Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
karam kOrthu...ShrEyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.4 16th August  2017 Issue: 24


 

கரம்கோர்க்க வாருங்கள்

1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸெளராஷ்ட்ர டைம் முதல் இதழ் தீபாவளி மலராக வெளிவந்தது. தொடர்ந்து பல இன்னல்களுக்கிடையே வெளிவந்து கொண்டிருந்த ஸெளராஷ்ட்ர டைம் கணினி மயமாக்கப்பட்டபின் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இ-பத்திரிகையாக வெளிவரத் தொடங்கி இந்த இதழோடு நான்கு ஆண்டுகள் முடிவடைகிறது. தொடர்ந்து ஆதரவளித்துவரும் விளம்பரதாரர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். வாசகர்கள் தொடர்ந்து பயன்பெறும் வகையில் இலவசமாக பார்வையிடும் முறையே தொடரும். வரும் காலங்களில் ஸெளராஷ்ட்ர மொழி இலக்கியங்கள் எழுத்தாளர்களின் படைப்புகளான கவிதை கதை கட்டுரை நகைச்சுவை போன்ற அம்சங்கள் நிறைந்து வெளியிட ஆவன செய்து வருகிறோம். படைப்பாளிகளுக்கு ஸெளராஷ்ட்ர டைம் என்றுமே பாலமாக விளங்கவேண்டும் என்பதில் சிறிதும் மாற்றமின்றி செயல்பட்டு வருகிறோம். எனவே பயன்படுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டாமல் எழுத்தாளர்கள் முழு அளவில் ஸெளராஷ்ட்ர டைம் இதழை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

 

முகநூல் வளர்ச்சியினால் முற்றிலும் பாதிக்கப்பட்டது என்னவோ ஸெளராஷ்ட்ர பத்திரிகைகள்தான்! பழைய எழுத்தாளர்களின் மறைவு ஒருபுறம் இருந்தாலும் புதிய எழுத்தாளர்கள் உருவாவதை முகநூலின் வளர்ச்சியால் தடையானது விஞ்ஞானப் பூர்வமான உண்மை. படிக்கும் திறனும் எழுதும் திறனும் குன்றிப்போனதே இதற்கு காரணம். இது ஒரு புறம் என்றாலும் சமூக பொது ஸ்தாபனங்கள் சமூகப் பத்திரிகைகளின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு முகநூலின் பயன்பாட்டை அதிகரித்து வந்துகொண்டிருப்பதும் ஒரு முட்டுக்கட்டைதான். வியாபார நிறுவனங்களின் விளம்பரங்களின் வரத்து குறைந்தபோனதற்கும் வளர்ந்துள்ள தொலைக்காட்சியின் தாக்கமும் ஒரு காரணம் என்றே கூறலாம்.

 

இத்தனைக்கும் நடுவே நாம் லாபநோக்கின்றி பத்திரிகை நடத்துவது என்ற கடினமான பணியை எளிதாக செய்து முடிக்கவேண்டும் என்றால் நம் சமூக வியாபார பெருமக்கள் தங்கள் விளம்பரங்களை தொடர்ந்து கொடுத்தால்தான் எங்கள் பணியை செவ்வனே தொடரவும் சமூக மக்களுக்காகவும் ஸெளராஷ்ட்ர மொழி இலக்கியம் என்று அனைத்து துறையிலும் நல்லதோர் வளர்ச்சியையும் சாதனைகளையும் செய்து காட்டிட முடியும் என்று இத்தருணத்தில் கூறிக் கொள்கிறோம். அனைத்து தரப்பிலும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து எங்களது சமூகப்பணி சிறக்க கரம்கோர்க்க வாருங்கள் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 5 =