Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
jenjem....naachu theri

 

ஜெஞ்ஜம் (ப10ணூல்)
ஸெளராஷ்ட்ர மொழியில் முதல் திகில் சித்திரம்
ஸெளராஷ்ட்ர சுக்காந் ஆர்ட்ஸ் வழங்கும் முதல் ஸெளராஷ்ட்ர திகில் சித்திரம் குறும்படமாக சமீபத்தில் னுஏனுயில் வெளியிடப்பட்டுள்ளது. ஜெஞ்ஜம் (பூணூல்) என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்தப் படத்தில் டி.கே. கோபிநாத் இரட்டைவேடத்திலும் அம்சராஜ் கீஷ்டுää அருண்பாஸ்கர்ää சி.டி. ரெங்கன்ää அகத்தியர் ஜனாசித்தர்ää சி.எஸ். நாகராஜன்ää உஷாகுமரன்ää ஜெயஸ்ரீää குணவதிää உமாராணி ஆகியோர் நடித்துள்ளனர். திரைக்கதைää வசனம்ää ஒப்பனைää இயக்கம் என்று ஏகமாய் கோபிநாத் செய்துள்ளார். இந்தப்படத்திற்கு உயிரோட்டம் கொடுத்துள்ளவர் எம்.எஸ். கார்த்திக்பாபு இவருடைய படத்தொகுப்புதான் விறுவிறுப்பைத் தந்து பார்ப்பது திகில் படம் என்பதை உறுதிசெய்துள்ளது. படத்தின் இசையை சங்கர் ராஜா அமைத்துள்ளார். இனி ஸெளராஷ்ட்ர திரைப்படங்களுக்கு இசையமைக்கும் பணியினை நம்பி சங்கர் ராஜாவிடம் ஒப்படைக்கலாம். 
காட்டில் மூலிகை ஆய்வுக்காக தனது சகாக்களுடன் செல்லும் பேராசிரியர் ஒரு பங்களாவில் தங்க நேர்கிறது. அந்த பங்களாவில் நடந்த கொலைச்சம்பவம்தான் கதையை இழுத்துச் செல்கிறது. பயத்தால் புலம்பும் கீஷ்டுவின் நடிப்பு நல்ல நகைச்சுவை. அருண்பாஸ்கரின் ஒப்பனையும் அவரது நடிப்பும் ரசிகர்களை பயமுறுத்தும் என்று எதிர்ப்பார்ப்புக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். பேய் பிடித்துள்ளது தனது அண்ணி என்பதை அறிந்து சித்தரை நாடி பேயை ஓட்டுவதும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக செய்திருக்கலாம். ப10ணூல் தொட்டவுடன் பேய் அதிர்ந்துபோய் சாய்வதுதான் படத்தின் பெயர்க்காரணம். ப10ணூல் அணிவதால் காத்துகறுப்பு பேய் பிசாசு என்று துஷ்டதேவதைகள் அண்டாது என்று சொல்ல வருகிறார் படத்தின் நாயகனும் கதாசிரியருமான கோபிநாத். ஒரு திகில் படத்தை இயக்கவேண்டும் என்ற கோபிநாத்தின் எண்ணம் நிறைவேறியுள்ளது. படப்பிடிப்பு நடந்த விதம் கணினி தொழில்நுட்பம் கையாண்டதைப் பற்றியும் இந்த குறுந்தகட்டில் கூறியிருப்பது ஸெளராஷ்ட்ரர்களும் திரைப்படத் துறையில் கால் பதிக்கத் தொடங்கி விட்டதை உறுதி செய்கிறது. 
 
சுமார் ஒரு மணிநேரம் ஓடும் இந்த குறுந்தகடு விலை ரூபாய் ஐம்பது மட்டுமே. குறுந்தகடு பெற விரும்புவோர் 98428 43585 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். 

ஜெஞ்ஜம்  (பூணூல்)

ஸெளராஷ்ட்ர மொழியில் முதல் திகில் சித்திரம்

 

ஸெளராஷ்ட்ர சுக்காந் ஆர்ட்ஸ் வழங்கும் முதல் ஸெளராஷ்ட்ர திகில் சித்திரம் குறும்படமாக சமீபத்தில் DVDயில் வெளியிடப்பட்டுள்ளது. ஜெஞ்ஜம் (பூணூல்) என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்தப் படத்தில் டி.கே. கோபிநாத் இரட்டைவேடத்திலும் அம்சராஜ் கீஷ்டு, அருண்பாஸ்கர், சி.டி. ரெங்கன், அகத்தியர் ஜனாசித்தர், சி.எஸ். நாகராஜன், உஷாகுமரன், ஜெயஸ்ரீ, குணவதி, உமாராணி ஆகியோர் நடித்துள்ளனர். திரைக்கதை, வசனம், ஒப்பனை, இயக்கம் என்று ஏகமாய் கோபிநாத் செய்துள்ளார். இந்தப்படத்திற்கு உயிரோட்டம் கொடுத்துள்ளவர் எம்.எஸ். கார்த்திக்பாபு இவருடைய படத்தொகுப்புதான் விறுவிறுப்பைத் தந்து பார்ப்பது திகில் படம் என்பதை உறுதிசெய்துள்ளது. படத்தின் இசையை சங்கர் ராஜா அமைத்துள்ளார். இனி ஸெளராஷ்ட்ர திரைப்படங்களுக்கு இசையமைக்கும் பணியினை நம்பி சங்கர் ராஜாவிடம் ஒப்படைக்கலாம். 


காட்டில் மூலிகை ஆய்வுக்காக தனது சகாக்களுடன் செல்லும் பேராசிரியர் ஒரு பங்களாவில் தங்க நேர்கிறது. அந்த பங்களாவில் நடந்த கொலைச்சம்பவம்தான் கதையை இழுத்துச் செல்கிறது. பயத்தால் புலம்பும் கீஷ்டுவின் நடிப்பு நல்ல நகைச்சுவை. அருண்பாஸ்கரின் ஒப்பனையும் அவரது நடிப்பும் ரசிகர்களை பயமுறுத்தும் என்று எதிர்ப்பார்ப்புக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். பேய் பிடித்துள்ள பெண்ணைக் காப்பாற்ற சித்தரை நாடி பேயை ஓட்டுவதும் பின்னர் பேய் பிடித்துள்ளது தனது அண்ணி என்பதை அறிந்து... இன்னும் கொஞ்சம் அழுத்தமாக செய்திருக்கலாம். பூணூல் தொட்டவுடன் பேய் அதிர்ந்துபோய் சாய்வதுதான் படத்தின் பெயர்க்காரணம். பூணூல் அணிவதால் காத்துகறுப்பு பேய் பிசாசு என்று துஷ்டதேவதைகள் அண்டாது என்று சொல்ல வருகிறார் படத்தின் நாயகனும் கதாசிரியருமான கோபிநாத். ஒரு திகில் படத்தை இயக்கவேண்டும் என்ற கோபிநாத்தின் எண்ணம் நிறைவேறியுள்ளது. படப்பிடிப்பு நடந்த விதம் கணினி தொழில்நுட்பம் கையாண்டதைப் பற்றியும் இந்த குறுந்தகட்டில் கூறியிருப்பது ஸெளராஷ்ட்ரர்களும் திரைப்படத் துறையில் கால் பதிக்கத் தொடங்கி விட்டதை உறுதி செய்கிறது. 

 

சுமார் ஒரு மணிநேரம் ஓடும் இந்த குறுந்தகடு விலை ரூபாய் ஐம்பது மட்டுமே. குறுந்தகடு பெற விரும்புவோர் 98428 43585 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 7 =