Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni -kaLatni 16-11-18

ஸெளராஷ்ட்ரீ வளர்ச்சிக்கு உதவுங்கள்!

ஸெளராஷ்ட்ரீ ஸாஹித்ய ஸதஸ் பேராசிரியர் டாக்டர் . தி . ரா . தாமோதரன் ஓராண்டிற்குள் தாய்மொழி எழுதப் படிக்கத் தெரிந்த 1000 இளைஞர்களை உருவாக்க.....இதோ அழைக்கிறார்!

ஸெளராஷ்ட்ரீ ஸாஹித்ய ஸதஸ்  ஸெளராஷ்ட்ர மொழி வளர்ச்சிக்குத் தேவையான பணிகளை தலையாயக் கடமையாகக் கொண்டு , முறையான வழிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்பட்டு வருவது அனைவரும் நன்கு அறிந்ததே . ஸெளராஷ்ட்ரீ ஸாஹித்ய ஸதஸ் அனுபவமிக்க ஸெளராஷ்ட்ர கல்வியாளர் களின் அமைப்பாகும் . மாதம் தோறும் ஸெளராஷ்ட்ரீ ஸாஹித்ய பேருரை நிகழ்வுகளை நடத்தி இலக்கிய ஆர்வத்தை வளர்த்து வருகிறோம் . மேலும் தாய் மொழியை நம் இளைஞர்கள் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்வதற்காக சான்றிதழ் , பட்டயத் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளோம் . இந்நூல் சான்றிதழ் தேர்வுக்கு அழைத்துச் செல்லும் பாட நூலாகும் .

 

தாய் மொழி வாசிக்கவும் எழுதவும் தெரிய வேண்டியது கட்டாயமாகும் . தாய்மொழி சமூகத்தின் அடையாளமாகும் . மொழிவாரிச் சிறுபான்மை பின்தங்கியோர் வகுப்பார் பட்டியலில் நம் சமூகம் சேர்க்கப்பட்டு அதனால் பல சலுகைகள் அரசால் நம் சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன . நம் சமூக மக்கள் இம்மொழி பேசி வந்தால் தான் ஸெளராஷ்ட்ரர்கள் என்ற அந்தஸ்து நிலைத்து மொழிவாரிச் சிறுபான்மை பின்தங்கியோர் வகுப்பாருக்கான சலுகைகள் நமக்குத் தொடரும் . ஆகவே நம் இளைஞர்களுக்கு தாய்மொழிக் கற்றுத் தருவது நமது கட்டாயத் தேவையாக உள்ளது . இதனால் நம் சமூக மொழி , கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வை நம் இளைஞர்களிடையே உருவாக்க முடியும் .

 

இவ்வுணர்வால் சமூகப் பாரம்பரியத்தை காத்துக் கொள்ள முடியும் . தாய் மொழி ஸெளராஷ் ட்ரீயைக் கற்றுத் தருவதற்கென்றே ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி " ஸெளராஷ்ட்ரீ யுவ பாரதி ” சான்றிதழ் தேர்விற்கான இப்பாடப் புத்தகத்தைத் தயாரித்துள்ளோம் . தாய்மொழி பயில விரும்பும் மாணவ -மாணவியர்க்கு இலவசமாக இந்நூல் வழங்கப்பட வேண்டும் . இந்நூல் அச்சிடுவதற்கான நிதி உதவியை Linguistic Minority ( Sourashtra ) நிறுவனங்களான K . L . N . காலேஜ் கௌன்சிலும் மற்றும் ஸெளராஷ்ட்ர கல்லூரி கெளன்சிலும் விளம்பர நன்கொடையாக வழங்கி Linguistic Minority Sourashtri மொழி வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளனர் . ஆதலினால் இந்நூல் மாணவர்களுக்கு விலையேதுமின்றி வழங்கப்படும்

 

பயிற்சிக் கட்டணம் , தேர்வுக் கட்டணம் ரூ . 300 / - மட்டும் 100 மாணவர்களுக்கு BVK Foundation மூலம் திரு K . V . பாலா அவர்கள் வழங்குகிறார்.  திருவாளர் கே . கே . தினகரன் அவர்கள் பயிற்சிக் கட்டணம் , தேர்வுக் கட்டணமாக ரூ . 300 / - மட்டும் 50 மாணவர்களுக்கு வழங்குகிறார் . மொழி ஆர்வலர்கள் இவ்வாறான கல்வி உதவித் தொகை வழங்கினால்  ஓராண்டிற்குள் தாய்மொழி எழுதப் படிக்கத் தெரிந்த 1000 இளைஞர்களை உருவாக்கும் திட்டம் நிறைவுறும் . வருங்காலத்தில் அவர்கள் மூலம் பல்லாயிரக் கணக்கான ஸெளராஷ்ட்ரீ அறிஞர்களை உருவாகலாம் . பல்லாற்றானும் மொழி வளர்ச்சிக்கு ஆதரவும் நிதி உதவியும் அளித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும் ஸெளராஷ்ட்ரீ ஸாஹித்ய ஸதஸ் தங்களது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது .

 

இந்நூல் உருவாக்கத்திலும் பயிற்சி அளிப்பதிலும் ஈடுபாட்டுணர்வோடு உதவிக்கரம் நீட்டும் திருவாளர்கள் ஸமஸ்கிருதப் பேராசிரியர் டாக்டர் . தி . ரா . தாமோதரன் அவர்களுக்கும் , ஆங்கிலப் பேராசிரியர் டாக்டர் . ல , ரா . கோவர்தனன் அவர்களுக்கும் கொண்டா . எஸ் . செந்தில் குமார் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி . அச்சுப்பிழைகளைக் களைந்து சிறந்த பாடநூலாக உருவாக்கப் பிழைத்திருத்தங்கள் செய்து அளித்த திரு . ஆர் . ஆர் சத்தியமூர்த்தி அவர்களுக்கும் தமிழ் பேராசிரியை திருமதி . நிர்மலா தாமோதரன் அவர்களுக்கும் , திரு . டாக்டர் . தொ . சே . கிருஷ்ணாராம் அவர்களுக்கும் நன்றி ! நன்றி !  

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 8 =