும் போற்றப்படவேண்டிய ஒன்றாகும்.
மேலும் - மதுரைக் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் தா.கு. சுப்பிரமணியன் நாயகி சுவாமிகள் பற்றியும் அவரது பாடல்களில் பொதிந்துள்ள சமயக் கருத்துக்கள் தத்துவக்கருத்துக்கள் போன்றவற்றை எடுத்து விரிவான முறையில் விரிவுரையாற்றி வருகிறார். கவிஞர் அறிவுக்கன்பன் என்பவரும் இப்பணியில் தம்மை ஈடுப்படுத்தி கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
முடிவு:
இத்தகு சிறப்பினை கொண்டுள்ள ஸெளராஷ்ட்ர மொழி அமைதியுடன் காட்சியளிப்பது வியப்பை தரலாம். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தனி வரி வடிவத்துடன் இலக்கிய வளமும் கொண்டு விளங்கிய இம்மொழிப் பேசுவோர் இடம்விட்டு இடம் வந்து வாழ்ந்தமையாலும் தமது மொழி இலக்கியம் போன்றவற்றை மறந்து வாழ்க்கைப் பிரச்னையிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தமையாலும் ஸெளராஷ்ட்ர மொழி மேன்மை பெற வாய்ப்பு குறைந்து காணப்பட்டது. ஆனால் 17ஆம் நூற்றாண்டு முதல் சற்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட்டு மொழியில் புலமைப்பெற்றவர்கள் பற்பல படைப்புகளை செய்து சீர்படுத்தி சிறப்புறச் செய்தனர். அவர்களுடைய காலம் முதல்தான் மொழியுணர்வு மேலோங்கியது எனலாம். ஏனென்றால் அதற்கு முன்னர் படைக்கப்பட்ட இலக்கியங்கள் எதுவும் நம் கைக்கு கிட்டவில்;லை. 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் படைக்கப்பட்ட இலக்கிய இலக்கணங்களே கிடைத்துள்ளன.
ஸெளராஷ்ட்ர மொழிக்கென தனி வரி வடிவம் எந்த காலம் முதல் இருந்து வருகிறது என்பதை இரு வரையிலும் யாராலும் அறிய இயலவில்லை. இக்கருத்தினை 1953ஆம் ஆண்டில் லண்டன் மாநகரில் நடைபெற்ற ளுவயிடநள யுடிhயடிநவ நுஒhiடிவைழைn-ல் வெளியிட்ட வுhந யுடிhயடிநவ என்னும் புத்தகத்தில் கீழ்க்காணும் வாசகங்கள் காணப்படுகின்றன. 
“றுந உயn hயசனடல னழ அழசந hநசந வாயn அநவெழைn வாந ளுinhயடநளந  உhயசயஉவநச வாந ளஉசipவ ழக வாந ஆயடனiஎயைn ளைடயனௌ வாந ளலசழ-அயடனiஎயைn ளஉசipவ யடட ழக றாiஉh pசநளநவெ னளைவinஉவiஎந pசழடிடநஅள.”
எனவே – மேற்கூறிய பல காரணங்களால் டாக்டர் கால்டுவெல் கருத்துப்படி ஸெளராஷ்ட்ர மொழி ஒரு திருந்திய மொழியே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும்.
இக்கட்டுரை எழுத உதவியவை:
1. திராவிட மொழி ஒப்பியல் - டாக்டர். நா. செயராமன்
2. மதுரை நாயக்கர் வரலாறு – அ. கி. பரந்தாமனார்
3. கால்டுவெல் ஒப்பிலக்கணம் - டாக்டர் கால்டுவெல்
4. ஸெளராஷ்ட்ர ஸங்கீத ராமயணு – ஸெளராஷ்ட்ர இலக்கியப் பதிப்பக வெளியீடு
5. ஸெளராஷ்ட்ர கலாச்சார ஸ்தாபனம் முதலாண்டு மலர்
6. சௌராஷ்ட்ர மணி
7. ஸெளராஷ்ட்ர ஜோதி
8. மொதிரெத்து
9. பாஷாபிமானி
10. பை4கு …(தம்பிக்கு) – புலவர். சி. இ;ரா. சாரநாத்

ஸெளராஷ்ட்ர மொழி ஒரு திருந்திய மொழியே!

 

எஸ்.டி. ஞானேஸ்வரன்

 

1977ஆம் ஆண்டில் மொதிரெத்து பங்குனி உற்சவ மலரில் வெளியானது இக்கட்டுரை. இன்றைய தலைமுறையினரும் நம் மொழி பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கலாம் என்பதற்காகவே இதனை மறுபிரசுரம் செய்துள்ளேன். இக்கட்டுரை எழுதியதற்குப் பின் கே. ஆர். சேதுராமன் எழுதிய சௌராஷ்ட்ரர் - முழு வரலாறு வேங்கடசூரி ராமாயணம் ராமாராயின் வசன ராமாயணம் எஸ். எஸ். ராம் எழுதிய திருக்குறள் மொழிப்பெயர்ப்பு நூல் உறையூர் ரெங்கநாதன் எழுதிய சௌராஷ்ட்ரர் வரலாறு போன்று இன்னும் பல நூல்கள் இன்றளவில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.-ஆசிரியர்.

 

மொழிகளின் தோற்றம் (பொது):

 

மக்கள் அனைவரும் பிரிந்து வாழ தலைப்பட்டபோது பேசும் ஆற்றலைப் பெற்று விட்டனர். பல நாடுகளாகவும் பல்வகை இனங்களாகவும் பிரிந்து வாழ்ந்தனர். இதனால் மக்கள் மொழியென தனியாக ஒருமொழி உருவாகாமல் பல்வேறு மொழிகள் பல்வேறு இனத்தவர்களுக்கேற்ப தோன்றியது. 


இந்தியாவில் தோன்றிய பலவேறு மொழிகளில் ஸெளராஷ்ட்ர மொழியும் ஒன்றாகும். இம்மொழி பேசுவோர் ஸெளராஷ்ட்ர தேசத்தில் வாழ்ந்தவர்கள். எனவே அங்கு பேசப்பட்ட மொழி ஸெளராஷ்ட்ர மொழி என்றும் ஊரின் பெயரை முன்னிடுகையாகக் கொண்டு ஸெளராஷ்ட்ர மொழி என்றும் வழங்கியிருக்கலாம் என்று கருத இடமுள்ளது. 


தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மொழி தமிழ்மொழி எனவும் சிங்கள நாட்டைச் சேர்ந்தவர் மொழி சிங்கள மொழி எனவும் கூறுவது போல ஸெளராஷ்ட்ர மொழிக்கும் இந்த பெயர் வந்திருக்கலாம். 

 

ஸெளராஷ்ட்ரம் - பெயர்க்காரணம்:


ஸெளராஷ்ட்ரர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஸெளராஷ்ட்ரர் என்பதற்கு சூரியனை வழிபடுவோர் எனவும் கூறுகின்றனர். ஸெளராஷ்ட்ரர்களின் முன்னோர்கள் கத்தியவார் என்று சொல்லப்படும் ஸெளராஷ்ட்ர நாட்டைச் சேர்ந்தவர்களானதால் ஸெளராஷ்ட்ரர் எனப்படுகிறார்கள் என்று கூறுதல் பொருந்தும். அங்கு அவர்கள் செய்துவந்த தொழில் பட்டுநூல் நெசவாகும். இவர்களில் ஒரு பகுதியினர் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் குமாரகுப்தன் என்ற குப்தமன்னன் விருப்பப்படி மேற்கு மாளவ நாட்டிலுள்ள மந்தசோர் என்ற நகரத்தில் குடியேறினர். இதுபற்றி அந்த நகரத்தில் உள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றனவாம். அந்த கல்வெட்டில் ஸெளராஷ்ட்ரர்களை பட்டவாயகர் என்று குறிக்கப்பட்டுள்ளது. இதன் நேரான தமிழ் மொழிப்பெயர்ப்பு பட்டுநூல்காரர் என்பதாகும் என்று அ. கி. பரந்தாமனார் அவர்கள் தமது மதுரை நாயக்கர் வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். 


நூறு தேசத்தவர்கள் ஒன்றுகூடி வாழ்ந்த இடத்தை ஸெளராஷ்ட்ரம் என்றும் அவர்களே ஸெளராஷ்ட்ரர் என்றும் கொள்ள இடமுண்டு. ஸெள என்பதற்கு வடமொழியில் நூறு என்று பொருள். ராஷ்ட்ரம் என்பது நாட்டைக் குறிக்கும் சொல். எனவே இப்படியும் கருத்துக் கொள்ள இடமுண்டு. 


ஸெளராஷ்ட்ர மொழியின் தனி வரிவடிவம்:


தனித்தனியே பிரிந்த மொழிகளில் பல இன்றுவரை தனி வரி வடிவமின்றியே இயங்கி வருவதைக் காணலாம். ஆனால் இத்தகைய நிலை ஸெளராஷ்ட்ர மொழிக்கு இல்லை. அது தனக்கென தனி வரிவடிவம் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை.


ஸெளராஷ்ட்ரர்களின் மொழி ஸெளராஷ்ட்ரம். இதற்கு தனியே எழுத்துக்கள் உண்டு. இம்மொழியில் சமய இலக்கியங்கள் சிறிய அளவில் இருக்கின்றன என்று அ. கி. பரந்தாமனார் குறிப்பிடுகிறார்.


ஸெளராஷ்ட்ரர்கள் நாயக்கர்கள் காலத்தில் குடியேறியவர்கள். அப்போதே அவர்களுக்கு எழுத்து உண்டு என்ற விபரம் தெரியவருகிறது. தமிழ்நாட்டில் ஸெளராஷ்ட்ரர்கள் குடியேறிய காலம் ஏறத்தாழ கி.பி. 1400 முதல் 1450 வரை என்று கூறலாம்.


திருந்திய மொழி – வரையறை:


மேற்கூறியபடி தனியே பிரிந்த மொழிகள் தனி வரி வடிவம் பெற்று அம்மொழியின் சிறப்பை பறையறைத்துக் காட்டவல்ல சீரிய இலக்கிய வளமும் இலக்கணமும் இருப்பின் அம்மொழி திருந்திய மொழி என்று டாக்டர் கால்டுவெல் என்னும் மொழியியல் வல்லுனர் குறிப்பிடுகிறார்.


திராவிட மொழிகளை ஆய்ந்த இவர் திராவிட மொழிகளை திருந்தியவை-திருந்தாதவை என இரண்டாக பகுத்து தமது ஆய்வினை மேற்கொள்கிறார். இவரது காலம் 1814-91. இவர் ஆய்ந்த திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு 1856. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு என்னும் ஆறு மொழிகளும் திருந்திய திராவிட மொழிகள் என்று கூறுகிறார்.  


துளு மொழிக்கு தனியே வரி வடிவமில்லை. இலக்கியமுமில்லை. பின் எவ்வாறு திருந்திய மொழியில் கால்டுவெல் இணைத்தார் என்று ஐயம் ஏற்படலாம். துளு மொழி பேசுவோர் நாகரீகம் மிக்கவர்களாக காணப்படுவதால் இதனை திருந்திய மொழியாக சேர்த்ததாகக் கூறுகிறார். இம்மொழி பேசுவோர் தொகை 500,000க்கும் மேற்பட்டதாகும். டாக்டர். பிரிகேல் என்பவர் இதற்கு இலக்கணம் செய்துள்ளார்.


இதேபோல் ஸெளராஷ்ட்ர மொழியை எடுத்துக் கொண்டோமேயானால் அது தனக்கென தனி வரி வடிவம் பெற்றுள்ளது. இலக்கணமும் உள்ளது. சிறந்த இலக்கிய வளமும் உள்ளது. எனவே ஸெளராஷ்ட்ர மொழியும் ஒரு திருந்திய மொழியே என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்லலாம். இதன் வரிவடிவம் இம்மொழி உச்சரிப்போரின் தன்மைக்கேற்ப விஞ்ஞான ரீதியில் அமைந்துள்ளதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹெச். என். ராண்டேல் என்பவர் குறிப்பிடுகிறார். 


தனக்கே உரிய தனி வரிவடிவம்:


வட்ட எழுத்தாக இருந்த தமிழ் எழுத்தை அச்சு எழுத்தாக (Types) கொண்டுவர இத்தாலி நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் வீரமாமுனிவர் சற்றே திருத்தியமைத்ததாக கூறுவதுபோல ஸெளராஷ்ட்ர மொழிக்கும் எழுத்தின் கடுமைக் கருதியும் அச்சுவடிவாக்கும் எளிமைக் கருதியும் பேராசிரியர் தொ.மு. இராமாராய் என்பவரும் சற்றே திருத்தியமைத்தார் என்பது உண்மை. ஆ

User Comments
K.V.Pathy
'tirundiya mozhi'- atta sEtte aski bhaaSha vidwaannu oNTe cheri kako kaam kero hOnaa?
O.S.Subramanian.
“We can hardly do more here than mention the Sinhalese character the script of the Maldivian islands the syro-maldivian script all of which present distinctive problems.” elle kago quote kerriyomenatte kaLaarani. Sourashtra bhaaShaa kurchi, Dr.Davind Dringer, tenka The Alphabet book mu kaay likkiriyo menatte sangi rhano.
thrukkondasurendran
english 26 eluththunus,rusia,german,gamu angun jugu eroup gamunum eng elluththu kalliriyas,kogo avre basham kallovona
Information
Name
Comments
 
Verification Code
2 + 9 =