Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Mathurai sabai...Shreyangam

ஸ்ரேயங்க3ம்:
மதுரை ஸெளராஷ்ட்ர சபை
இன்றைய மதுரை மாநகராட்சி 1910ஆம் ஆண்டில் நகரசபையாக உருவானது. அதுசமயம் நகரசபையின் முதல் தலைவராக 1910ஆம் ஆண்டு முதல் 1913ஆம் ஆண்டு முடிய திறம்பட பணியாற்றிய பெருமை இராமியா கே.வி. ராமாச்சாரியை சாரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிறந்த தேசபக்தர். வ.உ.சி.யின் நெருங்கிய நண்பர். நம் சமூக மக்களின் மேம்பாடு குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொண்டவர்.
நம் சமூகத்தின் முதல் பட்டதாரியான இவர் 1885ஆம் ஆண்டில் 1882ஆம் வருடத்திய கம்பெனிகளின் சட்டம் 26வது பிரிவின்படி மதுரையில் ஸெளராஷ்ட்ர மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க ஓர் அமைப்புத் தேவை என்பதைக் கருத்தி;ல் கொண்டு ஸெளராஷ்ட்ர சபையை உருவாக்கி அதன் தலைமைப் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டார். 
பின்னாட்களில் இந்த அமைப்பின் அவசியத்தை உணர்ந்து மற்ற ஊர்களில் வாழும் ஸெளராஷ்ட்ரர்களும் தத்தம் ஊர்களில் ஸெளராஷ்ட்ர சபையை உருவாக்கினார்கள். ஸெளராஷ்ட்ரர்கள் வாழுகின்ற அனைத்து ஊர்களிலும் ஒரு ஊர் சபை உருவாக இதுவே முன்னுதாரணம் என்றால் மிகையாகாது. இத்தகைய பாரம்பரியம் மிக்க மதுரை ஸெளராஷ்ட்ர சபைக்கு பெரியபெரிய கனதனவான்கள் நிர்வாக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டு வந்துள்ளார்கள்.
நம் சமூக மக்கள் வழிபாடு நடத்தி திருவிழா பூஜை புனஸ்காரம் என்று செய்வதற்கு தனியாக ஒரு கோயில் கட்டினார்கள். அதனை நிர்வகிக்க தங்களது அசையும் சொத்துக்கள் அசையாச் சொத்துக்கள் என்று எழுதி வைத்தார்கள். சபையின் மூலம் சமூக மக்களின் கல்வி தொழில் முன்னேற்றம் குறித்துவரும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுக் காணும் வகையில் அறக்கட்டளைகள் ஏற்படுத்தி சபைக்கு அர்ப்பணித்தார்கள். இவைகளையெல்லாம் கண்ணும் கருத்தாக நிர்வகித்தவர்களில் கே.எம்.எஸ்.லட்சுமணய்யர்ää எல்.கே.துளசிராம்ää மரு.டி.என்.சங்கர்லால்ää டி.கே.ராமாää பி.எ.பி. குப்புசாமிää சி.எஸ்.பி. பாலகிருஷ்ணய்யர்ää கே.வி.பத்மநாபய்யர் போன்ற பெரியோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்த பராம்பரிய மிக்க சபையை பல வருடங்களாக ஒருவரே நிர்வகித்து வந்ததைக் கண்டித்து போராடி அவரிடமிருந்து சபையை மீட்டி புதிய நிர்வாக சபைக்கு தலைமைப் பொறுப்பேற்றிய பின்னர் அவரும் முன்னவர் பாணியிலேயே தனக்குப் பின் தன் வாரிசு என்றும் உறுப்பினர்கள் சேர்க்கையை குறைக்கும் விதத்தில் எந்த ஒரு சமுதாய அமைப்பிலும் இல்லாத அதிசயமாக கட்டணத்தை உயர்த்தி இன்றுவரை அந்த குடும்பத்திடம் சபை உள்ளது என்பதுபோல உருவாக்கி விட்டார்கள். 
வருகின்ற தேர்தலில் புதிய நிர்வாக சபைக்கு வாக்களித்து வெற்றிப்பெறச் செய்வோம். குடும்ப நிர்வாகத்திற்கு விடைகொடுத்து அனுப்பி சபையின் நடைமுறையை ஒழுங்குப்படுத்தி சமூகத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வோம் என்ற நம்பிக்கையுடன் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாளை பிரார்த்திப்போம்!

ஸ்ரேயங்க3ம்:

Vol.4 1st June 2017 Issue: 19

மதுரை ஸெளராஷ்ட்ர சபை

இன்றைய மதுரை மாநகராட்சி 1910ஆம் ஆண்டில் நகரசபையாக உருவானது. அதுசமயம் நகரசபையின் முதல் தலைவராக 1910ஆம் ஆண்டு முதல் 1913ஆம் ஆண்டு முடிய திறம்பட பணியாற்றிய பெருமை இராமியா கே.வி. ராமாச்சாரியை சாரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிறந்த தேசபக்தர். வ.உ.சி.யின் நெருங்கிய நண்பர். நம் சமூக மக்களின் மேம்பாடு குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொண்டவர்.

நம் சமூகத்தின் முதல் பட்டதாரியான இவர் 1885ஆம் ஆண்டில் 1882ஆம் வருடத்திய கம்பெனிகளின் சட்டம் 26வது பிரிவின்படி மதுரையில் ஸெளராஷ்ட்ர மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க ஓர் அமைப்புத் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு ஸெளராஷ்ட்ர சபையை உருவாக்கி அதன் தலைமைப் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டார். 

பின்னாட்களில் இந்த அமைப்பின் அவசியத்தை உணர்ந்து மற்ற ஊர்களில் வாழும் ஸெளராஷ்ட்ரர்களும் தத்தம் ஊர்களில் ஸெளராஷ்ட்ர சபையை உருவாக்கினார்கள். ஸெளராஷ்ட்ரர்கள் வாழுகின்ற அனைத்து ஊர்களிலும் ஒரு ஊர் சபை உருவாக இதுவே முன்னுதாரணம் என்றால் மிகையாகாது. இத்தகைய பாரம்பரியம் மிக்க மதுரை ஸெளராஷ்ட்ர சபைக்கு பெரியபெரிய கனதனவான்கள் நிர்வாக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டு வந்துள்ளார்கள்.

நம் சமூக மக்கள் வழிபாடு நடத்தி திருவிழா பூஜை புனஸ்காரம் என்று செய்வதற்கு தனியாக ஒரு கோயில் கட்டினார்கள். அதனை நிர்வகிக்க தங்களது அசையும் சொத்துக்கள் அசையாச் சொத்துக்கள் என்று எழுதி வைத்தார்கள். சபையின் மூலம் சமூக மக்களின் கல்வி தொழில் முன்னேற்றம் குறித்துவரும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுக் காணும் வகையில் அறக்கட்டளைகள் ஏற்படுத்தி சபைக்கு அர்ப்பணித்தார்கள். இவைகளையெல்லாம் கண்ணும் கருத்தாக நிர்வகித்தவர்களில் கே.எம்.எஸ்.லட்சுமணய்யர், எல்.கே.துளசிராம், மரு.டி.என்.சங்கர்லால், டி.கே.ராமா, பி.எ.பி. குப்புசாமி, சி.எஸ்.பி. பாலகிருஷ்ணய்யர், கே.வி.பத்மநாபய்யர் போன்ற பெரியோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த பராம்பரிய மிக்க சபையை பல வருடங்களாக ஒருவரே நிர்வகித்து வந்ததைக் கண்டித்து போராடி அவரிடமிருந்து சபையை மீட்டி புதிய நிர்வாக சபைக்கு தலைமைப் பொறுப்பேற்றிய பின்னர் அவரும் முன்னவர் பாணியிலேயே தனக்குப் பின் தன் வாரிசு என்றும் உறுப்பினர்கள் சேர்க்கையை குறைக்கும் விதத்தில் எந்த ஒரு சமுதாய அமைப்பிலும் இல்லாத அதிசயமாக கட்டணத்தை உயர்த்தி இன்றுவரை அந்த குடும்பத்திடம் சபை உள்ளது என்பதுபோல உருவாக்கி விட்டார்கள். 

வருகின்ற தேர்தலில் புதிய நிர்வாக சபைக்கு வாக்களித்து வெற்றிப்பெறச் செய்வோம். குடும்ப நிர்வாகத்திற்கு விடைகொடுத்து அனுப்பி சபையின் நடைமுறையை ஒழுங்குப்படுத்தி சமூகத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வோம் என்ற நம்பிக்கையுடன் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாளை பிரார்த்திப்போம்!

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 7 =