Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni kaLatni 1-11

வர்த்தகக் கண்காட்சி

பெங்களுரிலிருக்கும் கர்நாடக யுனைடெட் ஸெளராஷ்ட்ர ஆர்கனைசேஷனின் (குஸோ) முதலாவது வர்த்தகக் கண்காட்சி மற்றும் ஜாதக பரிவர்த்தனை மேளா 30-9-17 மற்றும் 1-10-17 ஆகிய இரண்டு நாட்கள் பெங்களுர் சேஷாத்திரிபுரம், ஏ.வி.வரதாச்சாரி மெமோரியல் ஆர்ட் அசோசியேஷன் அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது. 
வர்த்தகக் கண்காட்சியை மதுரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராம்பாபு திறந்து வைத்தார். அதுசமயம் நடைபெற்ற மருத்துவ முகாமை காந்திநகர் மாமன்ற உறுப்பினர் ஸ்ரீமதி லதா குவார் ராதோடு திறந்து வைத்தார். ராம்பாபு தமது உரையில் குஸோவின் இம்முயற்சியைப் பாராட்டியும் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்று வாழ்த்தி உற்சாகப்படுத்தினார். ஸ்ரீமதி லதாகுவார் ராதோடு அவர்கள் உரையில் குஸோவின் சேவையைப் பாராட்டி ஸெளராஷ்;ட்;ர சமூகத்திற்கு துறைச்சார்ந்த உதவிகளை செய்து தருவதாக கூறினார். 
இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம்களை மதுரை சோலை எஸ்.ஆர்.அமர்நாத் அவர்களும் இரத்த தான முகாமை எம்.விஜயகுமாரும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். மணிபால் மருத்துவமனையினரின் மருத்துவ முகாமும் வாசன் ஐ கேர் சார்பில் கண் பரிசோதனையும், இரத்ததான முகாமை மகாலட்சுமி லே அவுட் லயன்ஸ் கிளப் உதவியுடனும் சிறப்பாக நடைப்பெற்றது.
விழாவின் 2ஆம் நாள் உலகாளவிய ஜாதக பரிவர்த்தனை மேளா 26வது முறையாக நடைப்பெற்றது. மேளா நடக்கும் நடைமுறை பற்றி விளக்கமாக குஸோ தலைவர் கோபாலகிருஷ்ணன் எடுத்துரைத்தார். ஊர் வேறுபாடின்றி சம்பந்தம் செய்துகொள்ளும்படி முன்னாள் தலைவர் பதி கேட்டுக்கொண்டார். பொதுச்செயலாளர் ஜெயபாலன் குஸோ செய்து வரும் சேவைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேளாவில் பெரும் எண்ணிக்கையில் பெற்றோர்கள் கலந்து கொண்டு ஜாதகங்களை பதிவு செய்தனர். மதுரை ஜோதிடர் விஜிகுமார் பொருத்தும் பார்த்து சொல்ல மணமகன் மணமகள் பெற்றோர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது. 
இரண்டு நாட்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் காலை, மதியம், மாலை, இரவு என்று அனைத்து வேளைக்கு சிறப்பாக விருந்து உபசாரம் நடைப்பெற்றது.  

பெங்களுரிலிருக்கும் கர்நாடக யுனைடெட் ஸெளராஷ்ட்ர ஆர்கனைசேஷனின் (குஸோ) முதலாவது  வர்த்தகக்  கண்காட்சி  மற்றும்  ஜாதக  பரிவர்த்தனை  மேளா  30 - 9 - 17  மற்றும் 1-10-17 ஆகிய இரண்டு நாட்கள் பெங்களுர் சேஷாத்திரிபுரம், ஏ.வி.வரதாச்சாரி மெமோரியல் ஆர்ட் அசோசியேஷன் அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது. 

வர்த்தகக் கண்காட்சியை மதுரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராம்பாபு திறந்து வைத்தார். அதுசமயம் நடைபெற்ற மருத்துவ முகாமை காந்திநகர் மாமன்ற உறுப்பினர் ஸ்ரீமதி லதா குவார் ராதோடு திறந்து வைத்தார். ராம்பாபு தமது உரையில் குஸோவின் இம்முயற்சியைப் பாராட்டியும் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்று வாழ்த்தி உற்சாகப்படுத்தினார். ஸ்ரீமதி லதாகுவார் ராதோடு அவர்கள் உரையில் குஸோவின் சேவையைப் பாராட்டி ஸெளராஷ்ட்ர சமூகத்திற்கு துறைச்சார்ந்த உதவிகளை செய்து தருவதாக கூறினார். 

இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம்களை மதுரை சோலை எஸ்.ஆர்.அமர்நாத் அவர்களும் இரத்த தான முகாமை எம்.விஜயகுமாரும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். மணிபால் மருத்துவமனையினரின் மருத்துவ முகாமும் வாசன் ஐ கேர் சார்பில் கண் பரிசோதனையும், இரத்ததான முகாமை மகாலட்சுமி லே அவுட் லயன்ஸ் கிளப் உதவியுடனும் சிறப்பாக நடைப்பெற்றது.

விழாவின் 2ஆம் நாள் உலகாளவிய ஜாதக பரிவர்த்தனை மேளா 26வது முறையாக நடைப்பெற்றது. மேளா நடக்கும் நடைமுறை பற்றி விளக்கமாக குஸோ தலைவர் கோபாலகிருஷ்ணன் எடுத்துரைத்தார். ஊர் வேறுபாடின்றி சம்பந்தம் செய்துகொள்ளும்படி முன்னாள் தலைவர் பதி கேட்டுக்கொண்டார். பொதுச்செயலாளர் ஜெயபாலன் குஸோ செய்து வரும் சேவைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேளாவில் பெரும் எண்ணிக்கையில் பெற்றோர்கள் கலந்து கொண்டு ஜாதகங்களை பதிவு செய்தனர். மதுரை ஜோதிடர் விஜிகுமார் பொருத்தும் பார்த்து சொல்ல மணமகன் மணமகள் பெற்றோர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது. 

இரண்டு நாட்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் காலை, மதியம், மாலை, இரவு என்று அனைத்து வேளைக்கு சிறப்பாக விருந்து உபசாரம் நடைப்பெற்றது.  

ஸெளராஷ்ட்ர சாஹித்ய சம்மேளனம்

ஸெளராஷ்ட்ர சாஹித்ய சம்மேளனத்தின் ஆலோசனைக் கூட்டம் 28-10-17 அன்று மாலையில் மதுரை சோலை ஸ்ரீமுருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேராசிரியர் தாமோதரன் ஏற்பாட்டில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேராசிரியர் கோவர்தனன், கிருஷ்ணமாச்சாரி, உதயமணி ஆசிரியர் சாமி, சரோஜினிகுட்டின், சத்தியமூர்த்தி, ஜனார்தனன், பரசுராமன், விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். டிசம்பர் 26ல் நடைபெற இருக்கும் சாகித்ய சம்மேளனம் குறித்த விவாதங்களின் அடிப்படையில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஸெளராஷ்ட்ரி மொழியில் எழுதி அச்சிடப்பட்ட புத்தகங்களின் கண்காட்சி அமைத்தல், காவிய சங்கீர்த்தனை சமர்ப்பணம் என்னும் நிகழ்ச்சியில் ஸெளராஷ்ட்ரி மொழி இலக்கியப் பாடல்கள் மற்றும் கீர்த்தனைகள் இசைக்குழுவினருடன் வழங்கும் இசை நிகழ்ச்சி, ஸெளராஷ்ட்ரி மொழியின் வட்டார வழக்குகளை முன்னிறுத்தும் வண்ணம் பல்வேறு ஊர்களில் வாழும் சமூக இளைஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் மற்றும் அதில் சிறந்த பேச்சாளர்களுக்கு பரிசு வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இந்த சம்மேளனத்தில் இடம்பெறும்.

மேலும் ஸெளராஷ்ட்ர லிபியில் சமூக இளைஞர்கள் எழுதவும் படிக்கவும் பயிற்சி பெறும் விதமாக அனைத்து ஊர்களிலும் வித்யா பீடங்கள் அமைத்து மொழிப்பயிற்சியை பரவலாக்கும் வகை செய்வதுடன் தகுதி வாய்ந்த ஸெளராஷ்ட்ரி ஆசிரியர்களை அனைத்து ஊர்களிலும் கண்டறிந்து இப்பணிக்கு நியமிப்பதும், ஸெளராஷ்ட்ர இலக்கியங்களைத் தொகுத்து வழங்கும் டிஜிட்டல் பெட்டகம் உருவாக்கத்திற்கு முன்னோடியாக ஜனார்தனன் தமிழில் உருவாக்கியுள்ள டிஜிபுக் குறுந்தகடுகளை காட்சிக்கும் விற்பனைக்கும் வைப்பது போன்ற பணிகளைச் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்களிடமிருந்து நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 8 =