Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Purattasi Sirappu

ஜோதிடம் என்ற பகுதியை தொடங்க வேண்டும் என்றவுடன் எனது நினைவில் வந்தது நண்பர் விஜிகுமார்தான். மதுரை உபமன்யு கோத்திரம் ஜூட்டு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மகன்தான் விஜிகுமார். இவர் இளங்கலை பட்டபடிப்பு முடித்துவிட்டு ஆங்கிலமுறை மருந்துகளை சந்தைப் படுத்தும் தொழிலில் இருந்து வருகிறார். இவர் மேலும்  P.G.D.M.M.,   படித்துவிட்டு இவரது தொழில்துறையில் பிரகாசித்து வருகிறார். தொடர்ந்து இவருக்கு ஜோதிட துறையில் ஏற்பட்ட ஆர்வமிகுதி காரணமாக ஜோதிடவியலில் பட்டயப்படிப்பும் பின்பு முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் மாற்று மருத்துவ ஆலோசகராகவும் குடும்ப நல ஜோதிடராகவும் இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இவர் ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகையில் மாத ராசிபலன் எழுதுகிறார் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். –ஆசிரியர்


புரட்டாசியின் சிறப்பு

ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகைக்கு ஜோதிடம் பகுதியில் ராசிபலன் எழுத வாய்ப்பளித்த ஆசிரியர் திரு. ஞானேஸ்வரன் அவர்களுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொண்டு வாசகர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் சிறப்புக்களை சொல்லிவிட்டு பின்னர் மாத ராசிபலன் கூற முற்படுகிறேன். 

காலத்தை சூரியனை அடிப்படையாக வைத்து அந்தந்த ராசிகளில் சஞ்சரிக்கும் காலத்தை தமிழ் மாதமாகக் கொண்டனர். கன்னியில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை தமிழ் மாதம் புரட்டாசி ஆகும். உத்திராயணம் எனப்படும் ஆறுமாத காலத்தை தை முதல் ஆனி வரையும் தட்சிணாயணம் எனப்படும் ஆறுமாத காலத்தை ஆடி முதல் மார்கழி வரையும் கூறுப்படுகிறது. உத்திராயணம் ஆரம்பம் தை அமாவாசை. அந்த நாளில் நாம் நம் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்கின்றோம். அதேபோல் தட்சிணாயணம் ஆரம்பம் ஆடி மாத அமாவாசையன்றும் நம் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்கின்றோம்.

தேவர்களுக்கும் பித்ருகளுக்கும் ஒரு நாள் என்பது மனிதர்களுக்கு 360 நாட்கள் ஆகும். தை மாதம் பித்ருகளுக்கு காலை மணி 6-8 எனக்கொண்டால் அது அவர்களுக்கு அளிக்கும் காலை உணவாகும். அதாவது முதல் வேளை உணவு. ஆடி மாதம் பித்ருகளுக்கு மாலை மணி 6-8 எனக்கொண்டால் அது மதிய உணவு அளிப்பது போன்றது. அதாவது இரண்டாவது வேளை உணவு. புரட்டாசி மாதத்தில் மஹாளய அமாவாசை வருகின்றது. கிருஷ்ணபட்சம் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரை உள்ள 15 நாட்களுக்கு பித்ருலோகத்திலுள்ள ஆன்மாக்கள் எல்லாம் g+மிக்கு வந்து அவரவர் உறவினர்கள் வீட்டிற்கு சென்றும் அவர்கள் தரும் திள(எள்) தர்ப்பணத்தை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். எனவே புரட்டாசி மாதம் பித்ருகளுக்கு இரவு நேரம் மணி 10-12 ஆகும். இம்மாதம் நாம் செய்யும் திள தர்ப்பணம் அவர்களுக்கு இரவுச் சாப்பாடாகும் அதாவது மூன்றாவது வேளை உணவாகும். 

இந்த மூன்று காலத்திலும் நாம் செய்யும் திள தர்ப்பணத்தால் பித்ருகளுக்கு நாம் தினமும் மூன்று வேளை உணவு அளித்து அவர்களை திருப்தி செய்வதாக ஆகிறது. அந்த ஆன்மாக்களும் வயிறு நிறைய உண்ட திருப்தியுடன் தம் சந்ததியினருக்கு நல்வாழ்த்தையும் ஆசியும் அளிப்பதால் அக்குடும்பத்தினர் பல நற்பேறுகளை பெற்று உயர்வடைவார்கள் என்பது இதன் தத்துவம். 

புரட்டாசி மாதத்தில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் ஸெளராஷ்ட்ர இன மக்கள் இம்மாதம் முழுதும் விரதமிருந்து சனிக்கிழமை தோறும் ஆன்மீக உணர்வுடன் வீடுதோறும் சென்று ஹரி நாமம் (கோவிந்தட்சம் கோவிந்தா எனக்) கூவி அரிசியை பிச்சையாக ஏற்று அந்த அரிசியைக் கொண்டு சமைத்து குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அழைத்து எவ்வித பாகுபாடின்றி தசள் என்னும் விருந்து படைத்து மகிழ்கின்றோம்.

இதை நாம் ஏன் செய்கிறோம் என்று பலருக்கு தெரியாது. ஒருவன் எவ்வளவுதான் வசதி படைத்தவனாக இருந்தாலும் ஒரு காலத்தில் காலச் சூழ்நிலைக் காரணமாக பிச்சை எடுக்கும் அளவிற்கு வறியவனாலும் பிறருக்கு உணவளித்துவிட்டுதான் உண்ண வேண்டும். நான் எனக்கு என்ற கர்வம் அற்று விழவேண்டும் என்றும், இறைச் சிந்தனையிலிருந்தும் மாறக் கூடாது என்றுதான் நம் முன்னோர்கள் தசள் சம்பிரதாயத்தை வழக்கமாகக் கொண்டனர். இதன் தாத்பர்யத்தை உணர்ந்து முழுமனதோடு நம் பாரம்பரியப் பெருமையை சிறப்படையச் செய்வது நம் கடமையாகும்.

இறந்தவர்களுக்கும் உணவளிப்போம்! இருப்பவர்களுக்கும் உணவளிப்போம்! அன்னத்தின் பெருமையும் அன்னதானத்தின் மேன்மையையும் கர்வம் பங்கம் ஆக வேண்டும் என அமைந்த மாதம்தான் இந்த புரட்டாசி மாதம். கோவிந்தட்சம் கோவிந்தா… இந்த அன்னம் நமக்கு அளிக்க பாடுபடும் விவசாயியின் வாழ்க்கை மேன்மையடைய ஏழுமலையானை வேண்டி பிரார்த்திக்கிறேன்.

 

User Comments
Kondaa.Senthilkumar
கோவிந்தட்சம் கோவிந்தா…கோவிந்தா அவ்ரெ கொம்மொ தசல் சேத்தே __/\__
Balaji Kopula, Dubai,UAE
Thank you for info about Dhasal - தசள் : ஒருவன் எவ்வளவுதான் வசதி படைத்தவனாக இருந்தாலும் ஒரு காலத்தில் காலச் சூழ்நிலைக் காரணமாக பிச்சை எடுக்கும் அளவிற்கு வறியவனாலும் பிறருக்கு உணவளித்துவிட்டுதான் உண்ண வேண்டும்.
S.S. Ramakrishnan
NALLA KARUTHU. IDAI POL VERU PALA VISHAYANGALAIYUM VELIIDALAM. NANRI.
Information
Name
Comments
 
Verification Code
1 + 7 =