Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Samooka Chinthanai-4

சமூகச் சிந்தனை-4
திருமணக் காலங்களில் சில பழக்கங்கள் சிலருக்கு நல்லதாக இருக்கலாம். சிலருக்கு அதுவே கௌரவமாகவும் இருக்கலாம். ஆனால் அது பலருக்கும் மனதை பாதிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் காலச்சூழ்நிலைக் காரணமாக தங்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அந்த சில பழக்கங்கள் அவரவர் வீட்டுத் திருமண விசேஷங்களில் செய்தே ஆக வேண்டும் என்றக் கட்டாயத்திற்கு தள்ளப்படும்போதுதான் மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் யார்? இந்த சமுதாயமா? நிச்சயமாக இல்லை. நம்முடைய மனநிலைதான் காரணம். எப்படி?
வறட்டு கௌரவம் ஒரு புறம். ளுவயவரள என்று சொல்லும் குடும்பத் தகுதி பார்க்கும் பாரம்பரிய பழக்கம் இன்னொரு புறம்.  இதையும் தாண்டி மணமகனின் வருமானத்தால் உருவாகும் ஒருவித தகுதி மற்றொரு முக்கியமான காரணமாகிறது. அக்கம்பக்கம் உள்ளவர்களின் கருத்தும் நெருங்கிய உறவினர்களின் கருத்தும் பெற்றோர்கள் மீது திணிக்கப்படுவதால் ஏற்படும் மனமாற்றமே திருமணக் காலங்களில் பல பிரச்னைகளுக்கும் பல வேண்டாத பழக்க வழக்கங்களுக்கும் பெண் வீட்டாரின் அதிருப்திக்கும் மணமகளின் மனக்கசப்பிற்கும் அஸ்திவாரமாக அமைகிறது. 
ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஜாதகம் கொடுப்பதற்கு முன்னர் அந்தப் பெண்ணைப் பெற்றவர்கள் மணமகன் கை நிறைய சம்பாதிக்க வேண்டும். தனக்கென ஒரு வீடு வாங்கியிருக்க வேண்டும். அவர்கள் குடும்பத்தார் நல்ல நிலையில் இருக்க வேண்டும். தங்கள் பெண் அந்த வீட்டிற்குச் சென்றால் ராணி மாதிரி வாழ வேண்டும் என்ற ஆசை மனதில் உச்சத்தில் இருக்கும். அதற்காக தங்கள் பெண்ணுக்கு நகைகள் அதிகமாக போடுவதும் சீர் செனத்தி என்று எல்லாமே அதிகமாக செய்வதும் நடைமுறையில் வாடிக்கையாக இருந்துவருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் பையனைப் பெற்றவர்கள் இதிலும் போதுமானதாக கருதாமல் மேலும் அதிகமாகக் கேட்டு சுமையை ஏற்றி பெண்ணைப் பெற்றவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் பாங்கு நம் சமூகத்தி;ல் அதிகமாகக் காணமுடிகிறது. இது களையப் பட வேண்டிய ஒன்றாகும்.
ஒரு பையனை திருமணம் செய்ய ஜாதகம் கொடுப்பதற்கு முன்னர் அந்தப் பையனைப் பெற்றவர்கள் மணமகள் நிறைய நகைநட்டு வெள்ளிப்பாத்திரம் சீர்செனத்தி என்று எல்லாமே அதிகமாக அதாவது அவர்கள் குடும்பத்தில் வேறு யாருக்கும் இந்த அளவிற்கு செய்திருக்கக் கூடாது என்பதில் கவனமாக காயை நகர்த்துவார்கள். பெண்ணின் குணநலன் பார்க்கும் சம்பிரதாயம் கூட இரண்டாம் பட்சத்தி;ல்தான் இருக்கும். இன்னும் கொச்சையாக சொல்லப் போனால் திருமணத்தை ஒரு நல்ல வியாபாரமாக கருதும் மனோபாவத்தில்தான் பையனைப் பெற்றவர்கள் நடந்து கொள்கிறார்கள். இந்த நடைமுறையால் சமுதாயத்திற்கு எவ்வளவு கேடு விளைகிறது என்பது பற்றியோ இது சமுதாயத்தின் பொறுப்பின்மையைக் காட்டுவதாக யாரும் துளியும் எண்ணுவது கிடையாது. 
பையனைப் பெற்றவர்கள் ஏதோ ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போன்ற மனப்பான்மையுடன் நடந்து கொள்வதும் பெண்ணைப் பெற்றவர்கள் சமுதாயத்தில் சபிக்கப்பட்டவர்கள் போலும் இன்றைய ஸெளராஷ்ட்ர சமூகத்தில் நம் கண் முன்னே காணப்படும் ஒரு அபத்தமான காட்சி. இந்த முறை மாற வேண்டும் - மாற்ற வேண்டும். அதற்கு மணமகன்கள் தான் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது எந்த சமுதாய மாற்றத்திற்கும் இளைஞர்கள் மனம் வைத்தால்தான் நடைமுறைப் படுத்த முடியும் என்பது மறைக்க முடியாத உண்மை. 
திருமணம் நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை நம் சமூகத்தில் நடப்பது என்ன? சம்பிரதாயம் என்ற பெயரில் நடக்கும் கூத்து – அதனால் உருவான பழக்கங்கள் - அந்தப் பழக்கங்களால் நம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் எந்த அளவிற்கு உருவாகி உள்ளது என்பது போன்றவைகளை அடுத்த இதழில் காண்போம்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 6 =