Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
jathigaL...Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.4 1st November  2016 Issue: 5



ஜாதிகள் இல்லாத ஸெளராஷ்ட்ர மொழி!

 

ஸெளராஷ்ட்ர மொழி இலக்கிய வளர்ச்சியில் இப்போது கொஞ்சம் விறுவிறுப்பாக செயல் படுவோர் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது என்பதில் பெருமை கொள்ள வேண்டும். இதனால் ஆக்கப்பூர்வமான பணிகள் பல முனைப்புடன் நடந்து ஸெளராஷ்ட்ர மொழி எழுத்து இலக்கியம் என்று பணிகள் விரியும்போது மொழி வளர்ச்சிக்கு பயனுள்ள கருவிகள் ஆய்வாளர்களுக்கு கிடைக்கும். 

 

மொழி ஆய்வு என்று புறப்படும்போதுதான் அம்மொழியின் தனித்துவம் பிறருக்கு புரியத் தொடங்குகிறது. எந்த மொழிக்கும் இல்லாத ஒரு பெருமை நம் ஸெளராஷ்ட்ர மொழிக்கு உண்டு. திராவிட மொழிக்குடும்பத்தில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு என்ற ஐந்து மொழிகள் தனித்துவத்துடன் விளங்குகிறது. ஆனால் ஒவ்வொரு மொழிப் பேசுவோரிடையே பல பிரிவுகள் அதாவது ஜாதிகள் உண்டு. தமிழை தனி இனமாகக் கொண்டாலும் அதிலும் ஏகப்பட்ட ஜாதிகள். இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஸெளராஷ்ட்ர மொழி தனி இனமாக இருந்தாலும் இம்மொழிப் பேசுவோரிடையே வேற்றுமையை வளர்க்கும் ஜாதிகள் கிடையாது என்று பெருமைப்பட கூறிக்கொள்ளலாம். எல்லோரும் ஸெளராஷ்ட்ரர் என்ற ஒருமித்த கருத்துண்டு. ஊர் வேறுபாடு களைந்துவிட்டால் நம்மை மிஞ்ச யாராலும் முடியாது என்றே சொல்லலாம்.

 

ஸெளராஷ்ட்ர மொழியில் எழுதி படிக்கும் பயிற்சியினை அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ரர்களும் மேற்கொண்டால் மட்டுமே வட்டார மொழிக் கலப்பினை புரிந்து கொள்ள முடியும். அத்துடன் பேச்சு மொழியிலிருந்து விடுபட்டு இலக்கிய மொழியினையும் (Litarary Language) புரிந்து கொள்ள முற்பட்டால் மட்டுமே ஒன்றுபட்ட ஸெளராஷ்ட்ரர்களாக காட்டமுடியும். ஊர்பேதமின்றி அனைவருடைய பேச்சு மொழியினை புரிந்து கொள்ள முடியும். 

 

நடைமுறையில் இது சாத்தியமா என்று கேட்கிறீர்கள். ஸெளராஷ்ட்ரர்கள் வாழுகின்ற ஒவ்வொரு ஊரிலும் பல ஆன்மீக திருவிழாக்கள் மற்றும் ஸ்தாபனங்களின் விழாக்கள் நடைபெறும்போது குடும்பத்துடன் சென்று கலந்து கொண்டு கலாச்சார பரிமாற்றம் செய்து கொண்டாலே போதுமே!

 

நமது கலாச்சாரமும் பண்பாடும் மட்டுமே நமது மொழி இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் கருவியாகும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 6 =