Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
urimaikural...

உரிமைக்குரல்

சூர்யா ஞானேஸ்வர்

ஸெளராஷ்ட்ரக் கல்லூரி நிர்வாகக்குழு தேர்தல் 24ஆம் நாள் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களிடமிருந்து அவர்கள் உறுப்பினர் முன் வைக்கும் அறிக்கை இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தனையை ஓடவிட்டால் இறுதியில் எப்படி இருந்தாலும் இப்படித்தான் இருப்பார்கள் என்றுதான் தோன்றியது. இந்த இப்படி என்பதற்கு விளக்கம் சொல்லப் போனால் அது எப்படியோ போய் முடியும். ஆனால் வாக்களிப்பவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்குமென்று எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் குடும்ப நிர்வாகம் அடியோடு களையெடுக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய சமூக மக்களின் நிலைப்பாடு. ஒட்டு மொத்த சமூக மக்களின் நிலைப்பாட்டை மனதில் கொண்டு வாக்காளர்கள் வாக்களித்தால்தான் பயன் சமூகத்திற்கு கிடைக்கும். இல்லாமல் போனால் உங்களுக்கும் இல்லை. சமூகத்திற்கு இல்லை. நிர்வாகமே ஒட்டுமொத்தமாக அனுபவித்துக் கொண்டிருக்கும். இப்படித்தான் செய்வோம் என்ற அப்பட்டமாக சொல்பவர்களை தேர்ந்தெடுங்கள். எப்படியோ விளித்துக் கொண்டால் விடிவு கிடைக்கும். முழித்துக் கொண்டிருந்தால் மூலையில்தான் இருக்கவேண்டும். சரிதானே! 

ஸெளராஷ்ட்ரக் கல்லூரி கௌன்சில் வேட்பாளர்களுக்கு……..

1. சி.எஸ்.ராமாச்சாரிக்கு சிலை அமைக்க வேண்டும்.

2. ஆண்டு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தொய்வில்லாமல் நடைபெறவேண்டும்.

3. ஆசிரியர்/ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த ஸெளராஷ்ட்ரர்களைத்     தேர்ந்தெடுப்பதில் எவ்வித தயக்கமும் காட்டக்கூடாது.

4. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி உருவாக்கப்பட வேண்டும்.

5. ஒரு நிர்வாகம் அதிகபட்சமாக இரண்டு முறைமட்டுமே நிர்வகிக்கும் முறைக்கு தயக்கமின்றி விதிமுறையில் உடனடியாக மாற்றம் செய்யப்படவேண்டும்.

6. கல்லூரிக்கோ கௌன்சில் நிர்வாகத்திற்கோ அவதூறுகள் ஏற்படாமல் கண்ணியமான முறையில் நிர்வாகிகளின் நடத்தை இருக்கவேண்டும்.

7. கல்லூரி மாணவ-மாணவியரின் ஒழுக்கம், பாதுகாப்பு இவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.

8. பெற்றோர் ஆசிரியர் பருவமுறையில் (செமஸ்டர்) மாணவர்களுடன் சந்திக்கும் முறையும் தொடர்ந்து நடைபெறவேண்டும்.

9. கல்வியின் தரத்தை உயர்த்தப் பாடுபடவேண்டும்.

10. இறுதியாண்டின்போது வேலைவாய்ப்பில் பங்குகொண்டு வெற்றி பெறும் வகையில் Placement Cell அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். 

இவையனைத்தையும் எந்த அணியினர் செய்வதற்கு உறுதியளிக்கிறார்கள் என்பதை பகீரங்கமாக அறிக்கை மூலம் சொல்கிறார்களோ அவர்களுக்கே தங்கள் வாக்கு என்பதை அனைத்து உறுப்பினர்கள் சார்பில் ஒவ்வொரு உறுப்பினர்களும் உரிமைக்குரல் எழுப்புங்கள். நடப்பதை பாருங்கள். 


User Comments
Joottu Thiagarajan, Madurai
எல்லெமாம் கெரானா மெனத்திஸாக்காம் கொன்னீஸ் தெக்கானி.. அம்ராம் அமி கெ4னம் பொந்து3ல்னொ மெனெத் எல்லெ காமுன் அவஸ்யம் கெர்னொ..
Information
Name
Comments
 
Verification Code
2 + 6 =