Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni -kaLatni 16-09

வேங்கடஸுரி சுவாமிகளின் 200வது ஜெயந்தி விழா

ஸ்ரீமத் மஹாகவி வேங்கடஸுரி சுவாமிகளின் 200வது ஜெயந்தி விழா மதுரை புரோஹித வைதீக மகா சபையினரால் மதுரை ஸெளராஷ்ட்ர சபை ஸ்ரீரெங்கமகாலில் இன்று (1-10-2018) காலை முதல் இரவு முடிய நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு மதுரை சபைத்தலைவர் பாலாஜி மற்றும் காரியதரிசி பாஸ்கர் ஆகியோர் விசேஷ அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றார்கள். உலக நன்மைக்காக சுதர்சன நரசிம்ம ஹோமம் செய்யப்படுகிறது.

மாலை 6.00 மணிக்கு V.K.. நீலாராவ் அவர்களின் சிஷ்யைகள் பங்கேற்கும் முனைவர் சாந்தசங்கரி தலைமையிலான ஸ்ரீமத் வேங்கடஸுரி சுவாமிகளின் கீர்த்தனைகள் இசைவிருந்தாக அளிக்கப்படுகிறது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


 

புதுச்சேரி ஸெளராஷ்ட்ர சபை 41வது ஆண்டு விழா

 

புதுச்சேரி ஸெளராஷ்ட்ர சபையின் 41வது ஆண்டு விழா, பொதுக்குழு சிறப்புக்கூட்டம் மற்றும் காந்தி ஜெயந்திவிழா 02-10-2018 அன்று பாக்கமுடையான்பட்டு, ஸ்ரீபார்வதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. சபைத்தலைவர் ஜி.ஆர்.ரவிந்திரன் தலைமை தாங்குகிறார். இவ்விழாவில் பி3ந்து3லா கெ2நி புகா3ர் ஸர்கு3 பொதுமக்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் இடம்பெறுகிறது. புதுச்சேரியில் வாழும் ஸெளராஷ்ட்ரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.


 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 9 =