Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
madya sabai...Shreyangam

ஸ்ரேயங்க3ம்: 


Vol.5 1st September  2017 Issue: 1


 

ஸெளராஷ்ட்ர மத்ய சபைக்குத் தேர்தல்!


ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் பதவிக்காலம் வருகின்ற டிசம்பர் 2017ல் முடிவடைகிறது. தலைவர் ஈஸ்வரமூர்த்தி தனது கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் குடந்தையில் நடைபெற்ற கடைசி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். அக்டோபர் மாதம் 25ஆம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கையை முடித்துக் கொள்ளவேண்டும் என்ற நடைமுறை விதியையும் குறிப்பிட்டுள்ளார். மகிழ்ச்சி!

 

இந்த முறை தேர்தல் அனைத்து ஊர்களிலும் நடைபெறவேண்டும் 250 உறுப்பினர்களுக்கு ஒரு நிர்வாகக் குழு உறுப்பினர் என்ற முறையில் மாற்றம் இல்லை. அந்தந்த ஊர் சபைகள் தேர்தலை முன்னின்று நடத்தவேண்டும் என்பது மத்யசபையின் விதிமுறை. பொருளாதார வசதி போதுமான ஆள்பலமின்மை என்ற காரணத்தால் கட்டப்பஞ்சாயத்து முறையில் போட்டியில்லை என்ற காரணம் காட்டி தேர்தலை நடத்தவிடாமல் எதிர்ப்பு இல்லாமல் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்ற அறிவிப்பை வெளியிடும் பழைய முறைகள் களையப்பட வேண்டும். போட்டியிட விரும்புவோர் சமூகத்திற்கு சிறப்பான முறையில் நீங்கள் செய்யாததை செய்யவேண்டும் என்று நினைத்து வரலாம் அல்லவா? அவர்களை தவிர்த்தால் அவருடைய சேவையை நாம் இழப்பதற்கு சமமல்லவா?

 

எனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் தவறான முன்னுதாரணத்தை பின்பற்றுவது தவிர்க்க வேண்டும். உண்மையான ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று சிறப்பான முறையில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். அவர்களால் சமூகத்திற்கு நல்ல பல அரிய பணிகள் நடைப்பெற்று சமூக மக்களின் தொழில் கல்வி பொருளாதாரம் மேம்படவேண்டும். இம்முறை தலைமை தஞ்சாவூர் நகரத்திற்கு மாற்றப்பட உள்ளது. தஞ்சையில் அரசியல் செல்வாக்கும் ஸெளராஷ்ட்ர மக்களிடம் நன்கு அறிமுகமானவரும் முன்னாள் மத்ய சபையின் பொதுச் செயலாளருமான எம்.எஸ்.ராமலிங்கம் தலைவராக முன்னிலைப் படுத்தப் படுகிறார். ஸெளராஷ்ட்ர மத்ய சபையை பொறுத்தவரை ஒருமுறை மதுரையில் தலைமைப் பதவிக் கொடுக்கப்பட்டால் அடுத்த முறை மதுரை அல்லாத பிற ஊர்களில் ஏதாவது ஊருக்கு தலைமை கிடைக்கும். அந்த மரபின்படி இம்முறை தஞ்சைக்கு செல்கிறது. எம்.எஸ்.ராமலிங்கம் பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றியவர். மத்ய சபையில் பொதுச் செயலாளராகவும் இருந்தவர். சுpறந்த சமூக ஆர்வலர். இவருடைய தலைமையில் சமூகத்திற்கு நல்லது நடக்கும் என்றும் அரசின் சார்பில் சமூகத்திற்கு கிடைக்கும் சலுகைகளை பெற்றுத் தருவதில் அவர் முனைப்புடன் செயல்படுவார் என்றும் நம் மொழி இலக்கியங்களில் ஆர்வமுடைவர் என்பதில் அதன் வளர்ச்சியிலும் தமது பங்களிப்பினை அளிப்பார் என்றும் அவர் ஒரு எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய தலைமையை ஏற்றுக் கொள்ள நம்மை தயார் படுத்திக் கொள்வோம். 


 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 7 =