Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni 16-01

சல்நி களட்நி:

ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளின் 174வது ஜெயந்தி விழா 08-01-2014ம் நாள் மதுரை ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகள் ஆன்மீக எழுச்சி இயக்கத்தினரால் காதக்கிணறில் அமைந்துள்ள பிருந்தாவன திருக்கோவிலில் நடைபெற்றது. இவ்விழாவில் கே.எல்.என் பாலிடெக்னிக் கல்லூரியின் கௌரவக் காரியதரிசி ராதாகிருஷ்ணன் ஸெளராஷ்ட்ர மத்ய சபை பொதுக்காரியதரிசி ராமசுப்பிரமணியன் நாயகி இயக்கத்தின் மாநில அமைப்பாளர் பிரகாஷ்குமார் மாநில தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டனர். 

காலையில் நடைபெற்ற கோபூஜை, கஜ பூஜை, அஷ்வ பூஜைகள் முறையே நடைபெற்றது. விநாயகமிஷன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் தனது மனைவி மகன் ஆகியோருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கே.ஆர் ராமாச்சாரி  குழுவினரால் ஹோமம் நடைபெற்றது. தேனி ஸெளராஷ்ட்ரக் கல்லூரி சேர்மன் ஜவஹர்லால், மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன், ரிஷிகேஷ் கார்த்திகாஷ்ரம ஸ்ரீராகேஷானந்த சுவாமிகள், புதுவை ஆசிரம ஸ்ரீதத்வபோதானந்தா சுவாமிகள், நிலையூர் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகள், திருநகர் ஸ்ரீரமேஷ் சுவாமிகள், இராமநாதபுரம் ஸ்ரீகிருஷ்ணானந்தஜி சுவாமிகள், மதுரை பதஞ்சலி யோகா ஸ்ரீபாலாஜி சுவாமிகள் மற்றும் டாக்டர் விஜயலட்சுமி ஆகியோர்கள் கலந்து கொள்ள வேதபாராயணம்ää பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் 108 கலச பூஜை, திருமஞ்சனம் நடைபெற்றது. கோவிந்த தாச சேவா சமாஜத்தினரால் பிருந்தாவனக் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. 

ஆன்மீக அன்பர்கள் அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பித்தனர். மதியம் விழாக்குழு சார்பில் சிறப்பான முறையில் அன்னதான விருந்து உபசாரமும் நடைபெற்றது.


 

புதுச்சேரியில் ஸெளராஷ்ட்ர சபைத் தலைவர் ரவீந்திரன் தனது சொந்த முயற்சியில் ஆண்டுதோறும் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளின் ஜெயந்தியின் போது மாபெரும் ஆராதனை விழா நடத்தி வருகிறார். இந்த ஆண்டு சென்ற 11-01-2017 அன்று மாலை நாயகி சுவாமிகளின் திருவுருவப்படத்துடன் ஊர்வலமாகப் புறப்பட்டு ஸ்ரீசின்மய சூர்யன் கோயில் மண்டபத்தை அடைந்து விழா தொடங்கியது. தேவநாத ராமனுஜதாசன் அவர்களால் அஷ்டோத்ரம் சொல்லப்பட்டு தீபாரதனை நடந்தது. மதுரை கீதாபாரதி அவர்கள் குழுவினரால் நாயகி சுவாமிகளின் சங்கீர்த்தனை நிகழ்ச்சி நடைப்பெற்றது. பேராசிரியர் தா.கு. சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் மாபெரும் பட்டிமன்றம் நடைப்பெற்றது. தொடர்ந்து மங்கள தீபாரதனையும் சிறப்பான விருந்தும் நடைப்பெற்றது. விழாவில் பேராசிரியர் தாமோதரன், கிருஷ்ணமாச்சாரி, புதுவை வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


 

திருபுவனம் ஸெளராஷ்ட்ர கல்வி அறக்கட்டளை மற்றும் ஸெளராஷ்ட்ர இலக்கியப் பதிப்பகம் இணைந்து சென்ற 18-12-2016 அன்று ராசிபுரம் கூச்சுன் கே.எல். அனந்தராமன் எழுதிய ஸெளராஷ்ட்ர சினிமா கீதுந் என்னும் பாட்டுப்புத்தகம் வெளியிட்ப்பட்டது. ஸெளராஷ்ட்ர சபைத் தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். எம்.எஸ்.ரமணி வரவேற்புரையாற்றினார். அறக்கட்டளை தலைவர் மோகன்ராம் மற்றும் அய்யன்சாமி முன்னிலை வகித்தனர். டி.எம்.சௌந்தரராஜன் பாடிய சினிமா பாடல்கள் சிலவற்றை ஸெளராஷ்ட்ர மொழியில் மொழிப் பெயர்த்து நூலாசிரியர் தொகுத்தளித்துள்ளார். இவரை திருபுவனத்தைச் சேர்ந்த ஜோதி, நாராயணசாமி, சேதுராமன், ஹரிதாஸ், சுதர்சன் மற்றும் வி.நாராயணசாமி ஆகியோர் பாராட்டி பேசினார்கள். ராசிபுரம் கூச்சுன் அனந்தராமன் அவர்களின் ஏற்புரைக்குப் பின் பாஸ்கர் நன்றி கூறினார்.


 

தஞ்சை மாவட்டம் பளு, வலு மற்றும் ஆணழகன் சங்கத்துடன் இணைக்கப்பட்ட திருபுவனம் ஸெளராஷ்ட்ர சபை உடற்பயிற்சி நிலையம் அனுமார் ஜெயந்தியை முன்னிட்டு தனது 59வது ஆண்டுவிழாவையும் இணைந்து கொண்டாடியது. நிலையத்தின் தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினர். திருபுவனம் சௌராஷ்ட்ர சபை துணைச்செயலாளர் சீனிவாசன் நிர்வாகக்குழு உறுப்பினர் ரமேஷ் உடற்பயிற்சி நிலையத் துணைத்தலைவர் ரமணி மற்றும் நிலைய ஆசிரியர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் நிலைய ஆசிரியர் ஹரிதாஸ் போட்டிகளை தொடங்கி வைத்தார். பளு தூக்குதல், வலு தூக்குதல், தண்டால், பஸ்கி, ஆணழகன் மற்றும் குண்டு எறிதல் போன்ற வீர விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றது. உதயகுமார், முரளி, உதயகுமார், சாந்தாராமன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். போட்டிகளில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு செந்தில்குமார், சேதுராமன், நரசிம்மன் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். தேவதாஸ் நன்றி கூறினார்.


 

மதுரை யானைமலை தேவபாறை ஸ்ரீபாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகின்ற 02-02-2017 வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. 31-01-2017 காலை 10.30 மணிமுதல் அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நந்தி பூஜை நடைபெறும் 01-02-2017 காலை 9.00 மணிமுதல் யாகசாலை பூஜைகளும் 02-02-2017 காலை 6.00 மணிமுதல் மூர்த்தி ஹோமங்கள் பூர்ணாஹ{தி முடித்து 9.40 மணிக்குமேல் 10.10 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறும். 

திருப்பணிக் குழுவின் தலைமை பொறுப்பினை ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் தலைவரும் கோவை ஈசா பொறியியல் கல்லூரியின் தலைவருமான ஈஸ்வரமூர்த்தி ஏற்றுள்ளார். கௌரவத்தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராம்பாபு உபதலைவராக ஸ்ரீதரமூர்த்திää பொருளாளராக ரகுநாத் காரியதரிசியாக ராஜன் மற்றும் ஜெயந்தி ஆகியோருடன் கமிட்டி உறுப்பினர்களாக சாந்தமூர்த்தி, கிருஷ்ணசாமி, ஜீவன்லால், கிரிதரன், வாசுதேவன், கிருஷ்ணமூர்த்தி, மனோகரன், கணேஷ்பாபு, கோபிநாத், ஆனந்த்பாபு ஆகியோர் இருந்து இவ்விழாவினை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது. இத்திருப்பணிக்கான நன்கொடைகள் அனுப்புவோர் கீழே தரப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தலாம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஒத்தக்கடை கிளை, A/c No. 35917699394 IFSC Code: SBIN0002246 MICR Code: 625002008. 


டெல்லியிலிருக்கும் ஸெளராஷ்ட்ர அசோசியேசனின் பொதுக்குழுக் கூட்டமும் புதிய நிர்வாகிக்களுக்கான தேர்தலும் சென்ற 22-01-20107 அன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி பொதுச்செயலாளர் ராமசுப்பரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிஷோர்குமார் தலைவராகவும் வரதராஜன் துணைத்தலைவராகவும் ஆர்.கணேஷ் காரியதரிசியாகவும் சித்ராசரவணன் துணைக் காரியதரிசியாகவும் கே.ஆர்.கணேஷ் பாபு பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் லீலா சந்திரசேகர். ராதா அமர், நரேஷ்குமார், வேணுகோபால் ஆகியோர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக முகநூல் வாயிலாக ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் தலைவரும் பொதுக்காரியதரிசியும் தகவல் தெரிவித்துள்ளனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் ஸெளராஷ்ட்ர டைம் சார்பில் வாழ்த்துக்கள்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 6 =