Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
maatraththai....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:
மாற்றத்தை நோக்கி....
மதுரை ஸெளராஷ்ட்ர சபைக்குத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மதுரை ஸெளராஷ்ட்ர சபை அனைத்து ஊர் சபைகளுக்கும் தாய் சபை போன்றது. இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயல்பாடும் மற்ற ஸெளராஷ்;ட்ர சபையினர் முன்னுதாரணமாக கொள்வது மரபு. தேர்தல் சமயத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு ஒரு காலவரம்பு நிர்ணயிக்கப் படும். அவர்களில் ஆயட்கால உறுப்பினர்கள் மட்டும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை பெறுவார்கள். தேர்தலில் வெற்றிப்பெற்ற உறுப்பினர்கள் தவிர மகிமை கௌன்சிலர்கள் என்று ஒரு குறிப்பிட்ட கட்டணம் பெற்று சேர்த்துக் கொள்வார்கள். தேர்தலில் வெற்றிப் பெற்ற கௌன்சிலர்கள்ää மகிமை கௌன்சிலர்கள் ஆகியோர்கள் நிர்வாக சபைத் தேர்தலிலும் கோவிலை நிர்வகிக்கும் டிரஸ்ட் முதலான இயக்குனர் போட்டியிலும் போட்டியிடும் தகுதியை பெறுவதோடு வாக்களிக்கும் தகுதியையும் பெறுவார்கள். இது சபையின் விதி. நல்ல ஜனநாயக முறைப்படி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்று பலரும் மெச்சிக் கொண்டதுண்டு. 
சபையின் அசையும் சொத்துக்கள் அசையாச் சொத்துக்கள் போன்றவற்றை பராமரிப்பதும் சபைக்குப் பாத்தியமான ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலை நிர்வகிப்பதுமான பணிகளை கண்காணிப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட கௌன்சிலர்களின் முக்கியப் பணிகளாகும்.
ஆனால் தற்போது எப்படி உள்ளது? தப்பை தப்பில்லாமல் செய்தால் தப்பு தப்பாகாது என்பதற்கு உதாரணமாக செயல்பாடு உள்ளது. ஆம் விதி முறைக்கு உட்பட்டுதான் எல்லாமே நடக்கிறது வெளிப்பார்வைக்குத்தான். ஆனால் நிர்வாகத்தை எதிர்ப்பவர்களை சிறிதுசிறிதாக குறைக்கும் விதத்தில் விதியில் திருத்தங்கள் செய்யப்பட்டு திருத்திய விதியின்படி உறுப்பினர் சேர்க்கை நடந்து முந்தைய ஆயுட்கால உறுப்பினர்கள் விதிமுறையின்படி காலாவதியாகி விட்டனர். இப்போது புதிய உறுப்பினர்கள் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டு சாமான்யர்கள் யாரும் உள்ளே வர இயலாதபடி ஒரு வேலி அமைக்கப்பட்டு விட்டது. 
இப்போதுள்ள நிர்வாகமே தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படும் நிலையில்தான் தேர்தல் நடைபெறும். மாற்றம் வேண்டும் என்று முழக்கமிட்ட ஒரு தலைவரின் வாரிசுகள் மாற்றத்தை விரும்பாமல் தங்களது தலைமையின் கீழ்தான் நிர்வாகம் இயங்கவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருவது விந்தையாக உள்ளது. 
மாற்றத்தை விரும்பாத இந்த நிர்வாகம் மாறுதலை எதிர்கொள்ள திறந்த மனதுடன் வெளிப்படை செயல்பாட்டிற்கு வரவேண்டும். முன்னுதரணமான தாய்சபையின் இன்றைய செயல்பாடு முன்னுதரணமாகி விடாமல் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையி;ல் விதிமுறைகள் அமைந்து நல்லதோர் வழிகாட்டியாக செயல்படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

ஸ்ரேயங்க3ம்:

Vol.4 1st March  2017 Issue: 13

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 5 =