Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
maraikkappatta uNmai?

மறைக்கப்பட்ட உண்மை?

 

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் 2003 டிசம்பர் மாத இதழ் அருள்மிகு அன்னை ஸ்ரீசாரதா தேவியின் 150வது ஆண்டு சிறப்பு மலராக வெளிவந்தது. அந்த மலரில் குறிப்பிடப்பட்டிருந்த கே.ஆர். ராமாச்சாரி என்பவர் ஸெளராஷ்ட்ரர். புதுச்சேரி சௌராஷ்ட்ர சபைத் தலைவர் திரு. ஜி.ஆர். ரவீந்திரன் என்னை நேரில் சந்தித்தபோது இந்த குறிப்புப்பற்றி சொல்லியவுடன் இதனை சரியாக விசாரித்து வெளியிட வேண்டும் என்று எனக்குள் ஆர்வம் அதிகமானது. அவரே எனக்கு இந்த குறிப்பினை ஜெராக்ஸ் எடுத்து அனுப்பி வைத்தார். 

 


1911-இல் ஸ்ரீசாரதாதேவி மதுரைக்கு விஜயம் செய்தபோது தெப்பக்குளம் பகுதியில் காமராசர் சாலை 145-ஆம் எண் வீட்டில் தங்கினார்.
அது  மதுரை நகராட்சியின் தலைவராக 1910 முதல் 1913 வரை பணியாற்றிய ராவ்சாகிப் கே.வி. ராமாச்சாரிää டீ.யு. அவர்களின் இல்லம் ஆகும்.
கப்போலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை ராமாச்சாரியின் நண்பர் ஆவார். வ.உ.சி.யும்  அவரும் ஸ்டீம்ஷிப் நாவிகேஷன் கம்பெனியின் கப்பலைச் சிங்கப்பூருக்கு செலுத்த விரும்பினர்.
ஆங்கில அரசுக்கு எதிராக கப்பல் ஓட்டியதால் வ.உ.சி கைது செய்யப்பட்டார். ராமாச்சாரி பிரிட்டிஷ் கவுன்சிலின் உறுப்பினராக இருந்ததால் கைது செய்யப்படாமல் தப்பினார்.
ராமாச்சாரி மதுரை சௌராஷ்ட்ர சபையை நிறுவி அதன் முதல் தலைவரானார். சௌராஷ்ட்ர மக்களில் முதல் பட்டதாரியும் இவரே.
மதுரையிலுள்ள வீடுகளுக்கு முதன்முதலில் மின்சாரத்தை ஏற்பாடு செய்தார் அவர். திரு. ராமாச்சாரி 1926இல் தமது 58வது வயதில் காலமானார். அப்போது அவர் தமிழ்நாடடின் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.       - சுவாமி யதாத்மானந்தர்.

1911-இல் ஸ்ரீசாரதாதேவி மதுரைக்கு விஜயம் செய்தபோது தெப்பக்குளம் பகுதியில் காமராசர் சாலை 145-ஆம் எண் வீட்டில் தங்கினார்.

அது  மதுரை நகராட்சியின் தலைவராக 1910 முதல் 1913 வரை பணியாற்றிய ராவ்சாகிப் கே.வி. ராமாச்சாரி, B.A. அவர்களின் இல்லம் ஆகும்.

கப்போலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை ராமாச்சாரியின் நண்பர் ஆவார். வ.உ.சி.யும்  அவரும் ஸ்டீம்ஷிப் நாவிகேஷன் கம்பெனியின் கப்பலைச் சிங்கப்பூருக்கு செலுத்த விரும்பினர்.

ஆங்கில அரசுக்கு எதிராக கப்பல் ஓட்டியதால் வ.உ.சி கைது செய்யப்பட்டார். ராமாச்சாரி பிரிட்டிஷ் கவுன்சிலின் உறுப்பினராக இருந்ததால் கைது செய்யப்படாமல் தப்பினார்.

ராமாச்சாரி மதுரை சௌராஷ்ட்ர சபையை நிறுவி அதன் முதல் தலைவரானார். சௌராஷ்ட்ர மக்களில் முதல் பட்டதாரியும் இவரே.

மதுரையிலுள்ள வீடுகளுக்கு முதன்முதலில் மின்சாரத்தை ஏற்பாடு செய்தார் அவர். திரு. ராமாச்சாரி 1926இல் தமது 58வது வயதில் காலமானார். அப்போது அவர் தமிழ்நாடடின் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.                                           - சுவாமி யதாத்மானந்தர்.


வரலாற்றுச் செய்திகளை வெளியிடும் முன்னர் நன்கு விசாரித்து அறிந்து ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் பல கோணங்களில் உண்மை நிலையை அறிய முற்பட்டேன். வ.உ.சி. வாழ்க்கை வரலாற்றில் இந்த நண்பரை பற்றி ஒரு வரி கூட சொல்லப்படவில்லை. சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி தொடங்கியது முதல் இறுதி வரை இவரை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அதன் பங்குதாரர் விபரங்களில் கூட ராமாச்சாரி பற்றி எந்தச் செய்தியும் இல்லை. அப்படியானால் இந்த செய்தி மறைக்கப்பட்ட உண்மையா என்ற ஐயம் மேலிட்டது. உலகம் முழுவதும் வியாப்பித்துள்ள இராமகிருஷ்ண மடத்தின் சார்பில் வெளியிடப்படும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழில் ஆதாரமின்றி எந்த செய்தியும் வெளி வராது என்ற நம்பிக்கையில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகியை அணுகி எந்த ஆதாரத்தை வைத்து ராமாச்சாரியை பற்றி எழுதினீர்கள் என்று கேட்டபோது அவர்தான் ராமாச்சாரியின் வாரிசுகள் கொடுத்தத் தகவலின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை விளக்கமாக கூறினார். அவர் கொடுத்த விபரப்படி தற்போது நம்மிடைய பிரபலமாக இருக்கும் திரு. ஜனார்தனன் அவரது மனைவி வழக்கறிஞர் திருமதி பிருந்தா ஆகியோரை சந்தித்தேன்.


மதுரை இராமியா குடும்பத்தில் பிறந்த இவர்கள் ஏற்கனவே நம் சமூகத்திற்கு நன்கு அறிமுகமானவர்களே. திருமதி பிருந்தா ஜனார்தனன் பலமுறை நம் சமூக ஸ்தாபனங்கள் மற்றும் சட்டமன்ற தேர்தலில் நின்று அறிமுகமானவர்தான். ஜனார்தனன் அவர்கள் அவருடைய தந்தையார் சுரேந்திரநாதாச்சாரி, அவருடைய தந்தை ராமாச்சாரி பற்றிய விபரங்களை சொல்லக் கேட்டிருப்பதாகவும் அவர் அறிந்த விபரங்களை ஆர்வமுடன் சொன்னார். அந்தத் தகவலின் அடிப்படையில் இந்தக் கட்டுரை அமைகிறது.


1861ஆம் ஆண்டு பிறந்த ராமாச்சாரி ஸெளராஷ்ட்ர சமூகத்தின் முதல் பட்டதாரி. இவர் இவரது தந்தை இவருக்கு அளித்த மாபெரும் சொத்து இவரது கல்விதான். இவர் தனது வாழ்நாளில் 18 வகையான தொழில்கள் செய்து சிறந்த தொழிலதிபராக விளங்கியுள்ளார். இவர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அருகில் இலக்கம் 145 எண்ணுள்ள வீட்டில் வசித்து வந்தார். பிரிட்டிஷ் அரசு இவரது அறிவுக்கூர்மையை மெச்சி இவருக்கு ராவ்சாகிப் விருதினை வழங்கியுள்ளது. மேலும் இவர் பிரிட்டிஷ் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். சென்னை மாகாணத்தின் மேலவை உறுப்பினராகவும் (MLC) இருந்துள்ளார். 


மதுரை நகரசபையானபோது 1910 முதல் 1913 வரை அதன் முதல் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றி பல சாதனைகளைப் புரிந்துள்ளார். அந்தக் காலத்திலேயே போக்குவரத்து தொடர்பான அறிவினை மக்களுக்கு ஊட்டினார். குறிப்பாக வாகனங்கள் இடதுபுறமாகச் செல்லவேண்டும் (Keep Left) என்ற பாரம்பரியத்தை மக்கள் மனதில் பதியும்படி செய்தார். மேலும் மதுரையில் வீடுகளுக்கு முதன்முதலில் மின்சாரத்தைப் பெற்றுத் தந்தவரும் இவரே. 


இவர் நகரசபையின் தலைவராக இருந்த சமயம் 1911ல் அன்னை சாரதாதேவி மதுரைக்கு விஜயம் செய்தார். அது சமயம் இவரது இல்லத்தில்தான் அவர் தங்கினார். ராமாச்சாரிதான் அன்னையை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் பின்னர் இராமேஸ்வரத்திற்கும் அழைத்துச் சென்றதாக தன்னுடைய சிறிய வயதில் கூறியதை சுரேந்திரநாதாச்சாரி பெருமையுடன் கூறியுள்ளர்.  அந்த வீடு சுரேந்திரநாதாச்சாரி அவர்களின் தமையனார் கோபாலச்சாரி அவர்கள் பங்குக்கு பிரித்து கொடுக்கப்பட்டு பின்னாளில் அதாவது 1944ல் மாணிக்கவாசகநாடார் அவர்களிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் மாணிக்கவாசகநாடாரின் இரண்டு புதல்வர்கள் காசிராசன் மற்றும் மரு. விவேகானந்தன் இந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் ராமாச்சாரியின் வாரிசுகளை இந்த வீட்டிற்கு அழைத்து சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் கௌரவித்ததாக பெருமிதத்துடன் ஜனார்தனன்-பிருந்தா தம்பதியர்கள் கூறினார்கள். அந்த வீட்டின் முகப்பில் அன்னை சாரதாதேவி தங்கியதை நினைவு கூர்ந்து கல்வெட்டு பதித்துள்ளதாகவும் கூறினார்கள்.


கோபாலாச்சாரியும் ஒரு சிறந்த தேசபக்தர். இவரது காலத்தில் சித்தரஞ்சன்தாஸ், சுப்பிரமணியசிவா ஆகியோரும் இந்த வீட்டில் வந்து தங்கியுள்ளனர். இன்று இவரது புதல்வர் குமரேந்திரா காரைக்குடியில் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் அன்னை சாரதாதேவி தங்கியதை ஏனோ ஒரு பெருமையாக நினைவு கூர்வதில்லை.


ஸெளராஷ்ட்ர மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க ஓர் அமைப்புத் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு மதுரையில் ஸெளராஷ்ட்ர ஸபையை உருவாக்கி அதில் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். பின்னாளில் இந்த அமைப்பின் அவசியத்தை உணர்ந்து மற்ற ஊர்களில் வாழும் ஸெளராஷ்ட்ர மக்களும் தத்தம் ஊர்களில் ஸெளராஷ்ட்ர சபையை உருவாக்கினார்கள். அனைத்து ஊர்களிலும் ஸெளராஷ்ட்ர சபை உருவாக இவர் ஒரு முன்னுதாரணம் என்றால் மிகையாகாது. 


இவர் ஒரு சிறந்த தேசபக்தர். இவர் கப்பலோட்டிய தமிழன் என்று உலகமே போற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நண்பராவார். சிதம்பரம் பிள்ளை சிங்கப்பூருக்கு கடல்மார்க்கமாக வணிகத்தொடர்பினை விஸ்தரிக்க பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக கப்பல் போக்குவரத்துத் தொடங்கியபோது ராமாச்சாரியின் பங்கு பெரிதும் குறிப்பிடத்தக்கது. சுதேசி ஸ்டீம்ஷிப் நாவிகேஷன் கம்பெனியின் பிரதான பங்குதாரர்களில் இவரும் ஒருவர் என்பதை ராமாச்சாரியின் மகன் கே.வி.ஆர். சுரேந்திராநாதாச்சாரி தமது 91வயதில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். பிள்ளையவர்கள் ஆங்கில அரசுக்கு எதிராக கப்பல் ஓட்டியதால் கைது செய்யப்பட்டார். ராமாச்சாரி பிரிட்டிஷ் கவுன்சில் உறுப்பினராக இருந்த காரணத்தால் கைதிலிருந்து தப்பினார் என்பதை நினைவு கூர்ந்ததாக அவரது மகன் ஜனார்தனன் மருமகள் பிருந்தா  கூறினார்கள். 

ராமாச்சாரி 1926ல் தமது 58வது வயதில் காலமானார்.

ஸெளராஷ்ட்ர சமூகத்தில் பிறந்து பொது வாழ்க்கையில் ஈடுப்பட்டு பல சாதனைகள் புரிந்த ராமாச்சாரியைப்பற்றி வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு வரி கூட சொல்லப்படவில்லை. சுதேசி ஸ்டீம்ஷிப் நாவிகேஷன் கம்பெனி தொடங்கிய காலம் முதல் முடிவுற்ற காலம்வரை இவரது பங்குப்பற்றிய செய்திகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் ஐயமுற்று மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று நிர்வாகியைச் சந்தித்து கேட்டப்போது அவர்கள் பெற்ற பேட்டியின் பிரதி ஒன்றைக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ராமாச்சாரியின் வாரிசுகள் தற்சமயம் யார் இருக்கிறார்கள் என்று அறிந்து இந்த மறைக்கப்பட்ட உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளேன். 


இதுபோல நம் சமூக முன்னோர்களின் பெருமைகள் காக்கப்பட வேண்டும். அவர்களுடைய அரிய பணிகள் நமக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக அமையவேண்டும் என்பதற்காக இதுபோன்ற சரித்திரம் படைத்த சான்றோர்களின் செய்திகள் கிடைத்தால் அவர்கள் பற்றிய குறிப்புகள் ஆதாரத்துடன் கிடைத்தால் நிச்சயமாக இன்றயை தலைமுறையினர் மற்றும் வரும் தலைமுறையினரும் தொடர்ந்து அறிந்துகொள்ளும் வகையில் பிரசுரம் செய்யப்படும். அவரவர்கள் ஊர்களில் சமூகப்பெருமையை மேலோங்கச் செய்த சான்றோர்கள் யார் என்பதை அறிய முற்படுங்கள். அறிந்த பின் ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகைக்கு தகவல் கொடுங்கள். 


முன்னோர் சொல்லை பொன்னைப் போல் போற்றவும் அதன் வழி நடந்து ஒன்றுப்பட்டு புதிய சமுதாயத்திற்கு வழிவகைச் செய்வோம். 

 

User Comments
அனகன் பாபு, ஆஸ்திர
மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்வதில் \"சௌராஷ்டிரா டைம்\" இன் ஆர்வத்தையும் சமூக பொறுப்பையும் மனதார பாராட்டுகிறேன். தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளையும், குறிப்பாக சமூக முன்னேற்றத்திற்கு தடையாய் நிற்கும் நிகழ்வுகளையும் மக்கள் மத்தியில் வெளிக்கொணர்ந்து சமூக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் மேன்மைக்கும் தங்களின் பத்திரிக்கை கொண்டு உதவிட ஆசிரியரை அன்புடன் வேண்டுகிறேன்.
Rajkumar Ovrm, Madurai
Hon'ble Ramachary kurchi likkiriyo visayam chokkat sey. rhatthagon thenga sevan Maraikkappatta Unmaiees. thanks
Perumal Nee. Su. Paramakudi
நண்பர் ஞானேஸ்வரன் அவர்களுக்கு.. சௌராஸ்ட்ர டைம் படித்தேன்.. திரு கே வி ராமாச்சாரி அவர்களின் பதிவு வரலாற்றில் உண்டு. பாலவநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரைத்தேவர் 2000 பங்குகளை ரூ.50,000க்கு வாங்கினார். மதுரை செளராஷ்டிரா சபையின் தலைவர் கே.வி.ராமாச்சாரி ரூ.1250க்கு 50 பங்குகளை வாங்கினார்.இதில் நாட்டுப் பற்றாளர்கள் எவ்வளவு பேர் கலந்து கொண்டு பங்குகளை வாங்கி பரங்கியர்களுக்கு எதிராக நமது கப்பல் வணிகத்தைப் போற்றினர் என்பது தான். ஆனால் மக்களோ இலவசத்தை நம்பினர். நீண்ட காலப் போராட்டங்கள் பல வடிவில் உருக்கொண்டு வெற்றிபெற்றதால் நாம் விடுதலை அடைந்தோம். இதில் பாரதி,வ.உ.சி ஆகியோரின் பங்கு அளவிடதற்கரியது; போற்றுதலுக்குரியது.
Information
Name
Comments
 
Verification Code
3 + 5 =