Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
yAr muthalvar....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:
யார் முதல்வர்!
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. அதீத வளர்ச்சியுடன் மக்கள் மனதில் இடம் பெற்று ஒரு கட்டத்தி;ல் தமிழக முதல்வரானர் எம்.ஜி.ஆர். அவருடைய ஆட்சியில் கட்சி மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றது. அவருடைய காலத்திற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஜெயலலிதா பொறுப்பேற்று கட்சியை நல்ல முறையில் நிர்வகித்ததோடு ஆட்சியிலும் மக்கள் மனதில் இடம்பெறும் அளவிற்கு திறமையான முறையில் தனக்கு நிகர் தானே என்ற முறையில் நடந்து காட்டினார். தனக்கு அரசியல் வாழ்வில் சிக்கல் வந்தபோதெல்லாம் தனக்கும் கட்சிக்கும் நம்பிக்கையானவரான பன்னீர்செல்வம் ஆட்சி பொறுப்பினை ஏற்று பின்னர் பொறுப்புடன் ஒப்படைத்த பாங்கினை யாவரும் அறிவர். அவரது மறைவிற்குப் பின்னர் அவரால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
ஆனால் ஜெயலலிதாவுடனிருந்த சசிகலா பதவி அதிகார ஆசையினால் உந்தப்பட்டு கட்சியை கைப்பற்றி விதிமுறைகளை மீறி பொதுச்செயலாளரானார். சட்டமன்ற தலைமைப் பதவியும் தனக்கே கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் தான் முதல்வராக முடியும் என்ற ஆசையினால் தனது ஆள்பலத்தாலும் பணபலத்தாலும் வலுக்கட்டாயமாக பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்;ய வைத்தார். 
அதற்குள் ஜெயலலிதா-சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகும் நாள் குறிப்பிடப்பட்டது. இதனிடையே தனக்கு முதல்வராக போதுமான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக ஆளுனருக்கு கடிதம் அனுப்பினார். தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆளுனர் சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திராமல் உடனே தன்னை அழைக்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தினார். 
தீர்ப்பு வெளியானது. சசிகலாவின் கனவு தகர்ந்தது. நான்கு ஆண்டு சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டது. இனி தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? யார் முதல்வராக வருவார்? அதிமுக கட்சியில் குழப்பங்கள் தீருமா? இந்த நாட்டுக்குள் சிறைச்சாலையா? இல்லை சிறைச்சாலைக்குள் இந்த நாடா? பொறுத்திருந்து பார்ப்போம்! 

ஸ்ரேயங்க3ம்:

Vol.4 16th February  2017 Issue: 12

யார் முதல்வர்!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. அதீத வளர்ச்சியுடன் மக்கள் மனதில் இடம் பெற்று ஒரு கட்டத்தி;ல் தமிழக முதல்வரானர் எம்.ஜி.ஆர். அவருடைய ஆட்சியில் கட்சி மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றது. அவருடைய காலத்திற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஜெயலலிதா பொறுப்பேற்று கட்சியை நல்ல முறையில் நிர்வகித்ததோடு ஆட்சியிலும் மக்கள் மனதில் இடம்பெறும் அளவிற்கு திறமையான முறையில் தனக்கு நிகர் தானே என்ற முறையில் நடந்து காட்டினார். தனக்கு அரசியல் வாழ்வில் சிக்கல் வந்தபோதெல்லாம் தனக்கும் கட்சிக்கும் நம்பிக்கையானவரான பன்னீர்செல்வம் ஆட்சி பொறுப்பினை ஏற்று பின்னர் பொறுப்புடன் ஒப்படைத்த பாங்கினை யாவரும் அறிவர். அவரது மறைவிற்குப் பின்னர் அவரால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

ஆனால் ஜெயலலிதாவுடனிருந்த சசிகலா பதவி அதிகார ஆசையினால் உந்தப்பட்டு கட்சியை கைப்பற்றி விதிமுறைகளை மீறி பொதுச்செயலாளரானார். சட்டமன்ற தலைமைப் பதவியும் தனக்கே கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் தான் முதல்வராக முடியும் என்ற ஆசையினால் தனது ஆள்பலத்தாலும் பணபலத்தாலும் வலுக்கட்டாயமாக பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார். 

அதற்குள் ஜெயலலிதா-சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகும் நாள் குறிப்பிடப்பட்டது. இதனிடையே தனக்கு முதல்வராக போதுமான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக ஆளுனருக்கு கடிதம் அனுப்பினார். தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆளுனர் சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திராமல் உடனே தன்னை அழைக்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தினார். 

தீர்ப்பு வெளியானது. சசிகலாவின் கனவு தகர்ந்தது. நான்கு ஆண்டு சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டது. இனி தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? யார் முதல்வராக வருவார்? அதிமுக கட்சியில் குழப்பங்கள் தீருமா? இந்த நாட்டுக்குள் சிறைச்சாலையா? இல்லை சிறைச்சாலைக்குள் இந்த நாடா? பொறுத்திருந்து பார்ப்போம்! 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 7 =