Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
kELvikuri...Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.5 1st November  2017 Issue: 5


கேள்விக்குறி!

ஸெளராஷ்ட்ர மத்ய சபை தேர்தல் தொடர்பான இன்றைய சூழ்நிலையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது சமூக நலன் குறித்து என்று எண்ணுவதா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் தற்போதைய நிர்வாகம் முனைப்போடு செயல்படுவது புதிய கோணமாகத் தெரிகிறது. அதுவே கோணலாகி விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டதே இந்த தலையங்கம். 

 

பெரும்பாலும் நிர்வாக அங்கத்தினர்களின் தேர்தல் முடிந்த பின்னர் தலைவர் பொதுச்செயலர் பொருளாளர் பதவிக்காக யாரை கொண்டுவரலாம் என்று சிந்தித்து செயல்படும் வழக்கத்திற்கு மாறாக தற்போதைய நிர்வாகம் தேர்தல் அதிகாரிகளிடம் பொறுப்பினை ஒப்படைக்கும் முன்னரே ஆதரவு வாக்குகளை சேகரிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள். இது ஆரோக்கியமான போட்டியினை தவிர்த்து காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய போட்டியை உருவாக்கி சமூக நலனை பாதிக்கச் செய்துவிடுமோ என்று பலரும் வருந்தும்படி சில நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதுதான் தவறான கருத்திற்கு இடமளிக்கிறது.

 

குடந்தையில் நடைபெற்ற கடைசி நிர்வாகக்குழுக் கூட்டத்தில் தலைவர் நமது வழக்கறிஞர்களான சுதர்சன்பாபுவை தலைமை தேர்தல் அதிகாரியாகவும் ஜெனார்தனன் துணைத்தேர்தல் அதிகாரியாகவும் அறிவித்தார். இதுநாள்வரை அவர்களிடமிருந்து தேர்தல் வரன்முறைகள் பற்றிய யாதொரு விபரமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் அதிகாரிகளிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டதா? இல்லையா? தெரியவில்லை.

 

தவறான முன்னுதாரணத்திற்கு முன்னிலைப் படுத்திக் கொண்டு வருவது மட்டும் அப்பட்டமாக தெரிகிறது. நாணயங்கள் நா நயத்தால் ஓடத் தொடங்கிவிட்டது போலிருக்கிறது. தேர்தல் பொறுப்பும் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கப்படாத நிலையிலும் நிர்வாகக்குழு தேர்தல் நடந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாத நிலையிலும் தலைமைக்கு ஆதரவினையும் வாக்குகளையும் சேகரிக்க வேண்டிய அவசியம் தற்போதைய நிர்வாகிகளுக்கு வந்துள்ளதைதான் தவறான முன்னுதாரணம் என்கிறேன். இந்த சூழ்நிலையில் மத்ய சபையின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தன்னை தலைவராக முன்னிலைப் படுத்திக் கொள்பவர் முடிவு செய்வது நல்லது.  அவசரப்பட வேண்டாமென்று எண்ணுகிறேன். 

 

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுக்கும் மேலாக மத்ய சபை நடவடிக்கைகளை கவனித்து வருபவன் என்ற முறையில் தலைமைக்கு ஒரு முறை மதுரை ஒரு முறை மதுரையல்லாத வேறு ஊர் என்ற நடைமுறையில் தேர்ந்தெடுக்கும் கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதுவே ஆரோக்யமானதாகவும் இருந்துவருகிறது. இதே நடைமுறையில் குடந்தை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தலைவர் அடுத்த தலைவராக தகுதியான ஒருவரை அடையாளம் காட்டினார். யாரும் எவ்வித ஆட்சேபணையும் காட்டாத நிலையில் அவரை தலைவராக ஏற்றுக் கொள்ளக் காத்திருக்கும் நிலையில் மாற்றுக் கருத்தினை உருவாக்கி செயல்படுபவர்களால் சமூகத்திற்கு நன்மையுண்டாகுமா இல்லை மனக்கசப்பை உருவாக்குமா என்பது கேள்விக்குறி!

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 8 =