Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
samooga...ShrEyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.4 1st October  2016 Issue: 3


 

சமூகப் பெருமை!

 

 

நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வழக்கம்போல திராவிடக் கட்சிகள் வரிந்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி வேலைப்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். நமது சமூக வேட்பாளர்களாக மதுரை மாநகராட்சிக்கு மூன்று நபர்களும் திண்டுக்கல் மாநகராட்சிக்கு ஆறு நபர்களும் சேலம்ää தஞ்சைää பாளைää பெரியகுளம் ஆகியவற்றிற்கு தலா ஒரு நபரும் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடுவதாகவும் திமுக சார்பில் மதுரை மாநகராட்சிக்கு மூன்று இடமும் பாஜகää தமாகா சார்பில் ஒன்றிரண்டு இடங்களும் கிடைத்துள்ளதாக  நமக்கு தகவல்கள் வந்துள்ளது. 
ஓவ்வொரு வார்டிலும் ஒருவர் என்ற ரீதியில் போட்டியிட்டால் நமது சமூகத்தின் வெற்றி மகத்தானதாக இருக்கும். ஒரே வார்டில் அவரவர் கட்சியில் சீட் கேட்டு வாங்கி நமக்குள் போட்டியிட்டு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதால் எந்த பயனுமில்லை. இதனை நன்றாக மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். இனி வருங்காலங்களில் ஒரே பகுதியில் சீட் கேட்காமல் அனைத்துப் பகுதியிலும் வியாப்பித்திருக்கும் வகையில் நம்மை தயார் படுத்திக் கொள்ளவேண்டும். 

நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வழக்கம்போல திராவிடக் கட்சிகள் வரிந்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி வேலைப்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். நமது சமூக வேட்பாளர்களாக மதுரை மாநகராட்சிக்கு மூன்று நபர்களும் திண்டுக்கல் மாநகராட்சிக்கு ஆறு நபர்களும் சேலம், தஞ்சை, பாளை, பெரியகுளம் ஆகியவற்றிற்கு தலா ஒரு நபரும் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடுவதாகவும் திமுக சார்பில் மதுரை மாநகராட்சிக்கு மூன்று இடமும் பாஜக, தமாகா சார்பில் ஒன்றிரண்டு இடங்களும் கிடைத்துள்ளதாக  நமக்கு தகவல்கள் வந்துள்ளது. 


ஓவ்வொரு வார்டிலும் ஒருவர் என்ற ரீதியில் போட்டியிட்டால் நமது சமூகத்தின் வெற்றி மகத்தானதாக இருக்கும். ஒரே வார்டில் அவரவர் கட்சியில் சீட் கேட்டு வாங்கி நமக்குள் போட்டியிட்டு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதால் எந்த பயனுமில்லை. இதனை நன்றாக மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். இனி வருங்காலங்களில் ஒரே பகுதியில் சீட் கேட்காமல் அனைத்துப் பகுதியிலும் வியாப்பித்திருக்கும் வகையில் நம்மை தயார் படுத்திக் கொள்ளவேண்டும். 

 

மதுரை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் ஒரு தனிப் பராம்பரியம் உண்டு. மதுரை நகரசபை உருவாகிய காலத்திலிருந்து அதன் தலைமைப் பொறுப்பேற்று மாநகரை அனைத்து துறையிலும் முன்னேற வைத்தது நம் சமூகத்தினர் என்பதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. நகரசபைக்கு வருவாயை பெருக்கியவிதம் தொழில்வளம் கண்ட விதம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் சமுதாய பொறுப்புணர்ச்சி என்று அனைத்து துறையில் நமது சமூகம் கால் பதிக்காத இடமே இல்லை.


இன்றைய அரசியலில் நமது பங்கு அறவே இல்லாமல்போய் அவ்வப்போது ஒருவர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அதற்கு காரணம் நாம்தான். நம்மிடைய பொதுநலம குறைந்து சுயநலம் பெருகியுள்ளது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அதுவும் அரசியல் ஈடுபாடு அறவே அற்றுப்போய்விட்டது. எந்தக் கட்சியிலும் நம்மை ஈடுப்படுத்திக் கொள்ள நாம் தயாராக இல்லை. கட்சி மேலிடம் நமக்கு வேட்பாளராக சீட் கொடுக்க முற்பட்டாலும் கட்சிகளில் பெயர் சொல்லும் அளவிற்கோ போட்டியிடும் அளவிற்கோ தகுதியான நபர்கள் இல்லாததே நம் சிறுமைக்குக் காரணம். 


இப்போது உள்ளாட்சி தேர்தலில் தனி மனிதனின் செல்வாக்கை வைத்துதான் வெற்றியினை நிர்ணயிக்க முடியும் என்ற உண்மையை உணர்ந்துள்ள கட்சிகள் நன்கு சிந்தித்து வேட்பாளரை நியமித்து வருகின்றனர். எனவே நாமும் நம்முடைய பொறுப்பினை உணர்ந்து வாக்களித்து, நம் சமூக வேட்பாளர்களை வெற்றிப்பெறச் செய்யவும் மேயர், மண்டலத் தலைவர், நகரவைத் தலைவர் போன்ற பதவிகளில் அமரவைத்து அழகுப்பார்க்கவும் பாடுபடவேண்டும் என்பதை உறுதிமொழியாக எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும்.


இனி வருங்காலங்களில் நம்மலான உதவிகளை செய்யும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். அரசியல் கட்சிகளில் நுழைந்து நம்மை முதன்மைப் படுத்திக் கொள்ளவும் எவ்வித தயக்கமின்றி துணிவுடன் களத்தில் இறங்கவேண்டும். அதுவே நம் சமூகத்திற்குப் பெருமை சேர்க்கும்!

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 5 =