Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
madya sabai Vs.....ShrEyangam 16-12-2018

ஸ்ரேயங்க3ம்:


Vol.6 16th December  2018 Issue:08


மத்ய சபை Vs பாஷொ = 0

 

ஸெளராஷ்ட்ர மத்ய சபை பொறுப்பேற்று இந்த மாதத்தோடு ஒரு வருடம் பூர்த்தியாகிறது. தலைவரின் செயல்பாடு குறித்து பலர் பல விதங்களில் விவாதித்தாலும் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பதை தலைவர் இப்போது நன்றாகவே புரிந்து வைத்திருப்பார். அவர் பதவி ஏற்கும் முதல்நாள் நடைபெற்றக் கூட்டத்தில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளார் என்ற பட்டியலை இதுவரை மத்ய சபையோ அல்லது வேறு எந்த ஆதரவாளர்களும் வெளியிடவில்லை. உறுப்பினர் சேர்க்கை ஓராண்டிற்குள் ஒரு லட்சம் என்று இலக்கு வைத்தார்கள். புதுப்புதுக் குழுக்கள் அமைத்தார்கள். பழைய நிர்வாகிகள் நொந்துபோகும் அளவிற்கு செயல்பாட்டில் மாபெரும் மாற்றம் அமையும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. 


குழுக்களின் செயல்பாடு குறித்த தகவல்கள் செயற்குழுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப் படுவதில்லை. முடிவுகள் குறித்த கருத்துக்களின் விரைவு தன்மை செயல் வடிவம் பெற இயலவில்லை. சமூகச் சிந்தனைகள் நமது மொழியின் பக்கமோ இலக்கியங்களின் பக்கமோ சிறிதும் திரும்பாமல் அரசியல் லாபம் கருதியே காய்கள் நகர்த்துவது சமூக ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்பதை உணர மறுக்கும் கூட்டத்திற்கு பரணி பாடும் குழுக்கள்! சமூக சபைகள் சமூக பொது ஸ்தாபனங்கள் சமூக நலன் மற்றும் மேம்பாடு என்ற ரீதியில் செயல்பாடுகள் இருந்தாலும் நமது மொழி. எழுத்து. இலக்கியம் போன்றவற்றின் வளர்ச்சிக்கும் முழுக்கவனம் செலுத்தவேண்டும். சமீபத்திய ஆய்வில் மொழியியல் வல்லுநர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை வயிற்றில் புளியை கரைத்தாற்போல் உள்ளது. 


அந்நிய மொழிகளின் ஆதிக்கம் அதனால் ஏற்பட்ட தாக்கம் பிரதான மொழிகளையே கதிகலங்க வைத்துள்ளது. சிறுபான்மை மொழிகள் அழியும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்ற நிதர்சனத்தை புரியவைத்துள்ளனர். ஸெளராஷ்ட்ரர்கள் மட்டுமே ஸெளராஷ்ட்ர மொழியை பேச முடியும். எழுதி படிக்க முடியும். அதனை சரியாக செய்தாலே போதும் நமது மொழி அழியும் நிலையிலிருந்து மாற்றியமைத்துக் கொள்ள முடியும். குறைந்த பட்சம் மொழிவளர்ச்சியில் ஆர்வத்துடன் செயல்படுவோர்களுக்கு உற்சாகமும் ஆதரவும் கொடுத்தாலும் போதுமே! செய்வார்களா?

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 7 =