Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
enu iso - vk oru sagaptham

விகே ஒரு சகாப்தம்

மதுரையில் பாரத் இண்டஸ்ட்ரீஸ் ஒர்க்ஸ் என்னும் நிறுவனம் விளம்பர பைகள், போர்டுகள் தயாரிப்பில் முன்னணியாக செயல்பட்டு வந்தது. அதன் நிறுவனர் ராமலிங்கம் ஸெளராஷ்ட்ர சமூகத்தின் ஆன்மீக சேவையில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். விஸ்வ ஹிந்து பரிட்சத், ராமகிருஷ்ண தபோவனம், சித்தாஸ்ரமம் போன்றவற்றில் இவருடைய பங்கு இருந்தது. இவருடைய துணைவியார் ராஜேஸ்வரி. இவர்கள் இருவருக்கும் பிறந்த கடைசி மகன் தான் விஜயகுமார். வயது 47. விஜயகுமார் இளம்வயது முதல் அனைவரிடத்திலும் அன்போடு பழகும் தன்மை கொண்டதால் இவரை விகே என்று செல்லமாக அழைப்பதுண்டு. இவர் கோவை சிறுமுகையில் உள்ள கேஜி குரூப் ஆப் கம்பெனிகளில் ஒன்றான ஆலையில் பேக்டரி மானேஜராக பணிபுரிந்து வருகிறார்.

 

இவருக்கும்  திருமணமாகி 16வயதில் 101 படிக்கும் ஒரு ஆண் மற்றும் 13வயதில் 9ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகள். விகேயின் மனைவி சமீபத்தில்தான் தன் பிள்ளைகள் படிக்கின்ற பள்ளியின் அலுவலத்தில் பணியில் சேர்ந்துள்ளார். இப்படி மகிழ்வோடு இருந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் மறக்க முடியாத சோகம் அன்று நிகழும் என்று யாரும் எதிர்ப்பார்த்திருக்க முடியாது. ஆம்! வெள்ளத்தால் பேரிடர் ஏற்பட்டது போல இவர்கள் வாழ்க்கையிலும் ஒரு பேரிடர் விபத்தாக வந்தது.

 

டிசம்பர் 29, 2015 மறக்க முடியாத நாள். அன்று காலை சிறுமுகையிலிருந்து அன்னூர் செல்லும் வழியில் இவருடைய டூவீலரை படுவேகமாக எதிரில் வந்த டூவீலர் மோதியதில் பெரும் விபத்துக்குள்ளானார். விபத்து நடந்த உடனே அவருக்குப்பின்னால் வந்து கொண்டிருந்த அவருடைய சக ஊழியர்கள் உடனே கேஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்துள்ளனர். கேஜி மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு விகேயின் உயிரைக் காப்பாற்ற போராடியும் இயலவில்லை. இந்த விபத்தில் விகே தலையில் அடிப்பட்டு மூளையைத் தாக்கியதில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் பக்தவத்சலம் உடல் உறுப்புகளை தானமாக தரும்படி விகேயின் குடும்பத்தாரிடம் கேட்டார். அதற்கு விகேயின் 11ஆம் வகுப்பு படிக்கும் மகன் உட்பட அவரது மனைவி ஸ்ரீதேவி மற்றும் தாயார் சகோதரர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.

 

விகேயின் மகனுக்கு எப்படி இப்படி ஒரு மனிதநேயம் மனதில் உருவானது என்று விகேயின் மனைவியிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் வியப்பில் ஆழ்த்தியது. சென்னையில் ஒரு நாள் படத்தை பார்த்த பின் இப்படி எல்லாம் முடியுமா என்று தனது தந்தையிடம் குழந்தைகள் கேட்க வீணாக மண்ணுக்கு இரையாகும் உடல் உறுப்புக்கள் மற்ற மனிதர்களின் உயிரைக் காக்க பயன்படும்போது நாம் அதை தானமாக மனமுவந்து தருவதில் எவ்வித தவறுமில்லை. ஒரு வேளை நமக்கே அந்த சோதனை வந்தால் சிந்திக்காமல் நம் உடல் உறுப்புக்களை தானமாக கொடுத்துவிட வேண்டும் என்று விகே தன் குழந்தைகளுக்கு அவ்வப்போது கூறி வந்துள்ளதை அவரது மனைவி கண்களில் நீர்மல்க கூறினார். 

 

நாம் அப்பாவின் உடல் உறுப்புக்களை கொடுத்து விடலாம் அம்மா. நீ எதற்கும் கவலைப்படாதே. உன்னைக் காப்பாற்ற நான் இருக்கிறேன் என்று தன் மகன் கூறியதை பெருமிதத்துடன் கூறினார் விகேயின் மனைவி.

மறுநாள் புதன் கிழமையன்று இவர்களுடைய சம்மதம் கிடைத்தவுடன் விகேயின் உடலிலிருந்து இறந்தவர் உடலிலிருந்து உறுப்புக்களை அகற்றும் நிபுணர்களின் குழு வந்தவுடன் துரிதமாக உறுப்புக்களை வெளியிலெடுத்து ஒரு சிறுநீரகம் அதே மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம்  பிஎஸ்ஜி மருத்துவமனைக்கும் கல்லீரல் கோவை மருத்துவமனைக்கும் தோல்கள் கங்கா மருத்துவமனைக்கும் கண்கள் சங்கரா கண் மருத்துவமனைக்குமாக பிரித்து வழங்கப்பட்டது. 

Organs of the brain dead patient G.R. Vijayakumar were retrieved and sent to four hospitals in the city on Wednesday. Photo: S. Siva Saravanan

இந்த உடலுறுப்புக்களை தாங்கிக்கொண்டு செல்லும் பெட்டிகளை மருத்துவமனை வேனில் ஏற்றி அந்தந்த மருத்துவமனைக்குச் சென்று வழங்கும் வழித்தடங்களில் நகர் காவல்துறையினர் போக்குவரத்தில் மாற்றம் செய்து இடையூறு இல்லாமல் பாதுகாப்புடன் செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தது அவருடைய மனிதநேயத்திற்கு கிடைத்த மரியாதை என்றே சொல்லலாம். 

 

ஸெளராஷ்ட்ரர்கள் என்றுமே அன்பும் கருணையும் பிறர்க்குவாழ் என்னும் தாரக மந்திரத்தையும் கடைப்பிடிப்பவர்கள் என்பதை இந்த சம்பவம் உறுதி செய்வதோடு மனிதநேயத்தை வாழ வைத்ததில் விகேயின் குடும்பத்தார்க்கு அனைவரும் பாராட்டியே ஆகவேண்டும். இந்த செய்தி கோவை சென்னை நகரிலுள்ள அனைத்து செய்தி தாள்களில் வெளிவந்துள்ளது. நம் ஸெளராஷ்ட்ரப் பத்திரிகைகளில் ஸெளராஷ்ட்ர டைம் அவர்களுடைய மனிதநேயத்திற்கு தலைவணங்கி முழுச்செய்தியும் வெளியிட்டு கௌரவிக்கிறது. விஜயகுமாரை இழந்து தவிக்கும் மனைவியும் அவர்தம் குழந்தைகளும் என்றும் மனநிறைவுடன் அனைத்து செல்வங்களும் பெற்று மகிழ்வோடு வாழ இறைவன் அருள்புரியட்டும்.

உடலுறுப்புக்களால் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் விகே ஒரு சகாப்தம் என்றும் நம் சமூகத்திற்கு ஒரு வழிக்காட்டி என்றும் சொன்னால் அது மிகையாகாது.

             -சூரியாஞானேஸ்வர்

 

 

 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 9 =