Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
ave pothin

வரப்பெற்றோம்:

மதுரை ஸெளராஷ்ட்ர சமூக விழிப்புணர்வு அறக்கட்டளையின் பத்து ஆண்டு சேவைகளைக் குறிப்பிட்டு படங்களுடன் 10வது ஆண்டு விழா மலர் அதன் தலைவர் என்.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ளார். பா4ஷாக் கரந் ஸேவொ ப4க3வாநுக் கரந் ஸேயொ என்றும் ஸெளராஷ்ட்ர மொழி வளர்ச்சியில் தம்மை அர்ப்பணித்து சேவை செய்த லட்சுமணாச்சாரியார்,  தொப்பே. இராமராயின்,  ஓபுளா. ராமானந்தம் ஆகியோர் படங்களும் மலரின் அட்டையில் இடம் பெறறுள்ளதைப் பார்க்கும்போது ஒரு முறை புரட்டிப் பார்க்கலாம் என்று தோன்றும். உள்ளே சமூகப்பிரமுகர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுரையும் இடம் பெற்றுள்ளது. நடப்பில் உள்ள தமிழ் சொற்களுக்குரிய ஸெளராஷ்ட்ர மொழி சொற்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார். ஸெளராஷ்ட்ர மொழி எழுத்துக்களை எழுதி பழக பயிற்சி பக்கங்கள் இடம் பெற்றுள்ளது சிறப்பாக உள்ளது. இந்த மலரை பெற 94428 23698 என்ற செல் எண்ணிற்கு டயல் செய்து விபரம் அறியலாம்.


 

பாஷாபிமானி:ஸெளராஷ்ட்ர இலக்கிய மாத இதழின் தீபாவளி மலர் 2015

 

பாஷாபிமானி ஸெளராஷ்ட்ர இலக்கிய மாத இதழின் தீபாவளி மலர் வரப்பெற்றோம். துவாரகநாத், விஸ்வநாதன், ஆத்மாராவ், ஸரோஜா சுந்தரராஜன், சக்கரவர்த்தி ஆகியோரின் படைப்புகள் இடம் பெற்றுள்ளது. சாகித்ய அகாடமியில் ஸெளராஷ்ட்ர மொழி புத்தகங்களுக்கு பாஷா சம்மான் விருது விரைவில் வழங்கப்படும் என்ற செய்தியுடன் கூடிய அகாடமியின் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்கள். 

 

ஆங்கு3ம் ரெக3து த4மந்லெந்து

ஆயுஸ{ பொ4ர்லி சலந்லெந்து

பொ4ங்கு3ரொ ஸொகநு மாய்பா4ஷாகெ

ப்ரசார் கர்லி கபடீ3ஸ்திரு - என்ற விஸ்வநாதனின் கவிதையில் மொழிப்பற்றில் கொண்டுள்ள வைராக்கியம் மிளிர்கிறது.

அந்தாதி முறையில் ஸெளராஷ்ட்ர மொழியில் வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளது ரசிக்க முடிகிறது. 

முகுந்து ஆத்மாராவ் கவிதையில்

தீ3காநுந் தொ2வ்லி ஒண்ட்யெ ஸப்3து3ஸ் அய்காரெஸ்

தீ3தொ3ளாந் தொ2வ்லி ஒண்ட்யெ லோஸ{ஸ் தெ3க்காரெஸ்

தீ3பாய்ஞ் தொ2வ்லி ஒண்ட்யெ போகுமுஸ் சலாரெஸ்

ஒண்டெ ஜீப் தொ2வ்லி ஸஸர் வத்தாந் கராரெஸ் - என்பதில் சமுதாயத்தில் வீண் பேச்சு பேசி காலத்தைப் போக்குவோரை சாடியுள்ள விதம் சிறப்பாக உள்ளது. 

இன்னும் மொழியார்வத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஏராளமான சிறப்புப்பகுதிகள் இடம்பெற்றுள்ளது. தீபாவளி மலர் விலை ரூ. 20.00 தனிப்பிரதி ரூ. 10.00 ஆண்டுச்சந்தா ரூ.125.00 கிடைக்குமிடம்: 7B, சின்னக்கடை தெரு, மதுரை – 625001.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 5 =