Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
thErthal ...3

அன்புள்ள தம்பிக்கு….
ஸெளராஷ்ட்ரர்கள் தேசிய அரசியலில் வெகுவாக பங்கெடுத்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் சிறந்த முறையில் சேவை செய்துள்ளார்கள் என்பதை சரித்திரம் சான்று கூறுகிறது. மாநில அரசியலில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் வந்தவுடன் அரசியலில் நமது மிகவும் குறைந்து காணப்பட்டது. பின்பு எம்.ஜி.ஆர். ரசிகர்களால் அந்த நிலைமை மாறி திராவிடக் கட்சிகளிலும் நம் சமூகத்தவர்கள் பங்கெடுக்கத் தொடங்கினர்.
தி.மு.க.வில் பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் ஆட்சி ஏற்பட்டப்பின் மதுரையில் ராமகிருஷ்ணன் கிழக்குச்சட்டமன்ற உறுப்பினராகவும் சங்கரன் துணைமேயராகவும் இருந்துள்ளார். ஆர்.பி.ராமகிருஷ்ணன்ää வித்யா திருச்சியில் கிருஷ்ணமூர்த்தி போன்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்தார்கள். ஏனென்றால் திராவிடக் கட்சிகளின் முரண்பாடு மிகுந்த சில கொள்கைகள் நம் சமூகத்தவர்களால் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள இயலாமல் போனதற்கு ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது. பின்னர் எம்.ஜி.ஆர் தனியாகக் கட்சித் தொடங்கிய பின் முழுஅளவில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கினார்கள். தேசிய அரசியலில் இருந்தவர்களும் சிறிதுசிறிதாக மாநிலக் கட்சிகளில் கால்பதிக்கத் தொடங்கினார்கள். 
இன்றையக் காலக்கட்டத்தில் காணப்படும் ரவுடித்தனமும் ஆதிக்கத்தன்மையும்தான் மாநிலக் கட்சிகளில் நம் சமூகப்பிரமுகர்கள் பங்கெடுத்துக் கொள்வதில் தயக்கம் காட்டியது. இருப்பினும் துணிந்தவர்கள் வேரூன்றத் தொடங்கினர். இப்போது அனைத்துக் கட்சிகளிலும் நம் சமூகத்தவர்கள் முன்னிலை வகிக்கத் தொடங்கி விட்டாலும் முதன்மை ஸ்தானத்தை எட்ட இயலாத காரணத்;தால் நமது சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்டுப் பெறுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கேட்டோம். கிடைத்தும் விட்டது. எப்படி? நம்மையே குழப்பிவிட்டு நமக்குள் ஆழம் பார்க்கிறார்கள். நமது புத்திசாலித்தனத்தையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்திக் காட்ட வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்.
நம்மை ஆண்ட கட்சியும் ஆளுகின்ற கட்சியும் சரி இது வரை நாட்டு மக்களுக்கு என்ன செய்தது என்பதை மனதில் கிரகித்துக் கொள். இனி வருங்காலத்தில் நம் நாட்டிற்கும் நம் சமூகத்திற்கு என்ன தேவை அதனை செய்வதற்கும் பெற்றுத் தருவதற்கும் யார் முயற்சி எடுப்பார்கள் என்பதையும் சிந்தித்துக் கொள். மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்திற்கு செல்பவர்கள் தொகுதி மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் மட்டுமே அவர்கள் செயல்பாடுகள் இருக்கவேண்டுமே தவிர கட்சிக் கட்டுப்பாடு என்ற போர்வையில் வெளிநடப்பு செய்வது அறவேக் கூடாது. 
நகரசபை முதல் மாநகராட்சி வரை நம் சமூகத்தினரின் பணி அளவிட முடியாதது. ஓவ்வொரு பிரதானக் கட்சிகளும் அரசாங்கத்தின் வரலாற்றினை புரட்டிப்பார்க்க வேண்டும். சமுதாய வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களையும் அதன் பராம்பரியங்களையும் தங்களுடன் இணைத்துக் கொள்ள தயக்கம் காட்டக்கூடாது. இந்த பண்பாட்டினை மாநிலக் கட்சிகள் செய்யத் தவறியதால் தான் நம்முடைய இந்த நிலைக்கு காரணம். 
கிட்டத்தட்ட 1957க்குப் பிறகு அதாவது லட்சுமிகாந்தம் மதுரை கிழக்குச் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தேசிய அரசியலிலும் சரி மாநில அரசியலிலும் சரி நம் சமூகப் பெண்மணிகள் யாரும் தங்களை முழுமையாக அரசியலில் ஈடுப்படுத்திக் கொள்ளவில்லை. மாமன்ற உறுப்பினராகி வலம்வந்த சகோதரி லீலாவதியும் அரசியல் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார். இப்போது துணிவுடன் மிகுந்த கல்வியறிவுடன் சமூகப் பொதுச் சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மகாலட்சுமி பாரதிய ஜனதா கட்சியில் மாநில செயலாளராகி தம்மை முழு நேர அரசியல்வாதியாக்கிக் கொண்டுள்ளார். மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு அவரை வேட்பாளராக்கியுள்ளது பாரதிய ஜனதா மேலிடம். இது நம் சமூத்திற்கு மத்திய அரசால் கிடைத்த அங்கீகாரமாகவே கொள்ளலாம். சமூகத்தை மட்டும் நம்பி இவர் களமிறங்கியிருந்தாலும் கட்சி வாக்குகள் பிற சமூகத்தினரின் வாக்குகள் என்று ஏகமாக அவருக்கு ஆதரவளித்து வருவது பெருமையாகவும் வெற்றி வாய்ப்பிற்கு உறுதி செய்பவைகளாக இருக்கிறது. 
இருந்தாலும் …. திராவிடக் கட்சிகளும் நீங்கள் கேட்டதால் நாங்கள் கொடுத்துள்ளோம் என்ற ரீதியில் திமுக பாலச்சந்திரன் என்பவருக்கும் அதிமுக சரவணன் என்பவருக்கும் வேட்பாளராக அறிவித்தது. மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் உள்ள அணியில் மாற்று சமூகத்தினருக்கு வாய்ப்பளித்துள்ளது. நமக்குள்ளே இருக்கும் பெரும் குழப்பமே இதனால்தான். நம் சமூகத்தவர்கள் என்று நாம் வாக்களிக்க நமது வாக்குகள் பிரிந்து நான்காவதாக மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் எளிதில் வென்றுவிடுவாரோ என்ற அச்சம் எனக்குள் உண்டு. நீயும் அதனை கொஞ்சம் யோசித்து வை. இதனை எப்படி சமாளிக்கலாம். மூன்றில் ஒருவர் யாரென்று தெளிவாக முடிவெடுக்க எப்படிப்பட்ட கண்ணோட்டம் தேவை என்பதையும் அடுத்த கடிதத்தில் சொல்கிறேன். அடுத்தக் கடிதம் தேர்தலும் இரண்டு தினம் முன்பே எழுதி விடுகிறேன்.
உனதன்பு சகோதரன்
சூரியா ஞானேஸ்வர்

அன்புள்ள தம்பிக்கு….

ஸெளராஷ்ட்ரர்கள் தேசிய அரசியலில் வெகுவாக பங்கெடுத்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் சிறந்த முறையில் சேவை செய்துள்ளார்கள் என்பதை சரித்திரம் சான்று கூறுகிறது. மாநில அரசியலில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் வந்தவுடன் அரசியலில் நமது மிகவும் குறைந்து காணப்பட்டது. பின்பு எம்.ஜி.ஆர். ரசிகர்களால் அந்த நிலைமை மாறி திராவிடக் கட்சிகளிலும் நம் சமூகத்தவர்கள் பங்கெடுக்கத் தொடங்கினர்.

தி.மு.க.வில் பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் ஆட்சி ஏற்பட்டப்பின் மதுரையில் ராமகிருஷ்ணன் கிழக்குச்சட்டமன்ற உறுப்பினராகவும் சங்கரன் துணைமேயராகவும் இருந்துள்ளார். ஆர்.பி.ராமகிருஷ்ணன், வித்யா திருச்சியில் கிருஷ்ணமூர்த்தி போன்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்தார்கள். ஏனென்றால் திராவிடக் கட்சிகளின் முரண்பாடு மிகுந்த சில கொள்கைகள் நம் சமூகத்தவர்களால் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள இயலாமல் போனதற்கு ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது. பின்னர் எம்.ஜி.ஆர் தனியாகக் கட்சித் தொடங்கிய பின் முழுஅளவில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கினார்கள். தேசிய அரசியலில் இருந்தவர்களும் சிறிதுசிறிதாக மாநிலக் கட்சிகளில் கால்பதிக்கத் தொடங்கினார்கள். 

இன்றையக் காலக்கட்டத்தில் காணப்படும் ரவுடித்தனமும் ஆதிக்கத்தன்மையும்தான் மாநிலக் கட்சிகளில் நம் சமூகப்பிரமுகர்கள் பங்கெடுத்துக் கொள்வதில் தயக்கம் காட்டியது. இருப்பினும் துணிந்தவர்கள் வேரூன்றத் தொடங்கினர். இப்போது அனைத்துக் கட்சிகளிலும் நம் சமூகத்தவர்கள் முன்னிலை வகிக்கத் தொடங்கி விட்டாலும் முதன்மை ஸ்தானத்தை எட்ட இயலாத காரணத்தால் நமது சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்டுப் பெறுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கேட்டோம். கிடைத்தும் விட்டது. எப்படி? நம்மையே குழப்பிவிட்டு நமக்குள் ஆழம் பார்க்கிறார்கள். நமது புத்திசாலித்தனத்தையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்திக் காட்ட வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்.

நம்மை ஆண்ட கட்சியும் ஆளுகின்ற கட்சியும் சரி இது வரை நாட்டு மக்களுக்கு என்ன செய்தது என்பதை மனதில் கிரகித்துக் கொள். இனி வருங்காலத்தில் நம் நாட்டிற்கும் நம் சமூகத்திற்கு என்ன தேவை அதனை செய்வதற்கும் பெற்றுத் தருவதற்கும் யார் முயற்சி எடுப்பார்கள் என்பதையும் சிந்தித்துக் கொள். மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்திற்கு செல்பவர்கள் தொகுதி மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் மட்டுமே அவர்கள் செயல்பாடுகள் இருக்கவேண்டுமே தவிர கட்சிக் கட்டுப்பாடு என்ற போர்வையில் வெளிநடப்பு செய்வது அறவேக் கூடாது. 

நகரசபை முதல் மாநகராட்சி வரை நம் சமூகத்தினரின் பணி அளவிட முடியாதது. ஓவ்வொரு பிரதானக் கட்சிகளும் அரசாங்கத்தின் வரலாற்றினை புரட்டிப்பார்க்க வேண்டும். சமுதாய வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களையும் அதன் பராம்பரியங்களையும் தங்களுடன் இணைத்துக் கொள்ள தயக்கம் காட்டக்கூடாது. இந்த பண்பாட்டினை மாநிலக் கட்சிகள் செய்யத் தவறியதால் தான் நம்முடைய இந்த நிலைக்கு காரணம். 

கிட்டத்தட்ட 1957க்குப் பிறகு அதாவது லட்சுமிகாந்தம் மதுரை கிழக்குச் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தேசிய அரசியலிலும் சரி மாநில அரசியலிலும் சரி நம் சமூகப் பெண்மணிகள் யாரும் தங்களை முழுமையாக அரசியலில் ஈடுப்படுத்திக் கொள்ளவில்லை. மாமன்ற உறுப்பினராகி வலம்வந்த சகோதரி லீலாவதியும் அரசியல் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார். இப்போது துணிவுடன் மிகுந்த கல்வியறிவுடன் சமூகப் பொதுச் சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மகாலட்சுமி பாரதிய ஜனதா கட்சியில் மாநில செயலாளராகி தம்மை முழு நேர அரசியல்வாதியாக்கிக் கொண்டுள்ளார். மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு அவரை வேட்பாளராக்கியுள்ளது பாரதிய ஜனதா மேலிடம். இது நம் சமூத்திற்கு மத்திய அரசால் கிடைத்த அங்கீகாரமாகவே கொள்ளலாம். சமூகத்தை மட்டும் நம்பி இவர் களமிறங்கியிருந்தாலும் கட்சி வாக்குகள் பிற சமூகத்தினரின் வாக்குகள் என்று ஏகமாக அவருக்கு ஆதரவளித்து வருவது பெருமையாகவும் வெற்றி வாய்ப்பிற்கு உறுதி செய்பவைகளாக இருக்கிறது. 

இருந்தாலும் …. திராவிடக் கட்சிகளும் நீங்கள் கேட்டதால் நாங்கள் கொடுத்துள்ளோம் என்ற ரீதியில் திமுக பாலச்சந்திரன் என்பவருக்கும் அதிமுக சரவணன் என்பவருக்கும் வேட்பாளராக அறிவித்தது. மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் உள்ள அணியில் மாற்று சமூகத்தினருக்கு வாய்ப்பளித்துள்ளது. நமக்குள்ளே இருக்கும் பெரும் குழப்பமே இதனால்தான். நம் சமூகத்தவர்கள் என்று நாம் வாக்களிக்க நமது வாக்குகள் பிரிந்து நான்காவதாக மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் எளிதில் வென்றுவிடுவாரோ என்ற அச்சம் எனக்குள் உண்டு. நீயும் அதனை கொஞ்சம் யோசித்து வை. இதனை எப்படி சமாளிக்கலாம். மூன்றில் ஒருவர் யாரென்று தெளிவாக முடிவெடுக்க எப்படிப்பட்ட கண்ணோட்டம் தேவை என்பதையும் அடுத்த கடிதத்தில் சொல்கிறேன். அடுத்தக் கடிதம் தேர்தலும் இரண்டு தினம் முன்பே எழுதி விடுகிறேன்.

உனதன்பு சகோதரன்

சூரியா ஞானேஸ்வர்

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 9 =