Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
pakattum...ShrEyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.5 16th November  2017 Issue: 6


பகட்டுக்கும் பணத்திற்கும்.......

ஸெளராஷ்ட்ர மத்ய சபைக்கு தேர்தல் நாள் குறிக்கப்பட்டு பொறுப்புகளை தேர்தல் அதிகாரியிடம்  கொடுக்கப்பட்டு  விட்டது. அதன்படி 16-11-17அன்று அங்கத்தினர்கள் பட்டியல் மத்ய சபை பதிவு அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. பெயர், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை செய்ய 22-11-17வரை அனுமதிக்கப்படுகிறது. உரியக் கட்டணம் செலுத்தி வேட்பு மனுத் தாக்கல் செய்ய 24,25-11-17 ஆகிய இரண்டு நாட்கள் வழங்கப்படுகிறது. மனுக்கள் பரிசீலனை 26-11-17 அன்றும் மறுநாள் தகுதியுள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. 28.29-11-17 ஆகிய இரண்டு நாட்கள் வாபஸ் பெறுவோர் களிடமிருந்து வாபஸ் பெறுவதும் பின்னர் 1-12-17 அன்று போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது. 10-12-17 காலை 8 மணி முதல் 1.00 மணிவரையிலும் பின்னர் மதிய உணவிற்குப்பின் 2.00 மணிமுதல் 5.00 மணிவரையிலும் தேர்தல் நடைபெறும். அன்று மாலை 6.00 மணிமுதல் தேர்தல் எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று அன்றே முடிவுகள் தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் 25-12-17 அன்று தலைவர், பொருளாளர், துணைத்தலைவர்கள், பொதுக்காரியதரிசி, உதவிக் காரியதரிசிகள் மற்றும் காரியதரிசிகள் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அறிக்கை ஊர்சபைகள் மற்றும் இணைப்பு ஸ்தாபனங்கள் ஆகியோர்களுக்கு தபால் மூலமாக அனுப்பப்பட்டுவிட்ட நிலையில் சமூகப்பத்திரிகைகளுக்கு இன்றுவரை செய்திகள் அனுப்பப்படவில்லை. ஏதோ மொட்டைத் தாத்தா பொட்டல் காட்டில் குண்டு வீசி அதில் தெறித்த துகளாக முகநூலில் பார்த்த குறிப்பினைக் கொண்டு தேர்தலின் காலத்தைக் கருதி நாமே இச்செய்தியினை வெளியிட்டுள்ளோம். 

 

சுறுசுறுப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டுதலையும் பெற்ற பொதுக்காரியதரிசியின் செயல்பாட்டில் ஏதோ ஒரு தவறு இருப்பது அவருக்கே தெரியும் போலிருக்கிறது. அதற்காகவே யாருடைய கேள்விக்கும் பதிலளிக்காமல் ஒதுங்கியே இருக்கிறார். சகஜ நிலையில் பழகும் இவர் இப்படி விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு நின்று பதிலளிக்கும் தன்மையிலிருந்து மாறுப்பட்டிருப்பது பலவித குழப்பங்களை உருவாக்குகிறது. முக்கியமாக தலைமை ஸ்தானத்திற்கு முந்தைய நடைமுறையிலிருந்து மாறுப்பட்டு புதிய நடைமுறைக்கு மாறியிருப்பதுதான் இன்றைய முத்தாய்ப்பான நிலை. முன்னாள் நிர்வாகிகள் யாரும் சமதான முயற்சியில் ஈடுபடாததும் ஒருவிதமான பின்தங்கிய நிலையைக் காட்டுகிறது. கடைசி நிர்வாக சபைக்கூட்டத்தில் இந்த நிர்வாகத்தினரால் முன்னாள் நிர்வாகிகள் முன்பு இனங்காட்டப்பட்ட தலைவரும் இப்போது பொதுக்காரியதரிசியால் அடையாளங்காட்டப்பட்ட தலைவரும் தஞ்சையைச் சேர்ந்தவர்களே! ஒரே ஊருக்குள் இரண்டு கோஷ்டியை உருவாக்கி ஊருக்குள் ஒருவருக்கொருவர் பகைமையைப் பாராட்டிக்கொள்ளும் இயல்பினை உருவாக்கிய நல்லபெயர் பொதுக்காரியதரிசியின் இம்முயற்சியால் உறுதியாக கிடைத்துவிடும். 

 

சென்ற சட்டமன்ற தேர்தலின்போது இதே இடத்தில் குறிப்பிட்ட எனது கருத்தினை மீண்டும் வலியுறுத்திக் காட்டுகிறேன். இன்றைய அரசியல் கட்சிகளிடம் நம் சமூகமா? இல்லை சமூகத்திற்குள் அரசியல் கட்சிகளா? சிந்தித்துப் பாருங்கள். ஆளும்கட்சிக்கு நாம் ஆதரவாக இருப்பதுதான் நமது வளர்ச்சிக்கு கைக்கொடுக்கும் என்றாலும் சமூக ஸ்தாபனம் அனைத்திலும் ஆளுங்கட்சியினர் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது நம் விரலாலேயே நம் கண்ணைக் குத்திக்கொள்ளச் செய்வது போலிருக்கிறது. இது எங்கு போய் முடியுமோ? அரசியலில் லாபம் பார்க்க எண்ணுவோர் சமூக ஸ்தாபனங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தலையீட்டை நாமாவது தவிர்க்கவேண்டும். இல்லையென்றால் இப்படிப்பட்ட குழப்பங்களை நம்மால் தவிர்க்கவே முடியாது.

 

மத்ய சபையின் உண்மை நிலையை உணர்ந்து பகட்டுக்கும் பணத்திற்கும் அடிமையாகாமல் அர்ப்பணிப்புத் தன்மையோடு செய்ல்பட வரும் உண்மையான தொண்டர்களை இனங்கண்டு ஊரே போற்றும்படி தேர்ந்தெடுத்து தலைமை பீடத்தில் அமரச் செய்வோம். 

 

ஸெளராஷ்ட்ர மத்ய சபை வரலாற்றை எடுத்துக் கொண்டால் ஒத்துழைப்போடு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும் செயலரும் பின்னாட்களில் முரண்படான கருத்தில் வேறுபட்டு நின்ற காட்சிதான் கண்டுள்ளேன். அதற்கு நமது இன்றைய பொதுச்செயலாளர் விதிவிலக்கல்லவே! இனியும் இந்த பண்பாடு தொடரவேண்டுமா? உறுப்பினர்களே முறையாக தேர்தலை எதிர்கொண்டு நிர்வாகக்குழு அமைப்போம். அதில் முறைப்படி தலைவரை தேர்ந்தெடுப்போம். அடுத்த மூன்று ஆண்டுகளில் சீரான நிர்வாகம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்போம்.


ஸெளராஷ்ட்ர டைம் தலையங்கத்தைப் படித்த ஸெளராஷ்ட்ர மத்ய சபை பொதுக்காரியதரிசி தன்னிலை விளக்கமாக கூறிய தகவல்கள். 

இந்த நிர்வாகத்தினரால் முன்னாள் நிர்வாகிகள் முன்பு இனங்காட்டப்பட்ட தலைவரும் இப்போது பொதுக்காரியதரிசியால் அடையாளங்காட்டப்பட்ட தலைவரும் தஞ்சையைச் சேர்ந்தவர்களே! ஒரே ஊருக்குள் இரண்டு கோஷ்டியை உருவாக்கி ஊருக்குள் ஒருவருக்கொருவர் பகைமையைப் பாராட்டிக்கொள்ளும் இயல்பினை உருவாக்கிய நல்லபெயர் பொதுக்காரியதரிசியின் இம்முயற்சியால் உறுதியாக கிடைத்துவிடும். 
ஆசிரியர் அவர்களே! உங்களது இக்கூற்றை நான் மறுக்கிறேன். என்னால் அடையாளம் காட்டப்பட்ட தலைவர் என்று குறிப்பிடுவதில் எவ்வித ஆதாரமும் கிடையாது. ஒரு முக்கிய பிரமுகரின் அழைப்பை ஏற்று சென்றபோது நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல சர்ச்சைகளுக்கிடையே எனக்கு அரசியல் கட்சியே வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு சமூகப்பணியை மட்டுமே பிரதான வைத்து செயல்படுவதற்காகவே தலைமைக்கு போட்டியிடுவதாகக் கூறியவர் ஸ்ரீராம்சேகர். எனக்கு அரசியலும் சமூகம் இரு கண்கள்போல. இரண்டையும் நான் விடமாட்டேன் என்று கூறியவர் முன்னாள் நிர்வாகிகள் முன்பு தலைவரால் இனங்காட்டப்பட்டதாக கூறும் எம்.எஸ். ராமலிங்கம். நான் அழைத்து ஸ்ரீராம்சேகர் வரவில்லை. இருவருக்குமிடையே சமாதானம் வெற்றிப் பெறாமல் போகவே தலைமைக்கு தேர்தல் நடத்தியே தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற பொதுவான உறுப்பினர்களின் கருத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அந்தக் கூட்டம் நிறைவுப்பெற்றது. 
ஒரே ஊரைச் சேர்ந்தவர்களானாலும் ஸ்ரீராம்சேகர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். ஒரே ஊருக்குள் இரண்டு கோஷ்டியை உருவாக்கி ஊருக்குள் ஒருவருக்கொருவர் பகைமையைப் பாராட்டிக் கொள்ளும் இயல்பினை உருவாக்கும் மோசமான செயலை செய்பவன் நானல்ல என்பதையும் இத்தருணத்தில் சொல்லிக் கொள்கிறேன். 
மதுரை திரும்பும் வழியில் திருச்சி சேலம் போன்ற ஊர்களுக்கு ஸ்ரீராம்சேகருடன் நானும் இருந்தேன். இதில் உள்குத்து வேலை என்று எதுவுமில்லை. 
மத்ய சபையின் உண்மை நிலையை உணர்ந்து பகட்டுக்கும் பணத்திற்கும் அடிமையாகாமல் அர்ப்பணிப்புத் தன்மையோடு செயல்பட வரும் உண்மையான தொண்டர்களை இனங்கண்டு ஊரே போற்றும்படி தேர்ந்தெடுத்து தலைமை பீடத்தில் அமரச் செய்வோம். 
என்ற உங்களது கருத்துப்படிதான் எங்களது செயல்பாடும் உள்ளது என்பதையும் சொல்லிக் கொள்கிறோம். மேலும் நானும் தலைவரும் சகஜநிலையில் தான் இருந்துவருகிறோம். எங்களுக்குள் எவ்வித பிரச்னையும் கிடையாது. 

ஸெளராஷ்ட்ர டைம் தலையங்கத்தைப் படித்த ஸெளராஷ்ட்ர மத்ய சபை பொதுக்காரியதரிசி தன்னிலை விளக்கமாக கூறிய தகவல்கள். 

இந்த நிர்வாகத்தினரால் முன்னாள் நிர்வாகிகள் முன்பு இனங்காட்டப்பட்ட தலைவரும் இப்போது பொதுக்காரியதரிசியால் அடையாளங்காட்டப்பட்ட தலைவரும் தஞ்சையைச் சேர்ந்தவர்களே! ஒரே ஊருக்குள் இரண்டு கோஷ்டியை உருவாக்கி ஊருக்குள் ஒருவருக்கொருவர் பகைமையைப் பாராட்டிக்கொள்ளும் இயல்பினை உருவாக்கிய நல்லபெயர் பொதுக்காரியதரிசியின் இம்முயற்சியால் உறுதியாக கிடைத்துவிடும். 

ஆசிரியர் அவர்களே! உங்களது இக்கூற்றை நான் மறுக்கிறேன். என்னால் அடையாளம் காட்டப்பட்ட தலைவர் என்று குறிப்பிடுவதில் எவ்வித ஆதாரமும் கிடையாது. ஒரு முக்கிய பிரமுகரைச் சந்திக்க சென்றபோது அங்கே தலைமைக்கு போட்டி வரவிருப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல சர்ச்சைகளுக்கிடையே எனக்கு அரசியல் கட்சியே வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு சமூகப்பணியை மட்டுமே பிரதான வைத்து செயல்படுவதற்காகவே தலைமைக்கு போட்டியிடுவதாகக் கூறியவர் ஸ்ரீராம்சேகர். எனக்கு அரசியலும் சமூகம் இரு கண்கள்போல. இரண்டையும் நான் விடமாட்டேன் என்று கூறியவர் முன்னாள் நிர்வாகிகள் முன்பு தலைவரால் இனங்காட்டப்பட்டதாக கூறியவர் எம்.எஸ். ராமலிங்கம். நான் அழைத்து ஸ்ரீராம்சேகர் வரவில்லை. இருவருக்குமிடையே சமாதானம் வெற்றிப் பெறாமல் போகவே தலைமைக்கு தேர்தல் நடத்தியே தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற பொதுவான உறுப்பினர்களின் கருத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அந்தக் கூட்டம் நிறைவுப்பெற்றது. 

ஒரே ஊரைச் சேர்ந்தவர்களானாலும் ஸ்ரீராம்சேகர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். ஒரே ஊருக்குள் இரண்டு கோஷ்டியை உருவாக்கி ஊருக்குள் ஒருவருக்கொருவர் பகைமையைப் பாராட்டிக் கொள்ளும் இயல்பினை உருவாக்கும் மோசமான செயலை செய்பவன் நானல்ல என்பதையும் இத்தருணத்தில் சொல்லிக் கொள்கிறேன். 

மதுரை திரும்பும் வழியில் திருச்சி சேலம் போன்ற ஊர்களுக்கு ஸ்ரீராம்சேகருடன் நானும் இருந்தேன். இதில் உள்குத்து வேலை என்று எதுவுமில்லை. 

மத்ய சபையின் உண்மை நிலையை உணர்ந்து பகட்டுக்கும் பணத்திற்கும் அடிமையாகாமல் அர்ப்பணிப்புத் தன்மையோடு செயல்பட வரும் உண்மையான தொண்டர்களை இனங்கண்டு ஊரே போற்றும்படி தேர்ந்தெடுத்து தலைமை பீடத்தில் அமரச் செய்வோம்என்ற உங்களது கருத்துப்படிதான் எங்களது செயல்பாடும் உள்ளது என்பதையும் சொல்லிக் கொள்கிறோம். 

 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 8 =