Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni 11-07

ஸ்ரீமந் கவி வேங்கடசூரி சுவாமிகள் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் அருளிச்செய்த ஸெளராஷ்ட்ர மொழிக் கீர்த்தனைகள் ஸ்வரக்குறிப்புடன் நூல் வெளியீட்டுவிழா வருகின்ற 30-07-2017 அன்று காலை மதுரை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் தெருவிலிருக்கும் ஸெளராஷ்ட்ர சிலம்ப & தேகப்பயிற்சி சாலை மண்டபத்தில் நடைபெறுகிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்பாபு தலைமை தாங்க பரமக்குடி ஸெளராஷ்ட்ர மத்ய சபை உபதலைவர் பார்த்தசாரதி  மற்றும் தஞ்சை ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகள் சபையின் தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகிக்க டாக்டர் சீர்காழி G. சிவசிதம்பரம் நூல் வெளியிடுகிறார். பேராசிரியர் மகாதேவன் முதல் பிரதி பெற்றுக் கொள்ள பேராசிரியர் சுப்புராமன் வாழ்த்துரை வழங்குகிறார். மேலும் தமிழ்நாடு பா.ஜ.க. மாநில மகளிர் அணி தலைவர் மகாலட்சுமி, ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் ஞானேஸ்வரன் மற்றும் முனைவர் சாந்தசங்கரி சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு நூலாசிரியர் நீலாராவ் கேட்டுக்கொண்டார்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 8 =