Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
moondru paNigaL ....ShrEyangam

ஸ்ரேயங்க3ம்:
மூன்று பணிகள் + ஸ்ரீராம்சேகர் = மத்ய சபை
ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் தற்போதைய நிர்வாகம் பதவியேற்றதும் மதுரையில் முதலாவது நிர்வாகக் குழுக்கூட்டம் நடைப்பெற்றது. அப்போது கிட்டத்தட்ட நிர்வாகக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் கலந்து கொண்டதாக எண்ணுகிறேன். கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் விரைவாக ஒரு நிர்வாகக்குழு உறுப்பினர் நுழைகிறார். அனைத்து உறுப்பினர்களின் அறிமுகமும் கௌரவிக்கப்படும் நிகழ்ச்சியும் நிறைவேறியவுடன் தனக்குள்ள வேலைப்பளு கட்சிப்பணி போன்ற தவிர்க்க முடியாத காரணத்தினாலும்தான் கூட்டம் நிறைவு பெறும்வரை இருக்க கால அவகாசமில்லை என்றும் அடுத்த விமானத்திலேயே சென்னை செல்லவேண்டும் என்றுகூறி அனைவரிடமும் விடைப்பெற்றுச் செல்கிறார்.
அவரைத் தடுத்து அப்போது நான் பேசியபோது மத்ய சபையின் கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் சமூகப் பணியில்; தன்னுடைய பங்கு அவசியம் இருக்க வேண்டும் என்ற காரணத்தாலும் காலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்ததாகவும் முதல் கூட்டத்தில் தன்னுடைய வருகையையும் சமூகப்பணி செய்யும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தவே கலந்து கொண்டதாக புன்னகையுடன் கூறியபோது அவர் ஒரு சமூக ஆர்வலர் என்பதை உறுதிப்படுத்தியது.
சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்ற மகாநாட்டின்போது இவர் ஆற்றியப்பணி அனைவராலும் பேசப்பட்டது. ஒரு முழுநேர அரசியல்வாதி போன்ற தோரணையுடன் மிடுக்கான தோற்றத்தில் கனிவானப் பேச்சால் கவர்ந்திழுக்கப்பட்டார் அப்போது! இப்போது அவரே அரசியலிலிருந்து அனைத்துப் பொறுப்புக்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தன்னுடைய சமுதாயத்திற்கு பணியாற்ற விரும்புவதாக சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அதன்படி ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தேர்தலில் தலைமை ஸ்தானத்தை விரும்பி தேர்வு செய்துள்ளார். தமிழ்நாட்டில் ஸெளராஷ்ட்ரர்கள் வாழுகின்ற அனைத்து ஊர்களுக்கும் சென்று உறுப்பினர்களைச் சந்தித்து தன்னுடைய கருத்தினைக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். யார்அவர்? தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா?
அவர்தான் தஞ்சையை பிறப்பிடமாகக் கொண்டு சென்னை தாம்பரத்தில் இருந்துவரும் பாணால். ஸ்ரீராம்சேகர். இவர் இந்திய விமானப்படையில் பணிபுரிந்துள்ளார். பின்னர் மேலாண்மைத் துறையிலும் சட்டத்துறையிலும் பணிபுரிந்துள்ளார். தற்போது கட்டுமானத் துறையில் ஈடுபட்டு தென்சென்னையில் சுமார் 120க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். பல துறைகளில் பொறுப்பான கௌரவப் பதவிகள் வகித்து வந்த இவர் அனைத்திற்கும் முத்தாய்ப்பாக நம் சமூகப்பணியில் தீவிரமாக ஈடுபடுகிறார். மத்ய சபையின் நிர்வாகத்தில் உள்ள தவறுகளை சீர்திருத்தவும் அதிக அளவில் உறுப்பினர்களை இணைத்து வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்றும் ஸெளராஷ்ட்ர பவன் என்று அனைத்து ஊர்களிலும் ஸெளராஷ்ட்ரர்களுக்காக உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது பிரதான லட்சியம். இதன் முதல் பகுதியாக சென்னையில் ஸெளராஷ்ட்ர பவன் கட்டுவதற்கு இடமும் பார்த்துவிட்டதாக ஆர்வம் பொங்க கூறும் ஸ்ரீராம்சேகரின் தலைமையை ஏற்க உறுப்பினர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். 
இறுதியாக அவர் சொன்ன வார்த்தைகள நெஞ்சில் நிறைந்துள்ளது. நான் அதிகமாக சொல்லவிரும்பவில்;லை. இப்போதைக்கு இந்த மூன்று பணிகளை பிரதான பணியாகக் கொண்டு செயல்பட உள்ளேன். பின்னர் அனைவரது ஆதரவுடன் மேலும் சிறப்பாக பல பணிகள் செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். அதற்கு சமூக மக்கள் பத்திரிகைகள் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ஸ்ரேயங்க3ம்:

Vol.5 16th December  2017 Issue: 8

மூன்று பணிகள் + ஸ்ரீராம்சேகர் = மத்ய சபை

ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் தற்போதைய நிர்வாகம் பதவியேற்றதும் மதுரையில் முதலாவது நிர்வாகக் குழுக்கூட்டம் நடைப்பெற்றது. அப்போது கிட்டத்தட்ட நிர்வாகக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் கலந்து கொண்டதாக எண்ணுகிறேன். கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் விரைவாக ஒரு நிர்வாகக்குழு உறுப்பினர் நுழைகிறார். அனைத்து உறுப்பினர்களின் அறிமுகமும் கௌரவிக்கப்படும் நிகழ்ச்சியும் நிறைவேறியவுடன் தனக்குள்ள வேலைப்பளு கட்சிப்பணி போன்ற தவிர்க்க முடியாத காரணத்தினாலும்தான் கூட்டம் நிறைவு பெறும்வரை இருக்க கால அவகாசமில்லை என்றும் அடுத்த விமானத்திலேயே சென்னை செல்லவேண்டும் என்றுகூறி அனைவரிடமும் விடைப்பெற்றுச் செல்கிறார்.

அவரைத் தடுத்து அப்போது நான் பேசியபோது மத்ய சபையின் கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் சமூகப் பணியில் தன்னுடைய பங்கு அவசியம் இருக்க வேண்டும் என்ற காரணத்தாலும் காலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்ததாகவும் முதல் கூட்டத்தில் தன்னுடைய வருகையையும் சமூகப்பணி செய்யும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தவே கலந்து கொண்டதாக புன்னகையுடன் கூறியபோது அவர் ஒரு சமூக ஆர்வலர் என்பதை உறுதிப்படுத்தியது.

சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்ற மகாநாட்டின்போது இவர் ஆற்றியப்பணி அனைவராலும் பேசப்பட்டது. ஒரு முழுநேர அரசியல்வாதி போன்ற தோரணையுடன் மிடுக்கான தோற்றத்தில் கனிவானப் பேச்சால் கவர்ந்திழுக்கப்பட்டார் அப்போது! இப்போது அவரே அரசியலிலிருந்து அனைத்துப் பொறுப்புக்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தன்னுடைய சமுதாயத்திற்கு பணியாற்ற விரும்புவதாக சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அதன்படி ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தேர்தலில் தலைமை ஸ்தானத்தை விரும்பி தேர்வு செய்துள்ளார். தமிழ்நாட்டில் ஸெளராஷ்ட்ரர்கள் வாழுகின்ற அனைத்து ஊர்களுக்கும் சென்று உறுப்பினர்களைச் சந்தித்து தன்னுடைய கருத்தினைக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். யார்அவர்? தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா?

அவர்தான் தஞ்சையை பிறப்பிடமாகக் கொண்டு சென்னை தாம்பரத்தில் இருந்துவரும் பாணால். ஸ்ரீராம்சேகர். இவர் இந்திய விமானப்படையில் பணிபுரிந்துள்ளார். பின்னர் மேலாண்மைத் துறையிலும் சட்டத்துறையிலும் பணிபுரிந்துள்ளார். தற்போது கட்டுமானத் துறையில் ஈடுபட்டு தென்சென்னையில் சுமார் 120க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். பல துறைகளில் பொறுப்பான கௌரவப் பதவிகள் வகித்து வந்த இவர் அனைத்திற்கும் முத்தாய்ப்பாக நம் சமூகப்பணியில் தீவிரமாக ஈடுபடுகிறார். மத்ய சபையின் நிர்வாகத்தில் உள்ள தவறுகளை சீர்திருத்தவும் அதிக அளவில் உறுப்பினர்களை இணைத்து வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்றும் ஸெளராஷ்ட்ர பவன் என்று அனைத்து ஊர்களிலும் ஸெளராஷ்ட்ரர்களுக்காக உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது பிரதான லட்சியம். இதன் முதல் பகுதியாக சென்னையில் ஸெளராஷ்ட்ர பவன் கட்டுவதற்கு இடமும் பார்த்துவிட்டதாக ஆர்வம் பொங்க கூறும் ஸ்ரீராம்சேகரின் தலைமையை ஏற்க உறுப்பினர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். 

இறுதியாக அவர் சொன்ன வார்த்தைகள நெஞ்சில் நிறைந்துள்ளது. நான் அதிகமாக சொல்ல விரும்பவில்லை. இப்போதைக்கு இந்த மூன்று பணிகளை பிரதான பணியாகக் கொண்டு செயல்பட உள்ளேன். பின்னர் அனைவரது ஆதரவுடன் மேலும் சிறப்பாக பல பணிகள் செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். அதற்கு சமூக மக்கள் பத்திரிகைகள் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

User Comments
T A Ramesh, Writer, Pondicherry
Nice introduction is given about the presidential candidate for the Sourahsta Madya Sabha in your editorail. All the best and wish good future for Sourashtra Community !
Information
Name
Comments
 
Verification Code
1 + 9 =