Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
jananayagathirku.....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


  Vol.3 16th March 2016 Issue: 14
ஜனநாயகத்திற்கு உறுதுணையாக….!

தேர்தல் நாள் தெரிந்து விட்டது. வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் அரசியல் கட்சிகள் வெளியிடவில்லை. ஒவ்வொரு ஸெளராஷ்ட்ரனின் மனதில் தன்னுடைய வாக்கு நிச்சயமாக ஸெளராஷ்ட்ர வேட்பாளருக்கே என்ற ரீதியில் மனதை தயார்ப்படுத்தி வருவது நம் கண் முன்னே தெரிகிறது. நம்முடைய பலத்தைக் காட்டும் வாய்ப்பு ஒவ்வொரு கட்சிகளுக்கும் நாம் ஏற்படுத்திக் கொடுப்பதில் சிறிதும் தளரக்கூடாது. மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
ஊர்ச்சபைகள் மத்ய சபை நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக விருப்பமனு கொடுத்த வேட்பாளர்களை அழைத்துப்பேச வேண்டும். ஒரே கட்சியில் ஒரே தொகுதியை கேட்டு பலர் விருப்ப மனுக்களை அளித்திருந்தாலும் அவர்களுக்குள் தகுதி வாய்ந்த நபரை தேர்ந்தெடுப்பதில் முனைப்புடன் செயல் படவேண்டும். நாம் சுட்டிக்காட்டும் நபருக்கு வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் கட்சி பாரபட்சமின்றி அந்தந்த வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபடுவதை லட்சியமாகக் கொண்டால்தான் அரசியல் கட்சிகள் நம்முடைய வலிமையின் தன்மையை எண்ணி வியப்படைவார்கள். தமிழகத்திலுள்ள ஜாதிக்கட்சிகள் ஜாதி சங்கங்கள் என்று ஏகமாக அழைத்துப் பேசி ஆதரவினைத் திரட்டி அரசியல் பண்ணும் கட்சிகள் இதுவரை ஸெளராஷ்ட்ர சபைத்தலைவர்களை நாடி வரவில்லை என்பதை மனதில் கொண்டு நம்முடைய பணியை முடுக்கி விடவேண்டும்.
நம்முடைய தாரக மந்திரம் ஸெளராஷ்ட்ரர்களின் வாக்கு ஸெளராஷ்ட்ரர்களுக்கே என்பதாக இருக்க வேண்டும். ஸெளராஷ்ட்ரர்களின் உரிமைகளை சட்டமன்றத்தில் பேசும் பிரதிநிதியாக நமக்கு எல்லாகட்சிகளிலும் ஆட்கள் தேவை. நமக்கென ஒரு கட்சியை நாமே உருவாக்க வேண்டும். ஆனால் அதற்கான காலஅவகாசம் இப்போதில்லை. ஸெளராஷ்ட்ர முன்னேற்றக் கழகமும் அரசியல் அமைப்பாக செயல்படும் என்ற எதிர்ப்பார்ப்பு ஈடேறவில்லை. எனவே இப்போதைக்கு இருக்கும் கட்சிகளில் தகுதியின் அடிப்படையில் ஒரு ஸெளராஷ்ட்ரருக்கு வாய்ப்பினை உருவாக்கி அவரது வெற்றிக்காக பாடுபடுவது என்ற அடிப்படையில் சபைகள் மற்றும் பொது ஸ்தாபனங்கள் செயல்பட்டு ஸெளராஷ்ட்ரர்களின் வாக்குகளே வெற்றியை நிர்ணயிக்கும் வாக்குகள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 
கூட்டணி அமையாமல் எந்தக் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாது என்கின்ற சூழ்நிலையில் இன்றைய அரசியல் களம் உள்ளது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. மத்தியில் யார் ஆளுகின்றனரோ அவர்களுடன் கூட்டணி அமைத்து வெற்றிப் பெறுகின்ற கட்சியால்தான் மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை மத்திய அரசின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த முடியும் என்பது இதுவரை நாம் கண்கூடாக கண்டுவரும் உண்மை. ஓட்டுக்கு துட்டு என்ற ரீதியில் செயல்படும் அரசியல் கட்சிகள் ஒருபுறம் இருந்தாலும் ஆளுகின்ற காலம் முழுமைக்கும் இலவசங்களை அள்ளி வழங்கியே மக்களை தங்கள் அடிமைகளாக்கி சம்பாதித்துக் கொள்ளும் கட்சிகளும் மற்றொரு புறம் இருக்கத்தான் செய்கிறார்கள். 
ஸெளராஷ்ட்ர வாக்களர்கள் மட்டுமின்றி அனைத்து வாக்காளர்களும் ஒருமித்தக் கருத்துடன் இலவசங்களை நிராகரிப்பதும் ஓட்டுக்கு துட்டுப் பெறுவதை தவிர்ப்பதுமாக செயல்பட்டு உண்மையான ஜனநாயகத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 6 =