Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
samuka nalan....ShrEyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.5 1st December  2017 Issue: 7


 

சமூக நலன் கருதி.......

ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் தேர்தல் பரபரப்பு மதுரையிலிருந்து தொடங்கும் என எதிர்பார்த்ததில் ஏமாற்றமே மிஞ்சியது. அரசியல்வாதிகள் போல் பஞ்சாயத்து செய்து போட்டியிட்டவர்களை எல்லாம் வாபஸ் பெற வைத்தது என்னவோ ஒரு சாமர்த்தியம் என்றாலும் இது போன்ற நடவடிக்கைகள் ஒரு தவறான முன்னுதாரணமாகி விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 

சிறிய மற்றும் உறுப்பினர்கள் குறைவாக உள்ள ஊர்களில் போட்டியிடுவோர் இல்லாத பட்சத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் வரவேற்கப் படுவதில் நியாயமுண்டு. ஆனால் போட்டியிட்டு, பழைய புதிய உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்டி, ஜனநாயக முறையில் சமூகப் பணியாற்றுவோரை இனங்கண்டு தேர்வு செய்யும் முறை அறவே மறுக்கப் படுவது எந்த விதத்திலும் நியாயமாகப்படவில்லை. இதற்கு பாராட்டுக்கள் வேறு! இப்படிதான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் எதற்காக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்? அவர்கள் உரிமையை பறிக்கவேண்டும்?

 

பதவி பந்தாவிற்காக தானும் தன் சார்பில் நாலைந்து பேரையும் வேட்பாளர்களாக போட்டியிடச் செய்வதும் பின்னர் சமூக நலன் கருதி என்ற வார்த்தையை பயன்படுத்தி அவர்களை வாபஸ் பெறச் செய்வதும் ஜனநாயக விரோதச் செயலாகும். சென்ற முறை தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் எத்தனைப் பேர் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். வெறும் விசிட்டிங் கார்டில் பதவியின் பெயரை போட்டுக்கொண்டு மாலைமரியாதைக்கு காத்திருக்கும் கும்பலோடு ஒருவராக ஆகிவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில்தான் எனது கருத்தினைப் பதிவு செய்கிறேன்.

 

ஸெளராஷ்ட்ர மத்ய சபை என்ற பேனரின் சக்தி மிகப்பெரியது. இதில் சிறப்பாக பணியாற்றுவோர் பங்கு கொள்ளும்போதுதான் சபையே சிறக்கிறது. இன்னும் சில ஊர்களி;ல் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த ஊர் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுவோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் சேர்ந்து தலைவர், பொதுக்காரியதரிசி, பொக்கிஷதார் மற்றும் துணைத் தலைவர்கள்ää செயலர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

 

அதிலும் போட்டியின்றி தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம். ஓப்புக்கு மற்றவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். ஆனால் நிர்வாகம் சிறப்பாக அமையவேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்ப்பார்ப்பு! இதை புரிந்து கொண்டு புதிய நிர்வாகம் தன்னுடைய செயல்பாட்டினை முடுக்கிவிட்டு சமூக நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அர்ப்பணிப்புத் தன்மையடன் செயல்படவேண்டும் என்று ஸெளராஷ்ட்ர டைம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் புதிய நிர்வாகம் செய்யும் அனைத்து சிறப்பான செயல்பாடுகளை பாராட்டுவதுடன் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலிருந்து சிறிதும் தயங்காமல் செயல்படும் என்பதையும் தெளிவுப்படுத்திக் கொள்கிறோம்.

 

ஜனநாயக முறைப்படி உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்போது அவர்கள் உரிமைகளை பறிக்காமல் பாதுகாக்கும் விதத்தில் இனிவரும் காலங்களில் பதவியேற்கும் புதிய நிர்வாகம் விதிமுறைகளை வகுக்கவேண்டும். எல்லாம் சமூக நலன் கருதிதான்.......

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 9 =