Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
puthia adaiyALam...Shreyangam

ஸ்ரேயங்க3ம்:
புதிய அடையாளம்
ஒரு காலத்தில் தொழிலும் வணிகமும் நம் சமூத்தின் இரண்டு கண்களாக இருந்தது. அப்போது கல்வியில் யாரும் அவ்வளவாக அக்கறைக் கொள்ளவில்லை. திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப இப்போது இளைஞர்கள் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கி வெளிநாடுகளில் சென்று சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்விக்காகவும் திருமணத்திற்காகவும் நகர்புறத்தில் உள்ள சொத்துக்களை விற்று செலவிடவேண்டிய கட்டாயச் சூழ்நிலை உருவாகனது. படித்து முடித்து வெளிநாடுகளிலும் சென்னைää பெங்களுர்ää ஹைதராபாத் என்று நம்நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பொருளீட்டத் தொடங்கினார்கள். அதன் மூலம் மீண்டும் இழந்த சொத்துக்களுக்கு இணையாக புதிதாக சொத்துக்களை வாங்கத் தொடங்கினார்கள்.
இது இன்றைய காலக்கட்டத்தில் நாம் கண்முன் காணும் காட்சி. நான் சொல்ல வருவது என்னவென்றால் நமது கலாச்சார தொழில் சிதைந்துவிட்டது. நெசவு நெய்யும் நெசவாளியின் குடும்பம் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்ததால் பிள்ளைகள் மூலம் இப்போது நல்ல வாழ்;க்கை வாழ்ந்து வருகிறார்கள். அவர்களிடம் மீண்டும் நெசவுத் தொழில் செய்யும் ஆர்வமோ அவசியமோ உருவாகும் என்று எதிர்ப்பார்க்க இயலாது. காரணம் அவர்கள் வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருந்து கஷ்ட ஜீவனம் நடத்தி பிள்ளைகளின் வாழ்க்கையை நல்லமுறையில் உருவாக்கித் தர இயலாமல் போனதே. 
இன்னொரு புறம் சுங்குடிப்புடவை தயாரிப்பில் நம்மை மிஞ்ச யாருமில்லை என்ற நிலையிலிருந்து சரிந்து விட்டோம். அந்தத் தொழில் புரிவோரும் எண்ணிக்கையி;ல் மிகவும் குறைந்து விட்டனர். வியாபாரத்தில் கொடிக்கட்டி பறந்தவர்களும் பறந்து போய்விட்டார்கள். முதல் போட்டு தொழில் செய்து லாபம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அறவே அற்றுப்போய்விட்டது. காரணம் இன்றைய அரசியல் சூழ்நிலை. ஆள்பவர்கள் கொண்டுவரும் சட்டங்களும் விதிமுறைகளும் ஒருபுறம். மின்சாரம் பற்றாக்குறை இன்னொருபுறம். 
இதையும் மீறி தொழி;ல் புரிவோரும் வணிகம் செய்வோரும் நட்சத்திரமாக மிளிரவேண்டும் என்றால் அதிர்ஷ்டத்துடன் நிர்வாகத் திறனும் சிறந்த மேலாண்மையும் கொண்டு வங்கிகளின் கடனுதவியை முறையாகப் பெற்று ஈடுபாட்டுடன் செய்யும் தொழிலே தெய்வம் என்றக் கோட்பாட்டில் கடமையும் பொறுப்புணர்வும் கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். நம் சமூகத்திலிருந்து சென்ற தொழில்களும் வணிகமும் மீண்டும் மலரவேண்டும். அதற்காக இன்றைய இளைஞர் சமுதாயம் முனைப்புடன் சிந்தனையை வளர்த்துக் கொண்டு செயல்பட்டால் போதும்!
முதல் போட்டு தொழில் செய்து கஷ்டப்பட்டு லாபம் சம்பாதிப்பதை விட அடுத்தவர் போட்ட முதலில் வேலைசெய்து சம்பளமாக சிறு தொகையைப் பெற்று காலம் தள்ளும் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு சம்பளம் கொடுப்பவரும் உங்களைப் போலவே எண்ணியிருந்தால்….
எனவே இளைய சமுதாயமே! மனதில் உறுதியுடன் தொழில் வணிகம் மேம்படச் சிந்தனை செய்யுங்கள். செயல்படுங்கள்! வெற்றிக் காணுங்கள்! ஒரு சமுதாயத்தின் தொழில் வளர்ச்சியும் வணிகமும்தான் அவர்களை அடையாளம் காட்டும் என்பதை நினைவில் கொண்டு ஆக்கப்பூர்வப் பணியில் ஈடுப்பட்டு ஸெளராஷ்ட்ர சமுதாயத்திற்கு மீண்டும் புதிய அடையாளம் கொடுக்க முன்வாருங்கள்.

ஸ்ரேயங்க3ம்:

Vol.3 16th June 2016 Issue: 20

புதிய அடையாளம்

ஒரு காலத்தில் தொழிலும் வணிகமும் நம் சமூத்தின் இரண்டு கண்களாக இருந்தது. அப்போது கல்வியில் யாரும் அவ்வளவாக அக்கறைக் கொள்ளவில்லை. திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப இப்போது இளைஞர்கள் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கி வெளிநாடுகளில் சென்று சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்விக்காகவும் திருமணத்திற்காகவும் நகர்புறத்தில் உள்ள சொத்துக்களை விற்று செலவிடவேண்டிய கட்டாயச் சூழ்நிலை உருவாகனது. படித்து முடித்து வெளிநாடுகளிலும் சென்னைää பெங்களுர்ää ஹைதராபாத் என்று நம்நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பொருளீட்டத் தொடங்கினார்கள். அதன் மூலம் மீண்டும் இழந்த சொத்துக்களுக்கு இணையாக புதிதாக சொத்துக்களை வாங்கத் தொடங்கினார்கள்.

இது இன்றைய காலக்கட்டத்தில் நாம் கண்முன் காணும் காட்சி. நான் சொல்ல வருவது என்னவென்றால் நமது கலாச்சார தொழில் சிதைந்துவிட்டது. நெசவு நெய்யும் நெசவாளியின் குடும்பம் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்ததால் பிள்ளைகள் மூலம் இப்போது நல்ல வாழ்;க்கை வாழ்ந்து வருகிறார்கள். அவர்களிடம் மீண்டும் நெசவுத் தொழில் செய்யும் ஆர்வமோ அவசியமோ உருவாகும் என்று எதிர்ப்பார்க்க இயலாது. காரணம் அவர்கள் வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருந்து கஷ்ட ஜீவனம் நடத்தி பிள்ளைகளின் வாழ்க்கையை நல்லமுறையில் உருவாக்கித் தர இயலாமல் போனதே. 

இன்னொரு புறம் சுங்குடிப்புடவை தயாரிப்பில் நம்மை மிஞ்ச யாருமில்லை என்ற நிலையிலிருந்து சரிந்து விட்டோம். அந்தத் தொழில் புரிவோரும் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்டனர். வியாபாரத்தில் கொடிக்கட்டி பறந்தவர்களும் பறந்து போய்விட்டார்கள். முதல் போட்டு தொழில் செய்து லாபம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அறவே அற்றுப்போய்விட்டது. காரணம் இன்றைய அரசியல் சூழ்நிலை. ஆள்பவர்கள் கொண்டுவரும் சட்டங்களும் விதிமுறைகளும் ஒருபுறம். மின்சாரம் பற்றாக்குறை இன்னொருபுறம். 

இதையும் மீறி தொழில் புரிவோரும் வணிகம் செய்வோரும் நட்சத்திரமாக மிளிரவேண்டும் என்றால் அதிர்ஷ்டத்துடன் நிர்வாகத் திறனும் சிறந்த மேலாண்மையும் கொண்டு வங்கிகளின் கடனுதவியை முறையாகப் பெற்று ஈடுபாட்டுடன் செய்யும் தொழிலே தெய்வம் என்றக் கோட்பாட்டில் கடமையும் பொறுப்புணர்வும் கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். நம் சமூகத்திலிருந்து சென்ற தொழில்களும் வணிகமும் மீண்டும் மலரவேண்டும். அதற்காக இன்றைய இளைஞர் சமுதாயம் முனைப்புடன் சிந்தனையை வளர்த்துக் கொண்டு செயல்பட்டால் போதும்!

முதல் போட்டு தொழில் செய்து கஷ்டப்பட்டு லாபம் சம்பாதிப்பதை விட அடுத்தவர் போட்ட முதலில் வேலைசெய்து சம்பளமாக சிறு தொகையைப் பெற்று காலம் தள்ளும் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு சம்பளம் கொடுப்பவரும் உங்களைப் போலவே எண்ணியிருந்தால்….

எனவே இளைய சமுதாயமே! மனதில் உறுதியுடன் தொழில் வணிகம் மேம்படச் சிந்தனை செய்யுங்கள். செயல்படுங்கள்! வெற்றிக் காணுங்கள்! ஒரு சமுதாயத்தின் தொழில் வளர்ச்சியும் வணிகமும்தான் அவர்களை அடையாளம் காட்டும் என்பதை நினைவில் கொண்டு ஆக்கப்பூர்வப் பணியில் ஈடுப்பட்டு ஸெளராஷ்ட்ர சமுதாயத்திற்கு மீண்டும் புதிய அடையாளம் கொடுக்க முன்வாருங்கள்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 5 =