Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
jauNAn sommar....ShrEyangam 1-6

ஸ்ரேயங்க3ம்:


Vol.5 1st June  2018 Issue: 19


ஜவ்ணாந் ஸொம்மர் அவ்நொ!

மூன்று தலைமுறைகளுக்கு முன்புவரை அதாவது மேதாவி இராமாராய் வாழ்க்கை காலத்தில் ஸெளராஷ்ட்ர மொழிக்குரிய எழுத்தை புராதன ஸெளராஷ்ட்ர லிபி என்று சொல்லி வந்தனர். பின்னர் இராமாராய் காலத்திற்கு பின் அதையே இராமாராய் லிபி என்று நாகரி லிபி ஆதரவாளர்கள் சொல்லி சொல்லி அதன் வளர்ச்சிக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவி வருகிறார்கள். நாகரி லிபியை நாம் பயன்படுத்தவேண்டும் என்று பாடாய் படுத்திவரும் இவர்களால்கூட நாகரி லிபியை பயன்படுத்த இயலவில்லை. அதன் மூலம் ஸெளராஷ்ட்ர மொழி வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. நிலைமை இப்படி இருக்கையில் வீணாக மத்ய சபை தீர்மானம் பிரகடனம் ஆட்சி லிபி என்றெல்லாம் சொல்லி விவாதம் செய்வதை விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளை செய்துவரும் மொழி ஆர்வலர்களுக்கு உற்சாகமும் ஆதரவும் கொடுத்து வந்தால் அது நமது இலக்கிய வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என்பதை அவர்கள் நினைவில் கொண்டாலே போதுமானது. இடையிடையே புகுந்து ஒவ்வொரு செயலுக்கும் மறைமுகமாக முட்டுக்கட்டைப் போடும் அநாகரீகத்தை விட்டுவிடுவது நல்லது.


இப்போது தஞ்சை ஒரு உதாரணமாக மாறியுள்ளது. ஸெளராஷ்ட்ரீ பா4ஷா வ்ருத்3தி மண்ட3ல் மதுரை ஸெளராஷ்ட்ர ஸாஹித்ய ஸத3ஸ் இணைந்து ஒரு வாரம் ஸெளராஷ்ட்ரீ மொழியை மாணவ மாணவியர்க்கு கற்றுக்கொடுத்து அவர்கள் நமது மொழியை சரளமாக எழுதவும் படிக்கவும் கற்றுள்ளனர். ஸெளராஷ்ட்ர லிபியைக் கற்றுக்கொள்வது சிரமம். எழுத கஷ்டம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தவர்களுக்கு தஞ்சை ஸெளராஷ்ட்ர மாணவ மாணவியர்கள் நல்லதோர் எடுத்துக்காட்டு. அவர்கள் பல வருடங்களாக கற்ற தமிழ் மொழியைப்போல ஸெளராஷ்ட்ரீயை ஸெளராஷ்ட்ர லிபியில் பக்கம் பக்கமாக எழுதி தள்ளியதைக் கண்டு வியந்துபோனோம். உண்மையில் பயிற்சியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். 


இப்போது பள்ளிப்பாடம் போல எழுத்துப் பயிற்சி, இலக்கியங்கள் (செய்யுள் வடிவில்) மற்றும் உரைநடை என்று தொகுத்து புத்தகம் தயாரித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது. பல ஊர் ஸெளராஷ்ட்ரர்கள் தஞ்சையை முன்னுதாரணமாகக் கொண்டு ஸெளராஷ்ட்ரீ மொழி பயிற்சியை தொடங்கலாம். ஸெளராஷ்ட்ர இளைஞர்கள் முன்வருவார்களா?

 

User Comments
ஓ.எஸ்.ஸுப்3ரமணியன்.
ஸௌராஷ்ட்ர மொழி என்றே இருக்கவேண்டும். ஸௌராஷ்ட்ரீ மொழி என்று கூறுவது சரியாகத் தோன்றவில்லை. ஸௌராஷ்ட்ரீ என்ற பிரயோகாம் எப்பொழுது இருந்து பயன் பாட்டுக்கு வத்தது என்பதை கண்டுபிடித்துக் கூறவும்.
Information
Name
Comments
 
Verification Code
1 + 7 =