Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
batjet....Shreyangam 3/2

 

ஸ்ரேயங்க3ம்:
பட்ஜெட் 2017 – கண்ணோட்டம்
மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தவுடன் பட்ஜெட் பற்றிய விமர்சனங்கள் ஒவ்வொரு கட்சியினரும் செய்து கொண்டிருப்பார்கள். அத்துடன் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொழில் வர்த்தக சங்கம் மற்றும் பொது நிறுவனங்கள் பட்ஜெட் பற்றிய விளக்கக் கூட்டம் நடத்துவதுண்டு. இந்த ஆண்டு தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு அசாதாரணச் சூழல் காரணமாக பட்ஜெட் பற்றியே மறந்துவிட்டோம். 
இந்த மத்திய அரசு பட்ஜெட் ஒரு புது மாதிரியை சந்தித்துள்ளது. இதற்கு முந்தைய பட்ஜெட் வரை முன்னர் ஆங்கிலேயர்கள் காட்டிய வழியை பின்பற்றி முதலில் இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பின்னர் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த மரபினை மீறி இந்த பாஜகா அரசு இரண்டையும் ஒன்றாக்கி பொது பட்ஜெட்டிலேயே தாக்கல் செய்து மகத்தான சாதனையை செய்துள்ளது வரவேற்கத் தக்கது. நம்மை அடிமைக் கொண்ட ஆட்சியினரையே பின்பற்றி செல்வதைவிட நமக்கென ஒரு தனி மரபை உருவாக்க வேண்டும் என்பதில் இந்த மோடி அரசு முனைப்புடன் செயல்பட்டு இரயில்வே பட்ஜெட்டையும் பொது பட்ஜெட்டையும் இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்து வெற்றிக் கண்டுள்ளது. அனைவராலும் என்பதைவிட பெரும்பாலான பொதுமக்கள் வரவேற்கக்கூடிய இந்த பட்ஜெட் நடுத்தர மக்களிடையே வருமானவரி பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் என்பதை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. 
தனிநபர் வருமானவரி உச்சவரம்பில் மாற்றம் செய்யாமல் இரண்டரை லட்சம் முதல் ஐந்து லட்சம் வரையுள்ள வருமானத்திற்கு வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதமாக குறைத்துள்ளது சம்பளம் பெறுவோரிடையே நல்ல வரவேற்பைபெறும் என்பது உறுதி. விவசாயத்திற்கு பத்துலட்சம் கோடி கடன் வழங்கும் இலக்குää குறு சிறு நிறுவனங்களுக்கு 5 சதம் வரிகுறைப்புää 3லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்கு தடை போன்ற அறிவிப்புக்களால் நடுத்தர மக்களின் ஆதரவை இந்த பட்ஜெட் பெறலாம். ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூபாய் 2287 கோடி ஒதுக்கபட்டுள்ளது. மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ48000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறைக்கு 78000கோடி ஒதுக்கீடுää மகளிர் குழந்தைகள் நலன் மேம்பாட்டிற்கு 20சதம் கூடுதலான நிதி ஓதுக்கீடுää அறிவியல் துறைக்கு ஒதுக்கீடுää பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடுää அரசியல் கட்சிகள் நன்கொடை ரூ2000ஃ-க்கு மேல் ரொக்கமாக வாங்க தடை போன்று பற்பல முக்கிய அம்சங்களால் இந்த பட்ஜெட் வடக்கில் நடக்கும் தேர்தலால் விமர்சனங்களும் விளக்கங்களும் இல்லாமல் அமைதியாக உள்ளது என்று எண்ணலாம். தேர்தல் முடிவுகளுக்குப்பின் இதன் முழு விளக்கங்களும் விமர்சனங்களும் எதிர்பார்க்கலாம்.

ஸ்ரேயங்க3ம்:


 

 Vol.4 3rd February  2016 Issue: 11


 

பட்ஜெட் 2017 – கண்ணோட்டம்

 

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தவுடன் ஒவ்வொரு கட்சியினரும் பட்ஜெட் பற்றிய விமர்சனங்கள்  செய்து கொண்டிருப்பார்கள். அத்துடன் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொழில் வர்த்தக சங்கம் மற்றும் பொது நிறுவனங்கள் பட்ஜெட் பற்றிய விளக்கக் கூட்டம் நடத்துவதுண்டு. இந்த ஆண்டு தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு அசாதாரணச் சூழல் காரணமாக பட்ஜெட் பற்றியே மறந்துவிட்டோம். 


இந்த மத்திய அரசு பட்ஜெட் ஒரு புது மாதிரியை சந்தித்துள்ளது. இதற்கு முந்தைய பட்ஜெட் வரை முன்னர் ஆங்கிலேயர்கள் காட்டிய வழியை பின்பற்றி முதலில் இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பின்னர் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த மரபினை மீறி இந்த பாஜகா அரசு இரண்டையும் ஒன்றாக்கி பொது பட்ஜெட்டிலேயே தாக்கல் செய்து மகத்தான சாதனையை செய்துள்ளது வரவேற்கத் தக்கது. நம்மை அடிமைக் கொண்ட ஆட்சியினரையே பின்பற்றி செல்வதைவிட நமக்கென ஒரு தனி மரபை உருவாக்க வேண்டும் என்பதில் இந்த மோடி அரசு முனைப்புடன் செயல்பட்டு இரயில்வே பட்ஜெட்டையும் பொது பட்ஜெட்டையும் இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்து வெற்றிக் கண்டுள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் வரவேற்கக்கூடிய இந்த பட்ஜெட் நடுத்தர மக்களிடையே வருமானவரி பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் என்பதை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. 


தனிநபர் வருமானவரி உச்சவரம்பில் மாற்றம் செய்யாமல் இரண்டரை லட்சம் முதல் ஐந்து லட்சம் வரையுள்ள வருமானத்திற்கு வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதமாக குறைத்துள்ளது சம்பளம் பெறுவோரிடையே நல்ல வரவேற்பைபெறும் என்பது உறுதி. விவசாயத்திற்கு பத்துலட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கு, குறு, சிறு நிறுவனங்களுக்கு 5 சதம் வரிகுறைப்பு, 3லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்கு தடை போன்ற அறிவிப்புக்களால் நடுத்தர மக்களின் ஆதரவை இந்த பட்ஜெட் பெறலாம். ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூபாய் 2,287 கோடி ஒதுக்கபட்டுள்ளது. மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ48,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறைக்கு 78,000கோடி ஒதுக்கீடு, மகளிர் குழந்தைகள் நலன் மேம்பாட்டிற்கு 20சதம் கூடுதலான நிதி ஓதுக்கீடு, அறிவியல் துறைக்கு ஒதுக்கீடு, பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு, அரசியல் கட்சிகள் நன்கொடை ரூ2000/-க்கு மேல் ரொக்கமாக வாங்க தடை போன்று பற்பல முக்கிய அம்சங்களால் இந்த பட்ஜெட் வடக்கில் நடக்கும் தேர்தலால் விமர்சனங்களும் விளக்கங்களும் இல்லாமல் அமைதியாக உள்ளது என்று எண்ணலாம். தேர்தல் முடிவுகளுக்குப்பின் இதன் முழு விளக்கங்களும் விமர்சனங்களும் எதிர்பார்க்கலாம்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 5 =