Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Book review

ஸ்ரீதியாகராஜ வேங்கடரமண சரித்திரம் (பதிப்பு 2)

ஆசிரியர்: கே.ஆர்.சேதுராமன்

பக்கங்கள்: 148 விலை: ரூ. 150.00

Published by: K.S. Meera

                   Pruthvi Residency, MLA Layout,

                   Kalena Agrahara, Bennerghatta Road,

                      Bangaluru – 560 076. Ph: 099024 50559   

சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்நூலாசிரியர் ஸ்ரீதியாகராஜ வேங்கடரமண சரித்திரம் எழுதியதன் காரணம் 1965ஆம் ஆண்டில் வெளியிட்ட தமது முதல் பதிப்பில் வெளிப்படுத்தியிருந்தார். இப்போது 2ஆம் பதிப்பு வெளியிட வேண்டிய கட்டாயத்தையும் சொல்லியிருப்பதிலிருந்து பாமரனும் தியாகராஜ சுவாமிகளைப்பற்றி தவறாக புரிந்து கொண்டிருப்பதை தெளிவுப்படுத்தவே என்பதையும் விளக்கியுள்ளார். இந்நூலுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சி.பி. ராமசாமி அய்யர் முன்னுரையும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எம். அனந்தநாராயணன் அறிமுகவுரையும் முதல் பதிப்பில் இடம் பெற்றுள்ளதை இரண்டாம் பதிப்பிலும் இடம்பெறச் செய்துள்ளார்கள். 


பேச்சு மொழியாக காத்து வருகின்ற ஸெளராஷ்ட்ர மொழிக்கு எழுத்து இலக்கியம் உண்டு என்று கூறிய இந்நூலாசிரியர் அழிந்து வரும் மொழிகளில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


இந்நூலில் வேங்கடரமண பாகதரின் வாழ்க்கையில் நடந்த அற்புதங்களில் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். தியாகராஜர் - வேங்கடரமணர் பற்றிய வரலாற்று உண்மைகள் பலரும் பலவிதமாக பேசிவருகின்ற நிலையில் உண்மை வரலாற்றினை ஊருக்கு உணர்த்தவேண்டும் என்ற எண்ணத்துடன் கே.ஆர்.சேதுராமன் இந்நூலை எழுதியுள்ளார்.  


சமீபத்தில் வேங்கடரமண பாகவதர் தபால் தலையினை மத்திய அரசு வெளியிட்டிருப்பதில் இந்தியில் பெயர் தவறாக அச்சடிக்கப்பட்டுள்ளதை இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 


தியாகராஜரின் சங்கீர்த்தனைகள் அனைத்தும் வேங்கடரமண பாகவதரால்தான் வெளியுலகம் அறியமுடிந்தது என்ற உண்மையும் தியாகராஜரின் சமாதி பற்றிய விபரமும் வேங்கடரமண பாகவதரின் இறுதிகாலம் பற்றிய செய்தியும் இவரது இந்நூல் விளக்கிச் சொல்கிறது. 


இந்நூல் ஸெளராஷ்ட்ர குலத்தில் பிறந்த வேங்கடரமண பாகவதரின் வரலாறு. ஸெளராஷ்ட்ரர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டிய புத்தகம் என்பதோடு மட்டுமின்றி இசையுலகினரும் பாதுகாத்து கொள்ளவேண்டிய சிறப்பும் இதற்குண்டு.    – எஸ்.டி.ஞானேஸ்வரன்

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 9 =