Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
sattaththil....ShrEyangam

ஸ்ரேயங்க3ம்:
சட்டத்திருத்தம் தேவை!
சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை. சட்டத்திற்காகவும் விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை என்று ஒரு சமயம் காமராசர் குறிப்பிட்டதை இங்கே நினைவுக் கூர்கிறேன். சட்டங்கள் அனைத்து மனிதர்களுக்கும் அவர்தம் உயிர் உடமைகளுக்கும் பாதுகாப்புக் கருதி இயற்றப்படுகிறது. அதனால் ஏற்படும் பின்விளைவுகளை ஆய்ந்து விதிமுறைகள் உருவாக்கப்படுகிறது. அதற்கு விதிவிலக்கும் உருவாக்கப்படுகிறது. 
மோட்டார் வாகனச் சட்டமும் மக்களின் உயிருக்குப் பாதுகாப்பளிக்கும் விதத்தில் இருச்சக்கர வாகனத்தை ஓட்டும்போது தலைக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்கிறது. அந்தச் சட்டத்திற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநில அரசுகள் விரும்பினால் தளர்த்திக்கொள்ளலாம் என்று விதிமுறையில் சொல்லப்பட்டுள்ளது. பொதுமக்கள் விரும்பாத இந்தச் சட்டத்தின் விதிமுறையில் வாகன ஓட்டுனர்கள் விரும்பினால் அணிந்துகொள்ளலாம் என்று சேர்க்கை கொண்டு வரவேண்டும். 
ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பொதுமக்களை அதிகமாக வாட்டிக் கொண்டிருக்கும் இதிலிருந்து விடுதலை கிடைக்கவேண்டும். தமிழகம் முழுவதும் குறிப்பாக தென்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். வெயில் காலத்தில் சாதாரணமாகவே மக்கள் வெளியில் நடமாடத் தயங்குவார்கள். இதில் ஹெல்மெட் அணிந்துதான் வண்டியை ஓட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மனதில் ஈரமுள்ளவர்கள் செய்யும் செயல் அல்ல. குடிமக்களின் நலனை கொஞ்சமும் எண்ணிப்பாராமல் நீதிமன்றமும் காவல்துறையும் தங்கள் பங்கிற்கு கொஞ்சம் அதிகமாகவே ஈடுப்படுத்திக் கொள்கிறது. பொதுமக்களுக்கு எரிச்சலையூட்டும் இந்தக் கட்டாய ஹெல்மெட் அணியும் செயல்பாடு சட்டத்திற்குப் புறம்பாக உலாவரும் கும்பல்களின் செயலுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது.
குடி குடியைக் கெடுக்கும். உயிரையும் பறிக்கும் என்று எச்சரிக்கை வாசகம் வெளியிட்டு மதுக்கடைகளை திறந்து வைத்து குடிமக்களுக்கு நன்மையைச் செய்வதுபோல புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகத்துடன் சிகிரெட் ஆலைகளை இழுத்து மூடாமல் உற்பத்தியைப் பெருக்கி புகைப்பவர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் நன்மையைச் செய்வதுபோல ஹெல்மெட் அணிவதை நல்லப் பழக்கமாக கொண்டுவர தலைக்கவசம் உயிர்கவசம். அது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கும் என்ற எச்சரி;க்கை வாசகத்துடன் ஹெல்மெட் அணிந்தால் என்ன அணியாவிட்டால் என்ன நமக்கென்ன வந்தது என்று இருக்கலாமே! 
வெயிலின் கொடுமையால் வியர்வை அதிகமாகி தலையெல்லாம் ஈரமாகிறது. பின் வியர்வை தலையிலுள்ள ரோமங்களின் வழியே உட்சென்று தலைவலி போன்ற வியாதிகளை உருவாக்குகிறது. தலையில் பொடுகு போன்ற தொல்லைகளும் உருவாகிறது. இது மக்களுக்குள்ள பிரச்னைகள். அரசாங்கம் வாகனங்கள் சாலைகளில் செல்ல சாலைவரி வாங்குகிறது. அவை சாலைகளை பராமரிக்கச் செய்கிறதா? நகர்புறங்களில் சாலைகள் இருக்கும் நிலை அதன் தரம் பற்றி ஆய்வு செய்தால் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. இந்த சூழ்நிலையில் ஹெல்மெட் அணிந்துதான் இருச்சக்கர வாகனம் ஓட்டவேண்டும் என்ற விதியிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும். அதற்கு தமிழக அரசும் அரசுத்துறையும் நீதித்துறையும் ஒத்துழைக்கவேண்டும். இந்தப் பிரச்னையில் இதுவரை தமிழக அரசியல் கட்சிகள் வாயைத் திறந்து ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை
மக்களுக்காக சட்டங்களேயன்றி சட்டங்களுக்காக மக்களல்ல என்பதை உணர்ந்து நல்லதோர் தீர்வை உடனே செயல்படுத்த அரசு உத்திரவிடவேண்டும்.

ஸ்ரேயங்க3ம்:

     Vol.4 1st April  2017 Issue: 15

சட்டத்திருத்தம் தேவை!

சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை. சட்டத்திற்காகவும் விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை என்று ஒரு சமயம் காமராசர் குறிப்பிட்டதை இங்கே நினைவுக் கூர்கிறேன். சட்டங்கள் அனைத்து மனிதர்களுக்கும் அவர்தம் உயிர் உடமைகளுக்கும் பாதுகாப்புக் கருதி இயற்றப்படுகிறது. அதனால் ஏற்படும் பின்விளைவுகளை ஆய்ந்து விதிமுறைகள் உருவாக்கப்படுகிறது. அதற்கு விதிவிலக்கும் உருவாக்கப்படுகிறது. 

மோட்டார் வாகனச் சட்டமும் மக்களின் உயிருக்குப் பாதுகாப்பளிக்கும் விதத்தில் இருச்சக்கர வாகனத்தை ஓட்டும்போது தலைக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்கிறது. அந்தச் சட்டத்திற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநில அரசுகள் விரும்பினால் தளர்த்திக்கொள்ளலாம் என்று விதிமுறையில் சொல்லப்பட்டுள்ளது. பொதுமக்கள் விரும்பாத இந்தச் சட்டத்தின் விதிமுறையில் வாகன ஓட்டுனர்கள் விரும்பினால் அணிந்துகொள்ளலாம் என்று சேர்க்கை கொண்டு வரவேண்டும். 

ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பொதுமக்களை அதிகமாக வாட்டிக் கொண்டிருக்கும் இதிலிருந்து விடுதலை கிடைக்கவேண்டும். தமிழகம் முழுவதும் குறிப்பாக தென்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். வெயில் காலத்தில் சாதாரணமாகவே மக்கள் வெளியில் நடமாடத் தயங்குவார்கள். இதில் ஹெல்மெட் அணிந்துதான் வண்டியை ஓட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மனதில் ஈரமுள்ளவர்கள் செய்யும் செயல் அல்ல. குடிமக்களின் நலனை கொஞ்சமும் எண்ணிப்பாராமல் நீதிமன்றமும் காவல்துறையும் தங்கள் பங்கிற்கு கொஞ்சம் அதிகமாகவே ஈடுப்படுத்திக் கொள்கிறது. பொதுமக்களுக்கு எரிச்சலையூட்டும் இந்தக் கட்டாய ஹெல்மெட் அணியும் செயல்பாடு சட்டத்திற்குப் புறம்பாக உலாவரும் கும்பல்களின் செயலுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது.

குடி குடியைக் கெடுக்கும். உயிரையும் பறிக்கும் என்று எச்சரிக்கை வாசகம் வெளியிட்டு மதுக்கடைகளை திறந்து வைத்து குடிமக்களுக்கு நன்மையைச் செய்வதுபோல புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகத்துடன் சிகிரெட் ஆலைகளை இழுத்து மூடாமல் உற்பத்தியைப் பெருக்கி புகைப்பவர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் நன்மையைச் செய்வதுபோல ஹெல்மெட் அணிவதை நல்லப் பழக்கமாக கொண்டுவர தலைக்கவசம் உயிர்கவசம். அது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கும் என்ற எச்சரிக்கை வாசகத்துடன் ஹெல்மெட் அணிந்தால் என்ன அணியாவிட்டால் என்ன நமக்கென்ன வந்தது என்று இருக்கலாமே! 

வெயிலின் கொடுமையால் வியர்வை அதிகமாகி தலையெல்லாம் ஈரமாகிறது. பின் வியர்வை தலையிலுள்ள ரோமங்களின் வழியே உட்சென்று தலைவலி போன்ற வியாதிகளை உருவாக்குகிறது. தலையில் பொடுகு போன்ற தொல்லைகளும் உருவாகிறது. இது மக்களுக்குள்ள பிரச்னைகள். அரசாங்கம் வாகனங்கள் சாலைகளில் செல்ல சாலைவரி வாங்குகிறது. அவை சாலைகளை பராமரிக்கச் செய்கிறதா? நகர்புறங்களில் சாலைகள் இருக்கும் நிலை அதன் தரம் பற்றி ஆய்வு செய்தால் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. இந்த சூழ்நிலையில் ஹெல்மெட் அணிந்துதான் இருச்சக்கர வாகனம் ஓட்டவேண்டும் என்ற விதியிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும். அதற்கு தமிழக அரசும் அரசுத்துறையும் நீதித்துறையும் ஒத்துழைக்கவேண்டும். இந்தப் பிரச்னையில் இதுவரை தமிழக அரசியல் கட்சிகள் வாயைத் திறந்து ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை

மக்களுக்காக சட்டங்களேயன்றி சட்டங்களுக்காக மக்களல்ல என்பதை உணர்ந்து நல்லதோர் தீர்வை உடனே செயல்படுத்த அரசு உத்திரவிடவேண்டும்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 7 =