Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Samooka Chinthanai-5

சமூகச் சிந்தனை: 5
இருவீட்டாருக்கும் ஜாதகம் பொருந்தி விட்டால் போதும் கொடுக்கல் வாங்கல் எப்படி என்று பேசி முடித்துக் கொண்டால் அடுத்தது பற்றி யோசிக்கலாம் என்பார்கள் மாப்பிள்ளை வீட்டார். எதற்கும் நாம் தயாராகத்தான் இருக்கிறோம் என்ற போக்கில் பெண் வீட்டார். மணப்பெண்ணுக்கு இத்தனை சவரன் நகை அணிவிக்க வேண்டும். மாப்பிள்ளைக்கு இத்தனை சவரன் நகை மற்றும் வெள்ளியில் என்னென்ன வகை செய்கிறீர்கள். இதுபோக சீர்செனத்தி என்னென்ன செய்யப் போகிறீர்கள்? பலகாரம் அதாவது இனிப்புக்காரவகைகள் எத்தனை எண்ணம்? போன்றவைகள் மிக நுணுக்கமான முறையில் பேரம் பேசி எல்லாம் செய்யலாம் என்று பெண் வீட்டார் சொல்லி விட்டால் போதும். அடுத்த நல்ல நாளில் ப10ச்சூட்டுவதோ அல்லது நிச்சயதார்த்தமோ நடைபெறும். 
இதற்கு முன்னர் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டு சார்பில் என்ன செய்ய உத்தேசித்துள்ளீர்கள் என்று விசாரித்துக் கொள்வார்கள். 
மாப்பிள்ளையின் உத்யோகம் வருமானம் இவற்றை வைத்து மணப்பெண்ணின் நகையும் மற்ற சீர் விபரமும் கணக்கிடப்படுகிறது. இந்த இடத்தில் மிக மிக கேவலமான முறையில் பேரமும் நடக்கும். முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஆணுக்கும் பெண்ணுக்குமாக சேர்த்து அதாவது தங்கைக்கும் அண்ணனுக்கும் ஒரே மேடையில் இரண்டு திருமணமும் நடைபெறும். இதில் பெண்வீட்டாரிடம் பெற்ற பலகார வகைகள் அப்படியே இவர்களின் பெண் வீட்டாருக்கும் திருப்பி கொடுக்கப்படும். ஒருவரிடம் சற்று அதிகமாக பெறப்படும் பலகார வகைகள் இன்னொருவருக்கு கொஞ்சம் குறைத்து பேசி தரப்படும் வழக்கமும் நடைமுறையில் அதிகமாகக் காணப்பட்டது. இப்போது இரண்டு திருமணங்கள் ஒரே மேடையில் நடைபெறுவது அரிதாகிவிட்டது.
திருமணங்கள் வீட்டில் நடந்தால்தான் கௌரவம் என்ற காலம் போய் மண்டபங்களில் அதுவும் மிகப்பெரிய மண்டபங்களில் நடத்துவதுதான் இப்போது கௌரவமாக கொள்ளும் மனப்போக்கு அதிகமாகி விட்டது. இதனால் திருமண மண்டபங்களுக்கு வருவாய் நம் சமூகத்திலிருந்து அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்னதாக மண்டபங்களை பதிவு செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். 
நிச்சயத்தார்த்தம் நிகழ்ச்சியின்போது மணப்பெண் மணமகனுக்கு பரிசு கொடுப்பதும் மணமகன் மணப்பெண்ணுக்கு பரிசு கொடுப்பதும் (சம்பிரதாயமாக) வாடிக்கையாக நடைபெறும் நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும். பின்னர் சில இடங்களில் மணமகனுக்கு புத்தாடைகள் வழங்குவதும் பெருகிவரும் சம்பிரதாயங்களில் இன்னொன்றாகும். பெரும்பாலான இடங்களில் மணமகன் மணமகளுக்கு செல்போன் பரிசாக கொடுப்பது நடைமுறையாக உள்ளது. பின்னர் திருமண நாள் வரை போனில் பேசிக் கொள்வது என்பது தவிர்க்க முடியாத – தவிர்க்கக் கூடாத பழக்கமாகி விடுகிறது. இதனால் சில இடங்களில் நிச்சயதார்த்தம் முறிவு ஏற்பட்டு திருமணமே தடைப்பட்டு பெரும் பிரச்னைகளை பெற்றோர்கள் சந்திக்கும் நிர்பந்தம் உருவாகிறது. இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம் என்றாலும் இருதரப்பிலும் ஏற்பட்ட மனஉளைச்சலில் இருந்து மீள வெகுகாலம் ஆகிவிடுகிறது. 
இன்னொரு சாரர் மணமகன் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு சினிமா ஓட்டல் மால் என்று சுற்றித்திரியும் நடைமுறையும் பெருகி வருகிறது. இம்முறையில் இருதரப்பு பெற்றோர்களும் ஒப்புதல் தருகிறார்கள். மேலும் மணமகன் வந்து மணப்பெண்ணை அழைக்கவில்லை என்றால் என்ன மாப்பிள்ளை இப்படி இருக்கிறார் என்று பெண் வீட்டு சார்பில் பேசிக்கொள்ளும் நிலையும் அதற்கு பெண்வீட்டார் என்ன செய்வது நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று அங்கலாய்ப்புடன் கூறிக்கொள்வதும் சகஜமாக உள்ளது. இதில் ஏற்படும் கண்ணியம் காக்கப்படாமை திருமணம் வரை செல்லமுடியாமல் முறிவு ஏற்படும் சந்தர்ப்பமும் உருவாகிறது. மேலும் நெருங்கிய உறவினர்கள் வீட்டில் நடக்கும் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு மணமகனையும் மணப்பெண்ணையும் அழைத்துச் செல்லும் பழக்கங்கள் இன்றைய நாளில் பெருகி விட்டது. 
இப்படிப்பட்ட வறட்டு கௌரவத்திற்கு உட்படுவதால் நம் சமூகத்தின் நிதி வீணடிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இங்கே சொல்லபட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் மதுரையிலும் அதன் சுற்றுப்பகுதியிலும் நடக்கும் உண்மை நிகழ்வின் தாக்கமே. மற்ற ஊரில் வாழும் ஸெளராஷ்ட்ரர்களுக்கு இங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் வித்தியாசமாக தெரியும். எந்த ஒரு பழக்கமும் சம்பிரதாயமும் அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ரர்களுக்கு பொதுவாக இருந்தால்தானே அது நம் சமூகத்தின் பழக்கம் என்றோ சம்பிரதாயம் என்றோ கூறமுடியும். அப்படி இல்லாத பட்சத்தில் விட்டுக்கொடுத்து உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் குறைந்தா போய்விடும்? 
வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் மகிழ்ச்சியையும் நீண்டகால உறவையும் வலுப்படுத்தும் என்பது உண்மை என்று உணர வேண்டும். அப்போதுதான் திருமணச் சடங்குகளில் வேண்டாத பிரச்னைகள் தவிர்க்கப்படும். திருமணச் சடங்குகளில் சம்பிரதாயம் என்ற பெயரில் நாம் சந்திக்கும் வேண்டாத பிரச்னைகள் - தவிர்க்கப்பட வேண்டிய வழக்கங்கள் என்று சிந்தனையைத் தட்டிவிட்டு பார்க்கிறேன். அந்த சிந்தனையில் கண்ட அவலங்களை அடுத்த இதழில் பகிர்ந்து கொள்கிறேன். 

சமூகச் சிந்தனை: 5

இருவீட்டாருக்கும் ஜாதகம் பொருந்தி விட்டால் போதும் கொடுக்கல் வாங்கல் எப்படி என்று பேசி முடித்துக் கொண்டால் அடுத்தது பற்றி யோசிக்கலாம் என்பார்கள் மாப்பிள்ளை வீட்டார். எதற்கும் நாம் தயாராகத்தான் இருக்கிறோம் என்ற போக்கில் பெண் வீட்டார். மணப்பெண்ணுக்கு இத்தனை சவரன் நகை அணிவிக்க வேண்டும். மாப்பிள்ளைக்கு இத்தனை சவரன் நகை மற்றும் வெள்ளியில் என்னென்ன வகை செய்கிறீர்கள். இதுபோக சீர்செனத்தி என்னென்ன செய்யப் போகிறீர்கள்? பலகாரம் அதாவது இனிப்புக்காரவகைகள் எத்தனை எண்ணம்? போன்றவைகள் மிக நுணுக்கமான முறையில் பேரம் பேசி எல்லாம் செய்யலாம் என்று பெண் வீட்டார் சொல்லி விட்டால் போதும். அடுத்த நல்ல நாளில் g+ச்சூட்டுவதோ அல்லது நிச்சயதார்த்தமோ நடைபெறும். 

இதற்கு முன்னர் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டு சார்பில் என்ன செய்ய உத்தேசித்துள்ளீர்கள் என்று விசாரித்துக் கொள்வார்கள். 

மாப்பிள்ளையின் உத்யோகம் வருமானம் இவற்றை வைத்து மணப்பெண்ணின் நகையும் மற்ற சீர் விபரமும் கணக்கிடப்படுகிறது. இந்த இடத்தில் மிக மிக கேவலமான முறையில் பேரமும் நடக்கும். முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஆணுக்கும் பெண்ணுக்குமாக சேர்த்து அதாவது தங்கைக்கும் அண்ணனுக்கும் ஒரே மேடையில் இரண்டு திருமணமும் நடைபெறும். இதில் பெண்வீட்டாரிடம் பெற்ற பலகார வகைகள் அப்படியே இவர்களின் பெண் வீட்டாருக்கும் திருப்பி கொடுக்கப்படும். ஒருவரிடம் சற்று அதிகமாக பெறப்படும் பலகார வகைகள் இன்னொருவருக்கு கொஞ்சம் குறைத்து பேசி தரப்படும் வழக்கமும் நடைமுறையில் அதிகமாகக் காணப்பட்டது. இப்போது இரண்டு திருமணங்கள் ஒரே மேடையில் நடைபெறுவது அரிதாகிவிட்டது.

திருமணங்கள் வீட்டில் நடந்தால்தான் கௌரவம் என்ற காலம் போய் மண்டபங்களில் அதுவும் மிகப்பெரிய மண்டபங்களில் நடத்துவதுதான் இப்போது கௌரவமாக கொள்ளும் மனப்போக்கு அதிகமாகி விட்டது. இதனால் திருமண மண்டபங்களுக்கு வருவாய் நம் சமூகத்திலிருந்து அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்னதாக மண்டபங்களை பதிவு செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். 

நிச்சயத்தார்த்தம் நிகழ்ச்சியின்போது மணப்பெண் மணமகனுக்கு பரிசு கொடுப்பதும் மணமகன் மணப்பெண்ணுக்கு பரிசு கொடுப்பதும் (சம்பிரதாயமாக) வாடிக்கையாக நடைபெறும் நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும். பின்னர் சில இடங்களில் மணமகனுக்கு புத்தாடைகள் வழங்குவதும் பெருகிவரும் சம்பிரதாயங்களில் இன்னொன்றாகும். பெரும்பாலான இடங்களில் மணமகன் மணமகளுக்கு செல்போன் பரிசாக கொடுப்பது நடைமுறையாக உள்ளது. பின்னர் திருமண நாள் வரை போனில் பேசிக் கொள்வது என்பது தவிர்க்க முடியாத – தவிர்க்கக் கூடாத பழக்கமாகி விடுகிறது. இதனால் சில இடங்களில் நிச்சயதார்த்தம் முறிவு ஏற்பட்டு திருமணமே தடைப்பட்டு பெரும் பிரச்னைகளை பெற்றோர்கள் சந்திக்கும் நிர்பந்தம் உருவாகிறது. இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம் என்றாலும் இருதரப்பிலும் ஏற்பட்ட மனஉளைச்சலில் இருந்து மீள வெகுகாலம் ஆகிவிடுகிறது. 

இன்னொரு சாரர் மணமகன் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு சினிமா ஓட்டல் மால் என்று சுற்றித்திரியும் நடைமுறையும் பெருகி வருகிறது. இம்முறையில் இருதரப்பு பெற்றோர்களும் ஒப்புதல் தருகிறார்கள். மேலும் மணமகன் வந்து மணப்பெண்ணை அழைக்கவில்லை என்றால் என்ன மாப்பிள்ளை இப்படி இருக்கிறார் என்று பெண் வீட்டு சார்பில் பேசிக்கொள்ளும் நிலையும் அதற்கு பெண்வீட்டார் என்ன செய்வது நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று அங்கலாய்ப்புடன் கூறிக்கொள்வதும் சகஜமாக உள்ளது. இதில் ஏற்படும் கண்ணியம் காக்கப்படாமை திருமணம் வரை செல்லமுடியாமல் முறிவு ஏற்படும் சந்தர்ப்பமும் உருவாகிறது. மேலும் நெருங்கிய உறவினர்கள் வீட்டில் நடக்கும் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு மணமகனையும் மணப்பெண்ணையும் அழைத்துச் செல்லும் பழக்கங்கள் இன்றைய நாளில் பெருகி விட்டது. 

இப்படிப்பட்ட வறட்டு கௌரவத்திற்கு உட்படுவதால் நம் சமூகத்தின் நிதி வீணடிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இங்கே சொல்லபட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் மதுரையிலும் அதன் சுற்றுப்பகுதியிலும் நடக்கும் உண்மை நிகழ்வின் தாக்கமே. மற்ற ஊரில் வாழும் ஸெளராஷ்ட்ரர்களுக்கு இங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் வித்தியாசமாக தெரியும். எந்த ஒரு பழக்கமும் சம்பிரதாயமும் அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ரர்களுக்கு பொதுவாக இருந்தால்தானே அது நம் சமூகத்தின் பழக்கம் என்றோ சம்பிரதாயம் என்றோ கூறமுடியும். அப்படி இல்லாத பட்சத்தில் விட்டுக்கொடுத்து உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் குறைந்தா போய்விடும்? 

வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் மகிழ்ச்சியையும் நீண்டகால உறவையும் வலுப்படுத்தும் என்பது உண்மை என்று உணர வேண்டும். அப்போதுதான் திருமணச் சடங்குகளில் வேண்டாத பிரச்னைகள் தவிர்க்கப்படும். திருமணச் சடங்குகளில் சம்பிரதாயம் என்ற பெயரில் நாம் சந்திக்கும் வேண்டாத பிரச்னைகள் - தவிர்க்கப்பட வேண்டிய வழக்கங்கள் என்று சிந்தனையைத் தட்டிவிட்டு பார்க்கிறேன். அந்த சிந்தனையில் கண்ட அவலங்களை அடுத்த இதழில் பகிர்ந்து கொள்கிறேன். 

User Comments
Sourashtra Sourashtrian
மொ:ட்டான் சங்கெ வத்தான் கோன் ஐக்கராஸ் ஏ காலமு
Manikandan LS
mottaan sangey vatho aski menkaanuk konaa aikadathey menikinu na atho ami yosanai kenno?
Subramanian Obula, Madurai
mhoTTaan kaay menariyo? telle aikunaatte nhannahoDaan kaay menariyo? kOT abhipraaya bhEt avariyo? egOs thOru rendu (Generation gap) meni menariyo ! kaalam marchaariyo. attaa nhanna pillaak kaLayeyo mhoTTaanuk kaLaariyo nhii; sikkullattak musariyo nhii. Example: computer & internet. mhoTTaan sangariyo tenka anubhavam. telle tumi attaa kaalamuk porttam poDaigaa menatte tumiis siiluno. ture abhipraayam dusura maadiri rhavvaayi. tiso meneti tOru rendu (generation gap) ruvvOs unna poDayi. deergha darisanam (long term forecast) kerattak kaLanO. ture mhoTTaan kere forecast kaay hoyesi? telle siitti, tumi ture forecast keruvaayi. Devanagari lipi amuluk khaLLi avDuvaayi meni 1920 mu mhoTTaan forecast kereyo ! 94 orsu hoyyo; telyo forecast kaay hoyesi? widows remarriage sahajam kan chalayi meni vedur siyeyo. angunuku, widows divo horaaTu kerlattak dheiryam avarani; samuuham teko angun serko hoye aadaravu dErani. chevde ammaan aski kaamuk jEDan meni vedur siyeyo; hoyeti, angun avre ammaan kaamuk jaattak pastokkilEt sE. ICM dheri abhipraayam konni marchullattak musarani. eka effect angun dii generation pharaatuus kaLaan avayi. ture monnuk serko meni lagariyo tumi keruvo; teka haali avi lagariyo askiteko, tumiis porup khaLLuno.
Yoganath Sutti, Madurai
pattal thane therium ....
Premnath Neelamegam, Batlaguntu
Where money matters, nothing ( betrothal , date fixing,etc ) becomes trustworthy. Never entertain bargainers!
Information
Name
Comments
 
Verification Code
1 + 9 =