Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni 16-08

சேலம் ஸெளராஷ்ட்ர சமூக சேவா சங்கத்தின் 29வது ஆண்டு பரிசளிப்பு விழாவும் 3வது ஆண்டு புத்தகக் கண்காட்சியும் 15-08-2017 அன்று சேலம் பட்டைக்கோவில் அருகிலுள்ள வசந்த மண்டபத்தில் காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. இவ்விழாவில் முத்தாய்ப்பாக நம் சமூக எழுத்தாளர்கள் பதிப்பாளர்களின் புதிய நூல் வெளியீட்டு நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. விழாவை தஞ்சை எம்.எஸ்.ராமலிங்கம் தொடங்கிவைத்தார். ஸெளராஷ்ட்ர மத்ய சபை பொதுக்காரியதரிசி ராமசுப்பிரமணியன், துணைச் செயலாளர் சாந்தாராமன், மதுரை நிலையூர் ஆதினம் ஸ்ரீசுப்பிரமணியசுவாமிகள் சேலம் மண்டல 2ன் தலைவர் ஜெயப்பிரகாஷ், சென்னை ரவிக்கொண்டா, மதுரை கொண்டாசெந்தில்குமார், பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் மற்றும் வி.என்.சாமி ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவின் முதல் நிகழ்வாக திருமதி. சரோஜாசுந்தரராஜன் அவர்களின் தமிழ் விளக்கவுரையுடன் சேலம் புட்டா. அழகார்யரின் பஞ்சல் சரித்ரு காவிய நூல் வெளியிடப்பட்டது.

பின்னர் பேராசிரியர் எல்.ஆர்.கோவர்தனன் ஸெளராஷ்ட்ர லிபியில் எழுதிய காதம்பரி நாவல் வெளியிடப்பட்டது. இந்நூல் ரவிக்கொண்டா ஸெளராஷ்ட்ர மொழியில் தமிழ் மற்றும் நாகரி லிபியிலும் வெளியானது. தற்போது கோவர்தனன் முற்றிலும் ஸெளராஷ்ட்ர லிபியில் எழுதியுள்ளது ஸெளராஷ்ட்ரர்களிடையே ஸெளராஷ்ட்ர எழுத்தினைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

ஸெளராஷ்ட்ர மொழியை ரோமன் எழுத்துக்கள் மூலமாக எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ளும் விதத்தில் பெங்களுர் கே.வி.பதி அவர்களால் வடிவமைக்கப்பட்ட நூல் வெளியிடப்பட்டது. அடுத்ததாக டி.கே. ஜெயபாலன் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரால் தொகுத்து அளிக்கப்பட்ட ஸ்ரீமந் நாராயணனின் நாமங்களும் நன்மைகளும் என்ற நூலும் ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமாவளி என்ற நூல்களும் வெளியிடப்பட்டது. 

சேலம் ஸெளராஷ்ட்ர சமூக சேவா சங்கத்தின் 3வது புத்தகக் கண்காட்சியின்போது சேலம் போதிமரம் என்ற முதியோர் இல்லத்தின் சார்பில் அதன் அமைப்பாளர்களான முனைவர். ரமேஷ்குமார், ராஜராஜேஸ்வரி, பிரேமா ஆகியோர் கலந்து கொண்டு அவர்களது சேவையை விளக்கி கூறினார்கள். விழாவிற்கு வந்திருந்தோர் மனமுவந்து நன்கொடைகள் வழங்கி அவர்களது சேவைக்கு ஊக்கமும் பாராட்டும் தெரிவித்தனர். தொடர்ந்து பி2ரிஸா என்ற ஸெளராஷ்ட்ர மொழித் திரைப்படத்தின் வெளியீட்டுவிழாவும் நடைபெற்றது. இதன் கதை இயக்கம் தினேஷ்கோழின் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். 

மதிய உணவிற்குப் பின் மாலை 4.30 மணியளவில் சிறுமி ரேணுகாநாகராஜனின் நாட்டிய நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.ஆர்.ராதா அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தலைமை வகித்தார். தஞ்சை ராமலிங்கம், சேலம் மாநகராட்சி மண்டல 2ன் தலைவர் ஜெயப்பிரகாஷ், கமலா மருத்துவமனை மரு. ராஜகோபால் ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இதில் எழுத்தாளர்கள் ராசிபுரம் அனந்தராமன், சேலம் ஜெகத்நாராயணன், ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியரும் எழுத்தாளருமான சூரியாஞானேஸ்வரன், சமூக குரல் ஆசிரியர் உமாபதி, எழுத்தாளர் ரவிக்கொண்டா, பேராசிரியர் கோவர்தனன், நாமக்கல் சீனிவாசன், திருச்சி ரெங்கராஜன், ஆரணி மனோகரன் கேசவன், பத்திரிகையாளர் வி.என்.சாமி, ஆர்.என்.சதாசிவன், எழுத்தாளாரும் பதிப்பாளருமான தேவிகாகுலசேகரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் பதிப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டதை தொடர்ந்து வாழ்நாள் சாதனையாளர்களாக சமூகப்பணியாற்றிவரும் மூத்த ஆர்வலர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது கமலா மருத்துவ மனை மரு. ராஜகோபால், விநாயகாமிஷின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ், மத்யசபை பொதுக்காரியதரிசி ராமசுப்பிரமணியன், சாந்தாராம் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா வி.என்.சாமி, சரோஜாசுந்தரராஜன், கே.வி.பதி, வி.கே.நீலாராவ் ஆகியோர்க்கு ஸெளராஷ்ட்ர திலகம் என்ற விருது வழங்கி பொன்னாடை, சந்தனமாலை, டர்பன் அணிவித்து கௌரவித்தார். 

சேலம் ஸெளராஷ்ட்ர சமூக சேவா சங்கத்தின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான சேலம்வாழ் ஸெளராஷ்ட்ர மாணவ-மாணவியர்களில் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சிபிஎஸ்இ அதிகமதிப்பெண் பெற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் ரொக்கப்பரிசு வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இறுதியாக தா.கு.சுப்பிரமணியன் குழுவினரின் பட்டிமன்றம் நடைப்பெற்றது. ஸெளராஷ்ட்ர சமூக முன்னேற்றத்திற்கு இன்றைய முக்கிய தேவை இளைஞர்களின் எழுச்சியா பெரியவர்களின் உந்துதலா என்ற தலைப்பில் நடைப்பெற்ற பட்டிமன்றத்தில் இளைஞர்களின் எழுச்சியே என்ற தலைப்பில் மதுரை பிரகாஷ்குமார், தஞ்சை கணேஷ்சங்கர், சேலம் தேவிகாகுலசேகரன், ஆரணி மனோகரன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை வலியுறுத்தி பேசினார்கள்.

பெரியவர்களின் உந்துதலே என்ற தலைப்பில் மதுரை புலவர் பரசுராம், தஞ்சை அர்ஜுனா.கிருஷ்ணாராம், சேலம் ஜாதா. பூபதி, சேலம் பதிங்கா.சுரேஷ்பாபு ஆகியோர் தங்கள் கருத்துக்களை வலியுறுத்திப் பேசினார்கள். இருதரப்பு வாதங்கள் சுவாரசியமாக ஆரவாரத்துடன் நடைப்பெற்றது. இறுதியில் தண்டவாளத்தில் செல்லும் ரயிலின் இருச்சக்கரங்களைப் போலத்தான் இளைஞர்களின் எழுச்சியும் பெரியவர்களின் உந்துதலும். இரண்டும் ஒன்றாக செல்லும்போதுதான் சமூக முன்னேற்றம் என்ற இலக்கினை அடையமுடியும் என்று தீர்ப்பினை வழங்கி முடித்து வைத்தார். நாகராஜன் நன்றி கூறி விழாவினை முடித்து வைத்தார். 

நாகராஜன், சீனிவாசன், சுரேஷ்பாபுவுடன் இந்த ஆண்டு தஞ்சையைச் சேர்ந்த அர்ஜுனா.கிருஷ்ணாராம், ஆதி நாராயணன் இணைந்து சிறப்பாக பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

வருகின்ற 21-08-2017 அன்று கும்பகோணம் ராயா குரூப் குழுமத்தின் தலைவர் கோவிந்தராஜன் தம்பதியர்க்கு சஷ்டியப்த பூர்த்தி சாந்தி வைபவம் நடைபெறுகிறது. இந்த மாபெரும் விழாவிற்கு தொழிலதிபர்கள், அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், சமூகப்பிரமுகர்கள் என்று அனைத்து தரப்பினரையும் அழைத்துள்ளனர். குடந்தையில் வரலாறு படைக்கும் இந்த மாபெரும் விழாவிற்கு அன்றைய தினம் மாலையில் நடைபெறும் வரவேற்பு மங்கல நிகழ்ச்சிக்கு ஸெளராஷ்ட்ர சமூகப்பிரமுகர்கள் பத்திரிகையாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அனைவரும் குடும்பத்தோடு வருமாறு அவரது குடும்பத்தார் அன்புடன் அழைக்கிறார்கள்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 6 =