Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni kaLatni 25-12

ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் தேர்தல் 25-12-2017 இன்று மதுரை ஸெளராஷ்ட்ர மேனிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. தலைமைத் தேர்தல் அதிகாரியாக டி.ஆர்.ஜெனார்தனன் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார். ஸெளராஷ்ட்ரப் பத்திரிகையாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக முன்னிலைப் படுத்தியிருந்தது நல்லதோர் முன்னுதாரணமாக இருந்தது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு பத்திரிகையாளர்கள் சார்பில் பாராட்டுகின்றோம்.

 

குறிப்பிட்டக் காலத்தில் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. ஸ்ரீராம்சேகர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து சென்னை ராமஜெயம் மனு தாக்கல் செய்தார். இதனால் தலைவர் பதவிக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றது.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உட்பட முன்னாள் தலைவர்கள், பொதுக்காரியதரிசிகள் மற்றும் ஊர்ச்சபைத் தலைவர்கள் வாக்களிக்க உரிமை உள்ளவர்கள். சரியாக 200பேர் வாக்களித்ததில் 168 வாக்குகள் பெற்று ஸ்ரீராம்சேகர் தலைவர் ஸ்தானத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப் போட்டியாக வேட்பாளர் ராமஜெயம் 31 வாக்குகள் பெற்றிருந்தார். ஒரு வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது.

 

அதன் பின்னர் தொடர்ந்து தலைவர் ஸ்ரீராம்சேகர் விதிமுறைப்படி பொதுக்காரியதரிசியாக என்.எஸ்.ஆர். சாந்தாராம் பொருளாளராக தஞ்சை சுரேந்திரன் பாபு முன்னிலைப் படுத்தினார். அந்த இரண்டு பதவிக்கு போட்டி வேட்பாளர்கள் யாரும் இல்லாததால் இருவரும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். பின் துணை பொதுச் செயலாளர்களாக கே.கே.சுரேந்திரன் இராசிபுரம் சங்கர்லால் ஆகியோர் போட்டியின்றி தேர்வானார்கள்.

 

உபதலைவர்களாக பெரியகுளம் சேஷாத்திரி, திருப்பூர் ரவிசன், வாலாஜாபேட்டை முனைவர் வி.பி.ராமமூர்த்தி, சேலம் முனைவர் வி.ஆர். ராஜேந்திரன், வீ;ரவநல்லூர் விஜயரெங்கன், சென்னை நாகராஜன், திண்டுக்கல் ராமமூர்த்தி, மதுரை குப்பண்ணாச்சாரி ஆகிய எட்டுபேர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

காரியதரிசிகளாக       மதுரை    ஆனந்த்பாபு,          திருபுவனம் தேவதாஸ்,            பரமக்குடி ராதாகிருஷ்ணன்,   எமனேஸ்வரம் மணிகண்டன்,  கெங்காதரன்,   சென்னை ஜனார்தனன், திண்டுக்கல் கண்ணன், வாலாஜாபேட்டை ஸ்ரீனிவாசன் ஆகிய எட்டுபேர்களும் போட்டியின்றி தேர்வானார்கள்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 5 =