Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni kaLatni 16-05
தஞ்சை ஸெளராஷ்ட்ர பா4ஷா வ்ருத்3தி4 மண்டல் சார்பில் இன்று முதல் 28ஆம் தேதி வரை ஸெளராஷ்ட்ரீ லிபி ஸாஹித்ய ஆசார்ய ஸிக்ஷா வகுப்பு மற்றும் மொழி இலக்கிய ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. தஞ்சை மகர்நோன்புச் சாவடியில் இருக்கும் ஸ்ரீவிநாயகா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெறுகிறது.
இந்த வகுப்புகளை மதுரை முனைவர் தி.இரா.தாமோதரன் முனைவர் எல்.ஆர்.கோவர்தனன் மற்றும் கொண்டா செந்தில்குமார் ஆகியோர் முன்னின்று நடத்துகிறார்கள். தினசரி ஸெளராஷ்ட்ர மொழியார்வத்தை தூண்டும் வகையில் திருமதி.கீதாபாரதி, திருமதி.சரோஜினி குட்டி, திருவாளர்கள் டி.ஜி. துவாகரநாத், திருபுவனம் எம்.எஸ்.ரமணி, ஈரோடு கே.ஆர்.கிருஷ்ணமாச்சாரி, திருச்சி. ரெங்கராஜன் ஆகியோரின் விசேஷ சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறுதி நாளான 28ஆம் தேதி நிறைவு விழா நிகழ்ச்சியின்போது ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகை ஆசிரியர் சூர்யா ஞானேஸ்வர் எழுதிய பி3ந்து3லா கெ2நி நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி மற்றும் சான்றிதழ்கள் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
இவ்விழாவின் போது ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் தலைவர் ஸ்ரீராம்சேகர், முன்னாள் தலைவர் எம்.எஸ். ராமலிங்கம், மைசூர் முனைவர்.எல்.:ஆர்.பிரேம்குமார், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சதீஷ், தஞ்சை தமிழ் எழுத்தாளர் அசோக்குமார், ஸெளராஷ்ட்ர திரைப்பட இயக்குனர் ஜவஹர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 8 =