Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni -kaLatni 20-8-18

சாதிக்க ஸ்ரீராம் சேகர் அழைக்கிறார்!

ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் 3வது செயற்குழுக்கூட்டம் சென்ற 11-8-2018 அன்று காலை 11.00 மணிக்கு மதுரை ஸெளராஷ்ட்ர சபையின் ஸ்ரீரெங்கமஹாலில் நடைப்பெற்றது. முன்னாள் பொதுச்செயலாளர் ராமசுப்பிரமணியன் தவிர மற்ற முன்னாள்கள் யாரும் கலந்து கொள்ளாத முதல் செயற்குழுக்கூட்டம் என்றும் சொல்லலாம். இக்கூட்டத்திற்கு தலைவர் ஸ்ரீராம்சேகர் தலைமை வகித்தார். மதுரை சபைத்தலைவர் பாலாஜி முன்னிலையில் தேசீய கொடி, காயத்ரி கொடி சமூகக் கொடி ஆகிய கொடியேற்றத்திற்குப் பின்னர் பொதுச்செயலாளர் சாந்தாராம் வரவேற்புரையுடன் தொடங்கியது. முன்னதாக தஞ்சை செயராமன் இறைவணக்கம் பாடினார். 

ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகையின் சார்பில் தலைவர் ஸ்ரீராம் சேகர் அவர்களுக்கு கர்நாடக ஆளுநருடன் இணைந்து அளவளாவும் புகைப்படம் ஒன்று பெரியஅளவில் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

மத்ய சபையின் செயல்பாடுகள் குறித்து பொதுச்செயலாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார். பொருளாளர் சுரேந்திரன் பாபு வரவுசெலவு கணக்குகளை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார். தலைவர் தனது உரையின்போது தான் கண்ட கனவின்படி இன்னும் நாம் சொல்லிக்கொள்ளும் வகையில் சாதனையாக எதுவும் செய்துவிட வில்லை. உறுப்பினர்கள் ஸெளராஷ்ட்ர பொதுமக்கள் ஆதரவில்தான் அனைத்தையும் சாதிக்கமுடியும். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பு வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 


மேலும் பிரதமரை அழைத்து ஸெளராஷ்ட்ர மகா சங்கமம் நடத்துவது பற்றி பேசினார். பின்னர் சங்கமத்திற்கு முன்னாள் பொதுச்செயலாளர் ராமசுப்பிரமணியன் அவர்களை அனைவரின் ஒப்புதலின்பேரில் கன்வீனராக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த சங்கமம் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற முடுக்கிவிடப்பட்டது. சங்கமத்தில் சங்கமிக்கும் கன்வீனர்களின் குழுப்பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதிக உறுப்பினர்களை சேர்த்த மதுரை செயற்குழு உறுப்பினர் நீலகண்டன் மற்றும் பரமக்குடி செயற்குழு உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து தலைவர் கௌரவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணித் தலைமை பொறுப்பிலிருக்கும் திருமதி. மகாலட்சுமிக்கு மத்திய அரசின் POWER GRID INDEPENDENT DIRECTOR  பதவி கிடைத்தமைக்குப் பாராட்டி மத்ய சபையின் சார்பில் பொன்னாடை அணிவித்து திருமதி மகாலட்சுமி கௌரவிக்கப்பட்டார்.


இக்கூட்டத்தில் சூர்யா ஞானேஸ்வரன் எழுதிய பி3ந்து3லா கெ2நி புகா3ர் ஸர்கு3, கிருஷ்ணமாச்சாரி எழுதிய ஸெளராஷ்ட்ர த3ர்ஸநொ என்ற நூல்களை மத்ய சபையின் மூலமாக மொத்தமாக வாங்க வேண்டி கடிதம் கொடுக்கப்பட்டது. உயர்மட்டக்குழுவில் ஆலோசனை செய்து முடிவு சொல்வதாகவும் ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் சூர்யா ஞானேஸ்வர் சிலப்பதிகாரம் மொழி பெயர்ப்பு செய்திருப்பது மகத்தான பணி. இவரை பெரிதாக மத்ய சபையின் மூலமாக பாராட்ட வேண்டும் என்றும் தலைவர் ஸ்ரீராம்சேகர் தனது உரையின் நடுவே குறிப்பிட்டார். 


பொதுக் காரியதரிசி கொண்டு வரும் இதர விஷயம் பெரும்பாலும் மதியஉணவு நேரத்தில் வரும். யாரும் பெரிதாகக் கண்டுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இம்முறை பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக அதாவது ஸெளராஷ்ட்ரர் மதம் மாறி இனம் மாறி ஸெளராஷ்ட்ரர் அல்லாதோரை மணமுடித்துக் கொள்ளும்போது சபைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைப் பற்றிய கருத்துக் கூறப்பட்டது. அப்போது உறுப்பினர்கள் ஒருமித்தக் குரலில் இது தனி சப்ஜட்டாக வைத்து பேசவேண்டும். எனவே இதனை அடுத்தக் கூட்டத்திற்கு பிரதான பொருளாக வைத்து தீர்மானிக்கலாம். இப்போது வேண்டாம் என்று நிறுத்தி வைக்கப்பட்டது. செயலாளர் ஆனந்த்பாபு நன்றி கூற கூட்டம் நிறைவுப்பெற்றது.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 7 =