Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
theLivAna .....Shreyangam 16-01

 

ஸ்ரேயங்க3ம்:


        Vol.4 16th January  2016 Issue: 10


 

தெளிவான சிந்தனை-தீர்க்கமான முடிவு!

ஸெளராஷ்ட்ர மாணவ-மாணவியர்களே பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நாளை அரசு அறிவித்துவிட்டது. உங்களுடைய உயர் கல்வி அனைத்திற்கும் அடிப்படையும் அஸ்திவாரமும் இந்த பத்துää பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள்தான் என்பதை மனதில் கொண்டு படிக்கத் தொடங்குங்கள். மிக எளிதான முறையில் படித்து அதிக மதிப்பெண் பெறுவது என்பது சிதம்பர ரகசியம் அல்ல. ஐந்தாண்டுகள் நடைபெற்ற தேர்வுகளின் வினாத்தாட்களை சேகரித்து வையுங்கள். அதிகமாக கேட்கப்பட்டுள்ள வினாக்கள் எவை எவையென்று என்று பட்டியல் இடுங்கள். 

குறைந்த மதிப்பெண் வினாக்களை முழுமையாக தேர்ந்தெடுத்து சரியாக விடை எழுதினாலே போதும். சாதரணமாக படிப்பவர்கள் எளிதில் தேர்ச்சிப் பெற்றுவிடலாம். ஆனால் உயர்கல்வியில் சேருவதற்கு அந்த மதிப்பெண் போதாது. முழுமையாக அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். நூற்றுக்கு நூறு என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். சதம் அடிப்பவர்களுக்கு காத்திருக்கிறது நம் சமூக அமைப்புகளிடமிருந்து பரிசுகள் கல்வி உதவித்தொகைள் என்று ஏராளமாக உள்ளது. 

அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவ-மாணவியர்க்கு உயர்கல்வியில் அவர்கள் தேர்ந்தெடுத்த பாடப்பிரிவுகள் மிக எளிதில் கிடைத்துவிடும். ஒரு பொறியாளராகவோ டாக்டராகவோ வேண்டும் என்ற சிந்தனையிலிருந்து நம் சமூக இப்போது லேசாக விடுபடத் தொடங்கியுள்ளது. ஆடிட்டிங், பயோ கெமிஸ்டிரி, பயோ மெடிக்கல், கெமிக்கல் இன்ஜினியரிங் போன்று இன்னும் பல பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அதிக உள்ளன. வேலைவாய்ப்புள்ள சில கல்விகள் நாம் இன்னதென்று நாம் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். அதன் அடிப்படையில் நமது உயர்கல்வியின் தேர்ந்தெடுப்புகள் இருக்கவேண்டும்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று எண்ணுபவர்கள் அவர்களது சிந்தனையில் தெளிவு இருக்கவேண்டும். தீர்க்கமான முடிவுகளை எடுத்து படித்து நல்ல நிலையில் வளர்ந்து இந்த நாட்டிற்கும் நம் சமூகத்திற்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்பதை மனதில் கொண்டு எல்லாவளமும் பெற ஸெளராஷ்ட்ர டைம் வாழ்த்துகிறது. 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 8 =