Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
sourashtra ....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:

ஸெளராஷ்ட்ர பத்திரிகைகள் வரலாறு!
ஸெளராஷ்ட்ர ஸமூகத்திற்கு ஒரு பத்திரிகை வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை சமூகத்தில் உறுப்படியாக எந்த பத்திரிகையும் தொடர்ந்து வெளிவருவதில்லை. சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் பத்திரிகையை ஒரு தொழிலாக கொள்ளாமல் சமூகத்திற்கு செய்யும் சேவையாக தங்களை முழு மனதோடு ஈடுபடுத்தி செய்து வருகிறார்கள்(செய்து வந்தார்கள்). அவர்கள் சந்திக்கும் வேதனைகள் சிரமங்கள் பொருளாதார ரீதியாக எதிர்கொள்ளும் கஷ்டங்கள் சொல்லி முடியாது. தொடர்ந்து வெளியிடவேண்டும் என்றால் சமூக மக்களின் ஆதரவுடன் வியாபார பெருமக்களின் நிறுவன விளம்பரங்களை தாராளமாக கொடுத்தால்தான் பத்திரிகைகள் வளர்ச்சியடையும். விளம்பரங்கள் சரிவர கிடைக்காமல் ஆண்டுச் சந்தாவும் சரியான காலத்தில் கிடைக்காமல் போவதும் பத்திரிகைகளை சரியான காலத்திற்கு வெளியீடு செய்ய இயலாமல் போவதற்கான காரணங்களாகும். 
1897ல் முதல் ஸெளராஷ்ட்ர பத்திரிகை ஜில்லடி.வெ.பத்ருசாமி அய்யர் அவர்களால் குடந்தை மித்ரன் என்ற பெயரில் குடந்தையிலிருந்து வெளியிடப்பட்டது. இதுதான் ஆரம்பம். நூறு ஆண்டுகளை கடந்து வந்துள்ள ஸெளராஷ்;ட்ர பத்திரிகை உலகம் இன்னும் சரியாக சமூக மக்களாலும் சமூக ஸ்தாபனங்களாலும் அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை என்ற கசப்பான உண்மையை இந்த இளம்தலைமுறையினர்க்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். இதுவரை நம் சமூகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஸெளராஷ்ட்ர பத்திரிகைகள் தொடங்கப்பட்ட ஆண்டு ஊர் அதன் ஆசிரியர் விபரங்கள் தரப்பட்டுள்ளன.
1. குடந்தை மித்ரன் 1897 குடந்தை – ஜில்லடி.வெ.பத்ருசாமி அய்யர்
2. ஸெளராஷ்ட்ர மித்ரன் 1899 சேலம் - புட்டா. நா. ஆழகார்யர்
3. ஸெளராஷ்ட்ர அபிவர்த்தினி 1918 சென்னை – வி.கே. நன்னய்யர்
4. ஸெளராஷ்ட்ர வாரம் 1922 மதுரை – வி.கே. நன்னய்யர்.
5. ஸெளராஷ்ட்ர விப்ரபந்து 1947 மதுரை – கு.வே. பத்மநாபய்யர்
6. ஸெளராஷ்ட்ர முரசு 1949 சேலம் - ஜி.எம். ரெங்கன்
7. ஸெளராஷ்ட்ர 1949 திருச்சி – எஸ்.கே.ஆர்.பாலாஜி
8. ஸெளராஷ்ட்ரன் 1950 மதுரை – ஆர்.ஹெச்.கிருஷ்ணமூர்த்தி
9. ஸெளராஷ்ட்ர மணி 1951 குடந்தை – பி.ஆர்.கோவிந்தசாமி
10. ஸெளராஷ்ட்ர ஜோதி 1973 மதுரை – சி.ச.குபேந்திரன்
11. ஸெளராஷ்டர நேசன் 1974 மதுரை – மே.சீ.சுப்பிரமணியம்
12. அம்ரெ ஸிங்கதி 1976 சென்னை – மே.சீ.சுப்பிரமணியம்
13. மொதிரெத்து 1975 மதுரை – ஆர்.என்.சதாசிவன்
14. பாஷாபிமானி 1975 மதுரை – டி.வி.குபேந்திரன்
15. ஸ{ரித் 1981 மதுரை – வி.கே.நீலாராவ்
16. ஸெளராஷ்ட்ர டைம் 1984 மதுரை – எஸ்.டி.ஞானேஸ்வரன்
17. ஜுட்டிசன் ஆட்பேஜ் 2000 சென்னை – எஸ்.ராம.ஈஸ்வர்லால்
18. வாய்ஸ் ஆப் குஸோ – பெங்களுர் - ஆர்.என்.சதாசிவன்
19. ஸொந்நா கொடும் - 2013 - பெங்களுர் - ஆர்.என்.சதாசிவன்
20. ஸெளராஷ்ட்ர தீபம் 2004 சேலம் செவ்வாய்ப்பேட்டை – ஆதி.காந்திமாதவன்
21. ஜீக் - 1995 - மதுரை – பி.ஆர்.கணேஷ்
22. ஸெளராஷ்ட்ர மித்ரன் - 2010- மதுரை – மல்லி.பிரேம்நாத்
23. ஸெளராஷ்ட்ர சமூகக் குரல் - திருச்சி - உமாபதி
24. உதயமணி 2016 மதுரை – வி.என்.சாமி
இது தவிர பூஜாமணி என்ற பெயரில் அன்பிற்கினியன் மற்றும் பூஜாதீபம் என்ற பெயரில் ஜனாபாய்கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஸெளராஷ்ட்ரர்களால் ஆன்மீக பத்திரிகைiயும் ஓ என்ற பெயரில் தி.இரா.கிருஷ்ணன் ஆசிரியராக தமிழ் துணுக்கு சிற்றிதழும் நடந்து வந்தது. 
கணினி துறையில் தொழில் நுட்ப வளர்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாத நிலையில் ஸெளராஷ்ட்ரர்களுக்கும் அத்துறையில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. விளைவு மொழி வளர்ச்சி எழுத்துக்களை பயிலும் வகுப்பு இலக்கிய வளர்ச்சி என்று இணைய தளத்தை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினார்கள். உலக அரங்கில் ஸெளராஷ்ட்ரர் என்று ஓர் இனம் உண்டு. அவர்களுக்கு தனியே ஒரு குணம் உண்டு. லிபிää இலக்கியம்ää இலக்கணம் என்று ஏராளமாக இருக்கிறது என்று சொல்லி பட்டியல் காட்டி வந்த நாம் இணையதளத்தைப் பயன்படுத்தி இ-புத்தகமாக வெளியிட்டு பாதுகாக்கும் முயற்சியிலும் பலர் தங்கள் திறமையைக் காட்டத்தொடங்கினர்.
பத்திரிகை உலகில் வெளிநாடுகளில் மருத்துவம்ää பொறியியல்ää விஞ்ஞான ஆய்வுகள் தொடர்பான செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் விதத்தில் இ-பத்திரிகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. அதுபோல் நம் சமூக நிகழ்வுகள் திறமைசாலிகள் சாதனையாளர்கள் தொழிலதிபர்கள் அரசுத்துறையில் பெரிய பதவிகளில் அங்கம் வகிப்பவர்கள் சாகித்ய கர்த்;தாக்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என்று அனைவரையும் அடையாளம் காட்டி உலக அரங்கில் எந்த மூலையில் இருந்தாலும் ஸெளராஷ்ட்ரர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளும் விதத்தில் ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகையாக கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
முன்னதாக எம்.ஆர்.சுரேஷ் ஆசிரியராகக் கொண்டு விஸ்வ ஸெளராஷ்ட்ரம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை அச்சிடப்பட்டு ஸ்கேன் செய்து இணையதளத்தில் வெளியிட்டதை ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாம். ஒன்றிரண்டு இதழ்களே வெளிவந்து பின் தொடர இயலாமல் போனது. 
சமூக மக்கள் தங்களுடைய முழு ஆதரவினை அளிப்பதுடன் வியாபார பெருமக்கள் விளம்பரங்களை கொடுத்து பொருளாதார ரீதியாக உதவுவதுடன் சமூக ஸ்தாபனங்கள் தங்கள் ஸ்தாபன நிகழ்வுகளில் சமூகப்பத்திரிகையாளர்களை கௌரவிக்கும் கண்ணியமான பண்பாட்டினை வளர்த்துக் கொள்ளவேண்டும். அது எவ்வித சுயலாபமின்றி சமூகத்திற்காக பாடுபடும் பத்திரிகையாளர்களை மென்மேலும் உற்சாகப்படுத்துவது போலிருக்கும். அவர்களும் தொய்வின்றி செயலாற்றுவார்கள். ஏன் இங்கு இப்படி ஒரு கருத்தினை கூறுகிறேன் என்று கேட்கலாம். ஸெளராஷ்ட்ர சமூகத்திற்காக எதுவுமே செய்யாமல் ஒருசிலர் மூத்தப்பத்திரிகையாளர் என்று கௌரவிக்கப்படுவது வேதனைக்குரியதாக இருக்கிறது. சமூக ஸ்தாபனங்களின் நிர்வாகிகள் புதியவர்கள். அவர்களுக்கு விஷயம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கௌரவத்தை பெற்றுக் கொள்பவர் நாம் இந்த சமூகத்திற்கு என்ன செய்தோம். இந்த பாராட்டுக்கும் கௌரவத்திற்கு தகுதியுள்ளவன் தானா என்று சிந்திக்கவேண்டும். சதாசர்வ காலமும் சமூகத்தின் சிந்தனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகப்பத்திரிகையாளர்கள் ஒதுக்கப்படுவது வேதனையான அனுபவம். இந்நிலை தொடரக்கூடாது என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஓவ்வொரு பத்திரிகை ஆசிரியர்களும் லாபநோக்கமின்றி தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து பத்திரிகையை நடத்தி வந்துள்ளார்கள். தொடர்ந்து வெளிவரும் பத்திரிகைகளும் சேவை மனப்பான்மையுடன் அர்ப்பணிப்புத் தன்மையில் தங்களை ஈடுப்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். 
எந்த ஒரு மனிதனுக்கும் தான் செய்யும் செயல்பாட்டினை மற்றவர்கள் புகழ்ந்து பாராட்டும்போது ஒருவித உற்சாகமும் இன்னும் செய்யவேண்டும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது என்பது நிதர்சனமான உண்மை. அவ்வகையில் ஸெளராஷ்ட்ர சமூகத்தில் ஸெளராஷ்ட்ரப் பத்திரிகையாளர்கள் கௌரவிக்கப்படவேண்டும்.

Vol.4 1st January  2016 Issue: 9

ஸெளராஷ்ட்ர பத்திரிகைகள்

 கௌரவிக்கப்படவேண்டும்.

ஸெளராஷ்ட்ர ஸமூகத்திற்கு ஒரு பத்திரிகை வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை சமூகத்தில் உறுப்படியாக எந்த பத்திரிகையும் தொடர்ந்து வெளிவருவதில்லை. சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் பத்திரிகையை ஒரு தொழிலாக கொள்ளாமல் சமூகத்திற்கு செய்யும் சேவையாக தங்களை முழு மனதோடு ஈடுபடுத்தி செய்து வருகிறார்கள்(செய்து வந்தார்கள்). அவர்கள் சந்திக்கும் வேதனைகள் சிரமங்கள் பொருளாதார ரீதியாக எதிர்கொள்ளும் கஷ்டங்கள் சொல்லி முடியாது. தொடர்ந்து வெளியிடவேண்டும் என்றால் சமூக மக்களின் ஆதரவுடன் வியாபார பெருமக்களின் நிறுவன விளம்பரங்களை தாராளமாக கொடுத்தால்தான் பத்திரிகைகள் வளர்ச்சியடையும். விளம்பரங்கள் சரிவர கிடைக்காமல் ஆண்டுச் சந்தாவும் சரியான காலத்தில் கிடைக்காமல் போவதும் பத்திரிகைகளை சரியான காலத்திற்கு வெளியீடு செய்ய இயலாமல் போவதற்கான காரணங்களாகும். 

1897ல் முதல் ஸெளராஷ்ட்ர பத்திரிகை ஜில்லடி.வெ.பத்ருசாமி அய்யர் அவர்களால் குடந்தை மித்ரன் என்ற பெயரில் குடந்தையிலிருந்து வெளியிடப்பட்டது. இதுதான் ஆரம்பம். நூறு ஆண்டுகளை கடந்து வந்துள்ள ஸெளராஷ்ட்ர பத்திரிகை உலகம் இன்னும் சரியாக சமூக மக்களாலும் சமூக ஸ்தாபனங்களாலும் அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை என்ற கசப்பான உண்மையை இந்த இளம்தலைமுறையினர்க்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். இதுவரை நம் சமூகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஸெளராஷ்ட்ர பத்திரிகைகள் தொடங்கப்பட்ட ஆண்டு ஊர் அதன் ஆசிரியர் விபரங்கள் தரப்பட்டுள்ளன.

1. குடந்தை மித்ரன் 1897 குடந்தை – ஜில்லடி.வெ.பத்ருசாமி அய்யர்

2. ஸெளராஷ்ட்ர மித்ரன் 1899 சேலம் - புட்டா. நா. ஆழகார்யர்

3. ஸெளராஷ்ட்ர அபிவர்த்தினி 1918 சென்னை – வி.கே. நன்னய்யர்

4. ஸெளராஷ்ட்ர வாரம் 1922 மதுரை – வி.கே. நன்னய்யர்.

5. ஸெளராஷ்ட்ர விப்ரபந்து 1947 மதுரை – கு.வே. பத்மநாபய்யர்

6. ஸெளராஷ்ட்ர முரசு 1949 சேலம் - ஜி.எம். ரெங்கன்

7. ஸெளராஷ்ட்ர 1949 திருச்சி – எஸ்.கே.ஆர்.பாலாஜி

8. ஸெளராஷ்ட்ரன் 1950 மதுரை – ஆர்.ஹெச்.கிருஷ்ணமூர்த்தி

9. ஸெளராஷ்ட்ர மணி 1951 குடந்தை – பி.ஆர்.கோவிந்தசாமி

10. ஸெளராஷ்ட்ர ஜோதி 1973 மதுரை – சி.ச.குபேந்திரன்

11. ஸெளராஷ்டர நேசன் 1974 மதுரை – மே.சீ.சுப்பிரமணியம்

12. அம்ரெ ஸிங்கதி 1976 சென்னை – மே.சீ.சுப்பிரமணியம்

13. மொதிரெத்து 1975 மதுரை – ஆர்.என்.சதாசிவன்

14. பாஷாபிமானி 1975 மதுரை – டி.வி.குபேந்திரன்

15. ஸ{ரித் 1981 மதுரை – வி.கே.நீலாராவ்

16. ஸெளராஷ்ட்ர டைம் 1984 மதுரை – எஸ்.டி.ஞானேஸ்வரன்

17. வாய்ஸ் ஆப் குஸோ–1994-பெங்களுர்-முதலில் நாகபூஷணம் பிறகு ஆர்.என்.சதாசிவன்

18. ஜுட்டிசன் ஆட்பேஜ் 2000 சென்னை – எஸ்.ராம.ஈஸ்வர்லால்

19. ஜாபாலி – 2010 – மதுரை – டி.வி.குபேந்திரன்

20. ஸொந்நா கொடும் - 2013 - பெங்களுர் - ஆர்.என்.சதாசிவன்

21. ஸெளராஷ்ட்ர தீபம் 2004 சேலம் செவ்வாய்ப்பேட்டை – ஆதி.காந்திமாதவன்

22. ஜீக் - 1985 - மதுரை – முதலில் ஓ.கே. ராமானந்தம் பிறகு பி.ஆர்.கணேஷ்

23. ஸெளராஷ்ட்ர மித்ரன் - 2010 - மதுரை–மல்லி.பிரேம்நாத் (ஓ.வி.ஆர்.எம்.ராஜ்குமார்-நிறுவனர்)

24. ஸெளராஷ்ட்ர சமூகக் குரல் - திருச்சி - உமாபதி

25. உதயமணி 2016 மதுரை – வி.என்.சாமி

இவை தவிர கோவையிலிருந்து கே.எ.வெங்கட்ராமன் ஆசிரியராக கோவைமணியும் பூஜாமணி என்ற பெயரில் அன்பிற்கினியன் மற்றும் பூஜாதீபம் என்ற பெயரில் ஜனாபாய்கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஸெளராஷ்ட்ரர்களால் ஆன்மீக பத்திரிகையும் என்ற பெயரில் தி.இரா.கிருஷ்ணன் ஆசிரியராக தமிழ் துணுக்கு சிற்றிதழும் நடந்து வந்தது. இளவல் ஹரிஹரன் தொடுவானம் என்ற பெயரில் ஒரு தமிழ் இலக்கிய மாத இதழை நடத்தி சில இதழ்களையும் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணினி துறையில் தொழில் நுட்ப வளர்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாத நிலையில் ஸெளராஷ்ட்ரர்களுக்கும் அத்துறையில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. விளைவு மொழி வளர்ச்சி எழுத்துக்களை பயிலும் வகுப்பு இலக்கிய வளர்ச்சி என்று இணைய தளத்தை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினார்கள். உலக அரங்கில் ஸெளராஷ்ட்ரர் என்று ஓர் இனம் உண்டு. அவர்களுக்கு தனியே ஒரு குணம் உண்டு. லிபி, இலக்கியம்,  இலக்கணம் என்று ஏராளமாக இருக்கிறது என்று சொல்லி பட்டியல் காட்டி வந்த நாம் இணையதளத்தைப் பயன்படுத்தி இ-புத்தகமாக வெளியிட்டு பாதுகாக்கும் முயற்சியிலும் பலர் தங்கள் திறமையைக் காட்டத்தொடங்கினர்.

பத்திரிகை உலகில் வெளிநாடுகளில் மருத்துவம், பொறியியல், விஞ்ஞான ஆய்வுகள் தொடர்பான செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் விதத்தில் இ-பத்திரிகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. அதுபோல் நம் சமூக நிகழ்வுகள் திறமைசாலிகள் சாதனையாளர்கள், தொழிலதிபர்கள், அரசுத்துறையில் பெரிய பதவிகளில் அங்கம் வகிப்பவர்கள், சாகித்ய கர்த்தாக்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று அனைவரையும் அடையாளம் காட்டி உலக அரங்கில் எந்த மூலையில் இருந்தாலும் ஸெளராஷ்ட்ரர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளும் விதத்தில் ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகையாக கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

முன்னதாக எம்.ஆர்.சுரேஷ் ஆசிரியராகக் கொண்டு விஸ்வ ஸெளராஷ்ட்ரம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை அச்சிடப்பட்டு ஸ்கேன் செய்து இணையதளத்தில் வெளியிட்டதை ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாம். ஒன்றிரண்டு இதழ்களே வெளிவந்து பின் தொடர இயலாமல் போனது. 

சமூக மக்கள் தங்களுடைய முழு ஆதரவினை அளிப்பதுடன் வியாபார பெருமக்கள் விளம்பரங்களை கொடுத்து பொருளாதார ரீதியாக உதவுவதுடன் சமூக ஸ்தாபனங்கள் தங்கள் ஸ்தாபன நிகழ்வுகளில் சமூகப்பத்திரிகையாளர்களை கௌரவிக்கும் கண்ணியமான பண்பாட்டினை வளர்த்துக் கொள்ளவேண்டும். அது எவ்வித சுயலாபமின்றி சமூகத்திற்காக பாடுபடும் பத்திரிகையாளர்களை மென்மேலும் உற்சாகப்படுத்துவது போலிருக்கும். அவர்களும் தொய்வின்றி செயலாற்றுவார்கள். ஏன் இங்கு இப்படி ஒரு கருத்தினை கூறுகிறேன் என்று கேட்கலாம்.

ஸெளராஷ்ட்ர சமூகத்திற்காக எதுவுமே செய்யாமல் ஒருசிலர் மூத்தப்பத்திரிகையாளர் என்று கௌரவிக்கப்படுவது வேதனைக்குரியதாக இருக்கிறது. சமூக ஸ்தாபனங்களின் நிர்வாகிகள் புதியவர்கள். அவர்களுக்கு விஷயம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கௌரவத்தை பெற்றுக் கொள்பவர் நாம் இந்த சமூகத்திற்கு என்ன செய்தோம். இந்த பாராட்டுக்கும் கௌரவத்திற்கும் தகுதியுள்ளவர்கள் தானா என்று சிந்திக்கவேண்டும். சதாசர்வ காலமும் சமூகத்தின் சிந்தனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகப்பத்திரிகையாளர்கள் ஒதுக்கப்படுவது வேதனையான அனுபவம். இந்நிலை தொடரக்கூடாது என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஓவ்வொரு பத்திரிகை ஆசிரியர்களும் லாபநோக்கமின்றி தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து பத்திரிகையை நடத்தி வந்துள்ளார்கள். தொடர்ந்து வெளிவரும் பத்திரிகைகளும் சேவை மனப்பான்மையுடன் அர்ப்பணிப்புத் தன்மையில் தங்களை ஈடுப்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். 

எந்த ஒரு மனிதனுக்கும் தான் செய்யும் செயல்பாட்டினை மற்றவர்கள் புகழ்ந்து பாராட்டும்போது ஒருவித உற்சாகமும் இன்னும் செய்யவேண்டும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது என்பது நிதர்சனமான உண்மை. அவ்வகையில் ஸெளராஷ்ட்ர சமூகத்தில் ஸெளராஷ்ட்ரப் பத்திரிகையாளர்கள் கௌரவிக்கப்படவேண்டும்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 8 =