Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
mOdiyin....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.4 16th November  2016 Issue: 6


 

மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம்!

பிரதமர் மோடி பழைய உயர் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திலிருந்து விலக்கி கொள்வதாக அறிவித்து உடன் மாற்றிக்கொள்ளும் கால அவகாசம் கொடுத்து பொருளாதார புரட்சி செய்து ஒரு முன்மாதிரியாக காட்டியுள்ளார். நாட்டில் கருப்புப்பணத்தை அடியோடு ஒழித்துக் காட்டுகிறேன் என்று கூறிய மோடி அதன் முன்னோடியாக 500, 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுதல். இதனால் தேவைக்கு அதிகமாக வருமான வரிக்கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றி புழக்கத்திலிருந்து நிறுத்தி பதுக்கி வைத்துள்ள அத்தனை பணங்களும் மாற்றிக் கொள்ள வரும்போது இந்த திட்டத்தின் உண்மை தன்மை வெளிப்படும். ஓன்றுக்கொன்று தொடர்புடைய பல நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்கும் தீயசெயல்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். 


மோடியின் இத்திட்டம் துணிச்சலான செயல்பாடு. இது உடனடியாக அமுலுக்கு வந்ததால் இந்த மாற்றம் சாதாரண பொது மக்களுக்கு சற்று சிரமம் முதல் மிகுந்த சிரமம் வரை உண்டானாலும் பாரதம் முழுவதிலும் பொது மக்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்போதுதான் வளமான பாரதம் உருவாகும் என்பது உறுதி. ஒரு பிச்சைக்காரனுக்கே நாட்டின் முன்னேற்றம் எதனால் தடை படுகிறது என்று தெரியும்போது நம்மால் நிச்சயமாக உணர முடியும். அன்றாட வாழ்க்கையின் நடைமுறை சிக்கலைப் பெரிதுபடுத்தி இந்த திட்டத்தை களங்கப்படுத்த பதுக்கல்காரர்கள் முயலுவார்கள். பொதுமக்களாகிய நாம்தான் உஷராக இருக்கவேண்டும். நம்முடைய முழு ஒத்துழைப்பையும் கொடுத்து பிரதமரின் முடிவிற்கு ஆதரவு கொடுப்பதுடன் நாட்டின் எதிர்காலத்திற்கும் ஒத்துழைக்கிறோம் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோம்.


பிரதான அரசியல் கட்சிகள்தான் இந்த திட்டத்தை எதிர்த்து பேரணி, போராட்டம் என்று கிளம்பியுள்ளனர். பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல்படி வங்கிகளில் வரிசையில் நின்று தங்கள் தேவைக்கு மாற்றிக்கொண்டு வருகின்றனர். இதனால் கருப்புப்பணம் யாரிடம் உள்ளது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. கருப்புப்பணத்தை ஒழிப்பது அரசின் கடமை மட்டுமல்ல. ஓவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையும்கூட!


பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம். அவரின் அதிரடித் திட்டத்திற்கு ஆதரவுக் கொடுப்போம்!

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 9 =