Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
thamizhaga arasirku nandri 11/21

ஸ்ரேயங்க3ம்:


Vol. 9                                    15th November 2021                                   Issue: 06


தமிழக அரசிற்கு நன்றி!

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அரசு பொறுப்பேற்ற பின் ஸெளராஷ்ட்ர மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.
சுமார் 700 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தங்களது தாயகமாகவே பாவித்து வாழந்துவரும் ஸெளராஷ்ட்ர இன மக்கள் பேசுகின்ற ஸெளராஷ்ட்ர மொழியை சிறுபான்மை மொழி என அங்கீகரித்துள்ளது தமிழக அரசு. தமிழக அரசின் சிறுபான்மை நல வாரியம் மத ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குமாக செயல்பாடு இருந்ததை இப்போது மொழிவாரிச் சிறுபான்மையினரையும் பிரதிநிதித்துவம் தரும்வகையில் மாற்றம் செய்துள்ளதை மிகவும் நன்றியுடன் வரவேற்கிறோம்.

தமிழ்நாடு அரசு சிறுபான்மை நல வாரியம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அரசாணை 54ல் மொழி சிறுபான்மையினராக ஸெளராஷ்ட்ர மொழி பேசுவோரையும் அங்கீகரித்து இணைத்துள்ளது. இதற்காக நம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு துணைத்தலைவர் பதவி கொடுத்து கௌரவிக்க உள்ளது. இந்த பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுத்து அனுப்பும் பொறுப்பு யாருக்கு உள்ளது. ஸெளராஷ்ட்ர மக்களின் பிரதிநிதியாக செயல்படும் நம் சமூக சபைகள் மற்றும் பொது ஸ்தாபனங்கள்தான் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு திறமையான மொழியறிவு மிக்க ஒரு மொழியார்வலரை தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டும்.

இதன் பலனாக நம் குழந்தைகளுக்கு தாய்மொழிக் கல்வி கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு சார்பில் ஸெளராஷ்ட்ர மொழி பாடநூல்கள் முதல் வகுப்பிலிருந்து எட்டு வகுப்புவரை படிக்கும் வாய்ப்பு மிக அருகில் உள்ளது என்பதை நாம் உணரலாம்.

அதுதான் நமது மொழிவளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். சிறுபான்மையினரின் நலனில் அக்கறை செலுத்திவரும் தமிழ்நாடு அரசுக்கு லட்சக்கணக்கான மொழி சிறுபான்மை இன ஸெளராஷ்ட்ர மக்களின் சார்பில் ஸெளராஷ்ட்ர டைம் மனமுவந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 8 =