Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
uNmai...Shreyangam

ஸ்ரேயங்க3ம்:
உண்மை!
இது சிலருக்குப் பிடிக்காது. சிலரால் இதனை கடைப்பிடிக்கவே இயலாது. உலகமே இதனைக் கண்டு அஞ்சுகிறது. நாம் எதை எப்படி மறைத்தாலும் இதற்கு முன் நிற்க முடியாது. எல்லோரும் இதைத்தான் பேச வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் சில நேரங்களில் முடிவதில்லை. காந்தியடிகள் இதற்காகவே மிகவும் கஷ்டப்பட்டதுண்டு. அந்தக் காலத்தில் ஓர் அரசனைக் கூட இது பாடாய்படுத்தியுள்ளது. ஆனால் அந்த அரசன் முன் இதற்கு புறம்பான ஒன்று வெற்றிப்பெற முடியாமல் திணறியுள்ளது. 
நமது ஆட்சியாளர்களிடம் இப்போதெல்லாம் இது காணப்படுவதில்லை என்பதும் அப்பட்டமாக ஒப்புக்கொள்ளவேண்டியுள்ளது. இன்றைய அரசியல்வாதிகள் பிறக்கட்சிகளின் செயல்பாட்டை வெளிப்படையாக்கும்போது மட்டும் இதனை சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கென்று வரும்போது தவிர்ப்பார்கள். இதனால் இவர்களுக்கு இது கசக்கும். 
நீதிதேவதைக்கு முன் இதைத்தான் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் அதற்கு சாட்சியம் இல்லை என்றால் அதுவும் எடுபடாது. சாட்சியத்தோடு எதைச் சொன்னாலும் இறுதியாக அது ஆகிவிட முடியாது என்று தெரிந்தாலும் சட்டத்திற்கு பெரும்பாலும் இது பயப்படுவதுபோலவே தெரியும். 
அந்த நாள் முதல்கொண்டு இந்த நாள் வரைக்கும் இதற்காக வாழ்க்கையில் உழைத்தவர்கள் நல்ல பலனையே அடைந்திருக்கிறார்கள். நம் குழந்தைகளுக்கும் வளரும்போதே இதனை நெஞ்சினில் விதைத்து வளர்க்க வேண்டும் என்று எண்ணுவதுண்டு. ஆனால் சிலவற்றை சில நேரங்களிலும் பலவற்றை பல நேரங்களிலும் காரணங்கள் கருதி நாம் இதனை சொல்லுவதில்லை. 
இதற்கு இருக்கும் மரியாதை கௌரவம் பெருமை என்று ஏகமாக உண்டு. அப்படி என்ன இது…? என்று கேட்கத் தோன்றியிருக்கும். கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் பார்த்திருந்தால் உங்களுக்கே தெரிந்திருக்கும். ஆம் உண்மையில் அதுதான் உண்மை.
குறிப்பு: இந்த இதழுக்கு தலையங்கம் எழுத ஏதாவது ஒரு விஷயம் வேண்டும் என நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தபோது ஒரு நண்பர் கேட்டார் ஏன் விஷயமே இல்லாமல் உன்னால் தலையங்கம் எழுத முடியாதா? என்றுக்கேட்டார். 
விஷயமே இல்லையென்றாலும் இருப்பதுபோலக் காட்டி அதிலும் ஒரு கருத்தைச் சொல்லி வைக்க எழுத்தாளனால் முடியும் என்பதைக் காட்டவே இந்த தலையங்கம். உண்மை இதுதான். சுவையாக இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.

ஸ்ரேயங்க3ம்:

 Vol.3 1st June 2016 Issue: 19

உண்மை!

இது சிலருக்குப் பிடிக்காது. சிலரால் இதனை கடைப்பிடிக்கவே இயலாது. உலகமே இதனைக் கண்டு அஞ்சுகிறது. நாம் எதை எப்படி மறைத்தாலும் இதற்கு முன் நிற்க முடியாது. எல்லோரும் இதைத்தான் பேச வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் சில நேரங்களில் முடிவதில்லை. காந்தியடிகள் இதற்காகவே மிகவும் கஷ்டப்பட்டதுண்டு. அந்தக் காலத்தில் ஓர் அரசனைக் கூட இது பாடாய்படுத்தியுள்ளது. ஆனால் அந்த அரசன் முன் இதற்கு புறம்பான ஒன்று வெற்றிப்பெற முடியாமல் திணறியுள்ளது. 

நமது ஆட்சியாளர்களிடம் இப்போதெல்லாம் இது காணப்படுவதில்லை என்பதும் அப்பட்டமாக ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய அரசியல்வாதிகள் பிறக்கட்சிகளின் செயல்பாட்டை வெளிப்படையாக்கும்போது மட்டும் இதனை சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கென்று வரும்போது தவிர்ப்பார்கள். இதனால் இவர்களுக்கு இது கசக்கும். 

நீதிதேவதைக்கு முன் இதைத்தான் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் அதற்கு சாட்சியம் இல்லை என்றால் அதுவும் எடுபடாது. சாட்சியத்தோடு எதைச் சொன்னாலும் இறுதியாக இது ஆகிவிட முடியாது என்று தெரிந்தாலும் சட்டத்திற்கு பெரும்பாலும் இது பயப்படுவதுபோலவே தெரியும். 

அந்த நாள் முதல்கொண்டு இந்த நாள் வரைக்கும் இதற்காக வாழ்க்கையில் உழைத்தவர்கள் நல்ல பலனையே அடைந்திருக்கிறார்கள். நம் குழந்தைகளுக்கும் வளரும்போதே இதனை நெஞ்சினில் விதைத்து வளர்க்க வேண்டும் என்று எண்ணுவதுண்டு. ஆனால் சிலவற்றை சில நேரங்களிலும் பலவற்றை பல நேரங்களிலும் காரணங்கள் கருதி நாம் இதனை சொல்லுவதில்லை. 

இதற்கு இருக்கும் மரியாதை கௌரவம் பெருமை என்று ஏகமாக உண்டு. அப்படி என்ன இது…? என்று கேட்கத் தோன்றியிருக்கும். கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் பார்த்திருந்தால் உங்களுக்கே தெரிந்திருக்கும். ஆம் உண்மையில் அதுதான் உண்மை.

குறிப்பு: இந்த இதழுக்கு தலையங்கம் எழுத ஏதாவது ஒரு விஷயம் வேண்டும் என நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தபோது ஒரு நண்பர் கேட்டார் ஏன் விஷயமே இல்லாமல் உன்னால் தலையங்கம் எழுத முடியாதா? என்றுக்கேட்டார். 

விஷயமே இல்லையென்றாலும் இருப்பதுபோலக் காட்டி அதிலும் ஒரு கருத்தைச் சொல்லி வைக்க எழுத்தாளனால் முடியும் என்பதைக் காட்டவே இந்த தலையங்கம். உண்மை இதுதான். சுவையாக இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 8 =