Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
munnuthaaraNa....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.4 16th May 2017 Issue: 18


 

முன்னுதாரணமான சபை!

 

மதுரை ஸெளராஷ்ட்ர சபைக்கு உறுப்பினர் சேர்க்கை முடிந்து தேர்தல் அதிகாரி நியமனம் ஆனபின் தேர்தல் நாள் அறிவிப்பதும் அந்த அறிவிப்பு மக்கள் அதிகம் படிக்கும் நாளிதழ்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என்பதும் வழக்கமாக நடைபெறும் நிகழ்வு. சட்டரீதியாக எல்லாமே நடக்கும். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வரும் நிர்வாகிகள் சபை விதிமுறைக்குட்பட்டு சபைக்குப் பாத்தியப்பட்ட கோவிலுக்கு திருவிழாää பூஜை வகையறாக்களை மட்டும் முறையாக செய்து முடிப்பார்கள். அதற்குமேல் அவர்களால் சமூக பொதுநன்மைக் குறித்து ஒன்றுமே செய்ய முடியாது. சமூக பொது நன்மைக் குறித்த செயல்பாடுகள் எதிலும் அக்கறை எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.


சமூகத்தின் கல்வி தொழில் குறித்த அக்கறையில் நம் சமூக முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள அறக்கட்டளை நன்கொடைகள் இவைகளை முறையாக பயன்படுத்தி செயல்படுத்த முற்படவேண்டும். அசையும் சொத்துக்கள் அசையா சொத்துக்கள் போன்றவற்றை முறையாக நிர்வகித்து சரியான பயன்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும். நமது முன்னோர்களின் அர்ப்பணிப்புத் தன்மை பதவிக்கு வருவோரிடமும் காணப்படவேண்டும். அரசாங்கத்தில் நம் சமூக உரிமைகளைப் பெற்றுத் தருவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும். 


ஒருகாலத்தில் முன்மாதிரியான சபையாக இருந்த மதுரை ஸெளராஷ்ட்ர சபை அனைத்து ஊர் சபைகளுக்கும் தாய் சபையாகும். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் தங்களது நிர்வாகத்திறமையால் மீண்டும் சபையை முன்னுதாரணமாக்க முழு வீச்சில் முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். அதற்காக சமூக மக்களும் தங்களது ஒத்துழைப்பினை அளிப்பார்கள். 


புதிய நிர்வாகிகள் சபை உறுப்பினர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டவேண்டும். தற்போதைய நிர்வாகிகளால் உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தை மாற்றி குறைந்த பட்சக் கட்டணமாக்க வேண்டும். எந்த ஒரு சமுதாய அமைப்பிலும் இதுபோன்ற அங்கத்தினர் கட்டணம் கிடையாது. ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களே நிர்வாகத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக வேறு யாரும் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்பதில் மிக கவனத்துடன் அங்கத்தினர் கட்டண உயர்வினை நடைமுறைப் படுத்தியிருக்கிறார்கள். அதனை புதிதாக வருகின்ற நிர்வாகிகள் பைலா திருத்தம் கொண்டுவந்து அதிகமான உறுப்பினர்களை சேர்க்க முற்படவேண்டும். 


நமது சபையை பார்த்து தொடங்கிய பிற சமுகத்தினரின் அமைப்புகள் நம்மை வியப்படையச் செய்யும் விதத்தில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. நாம் சபையை வைத்து எதையும் சாதிக்க வில்லை என்ற அப்பட்டமான உண்மையினை புரிந்துக் கொள்ளவேண்டும். சபை என்ற அமைப்பின் சக்தி எத்தகையது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது செயல்பாட்டினை அமைத்துக் கொண்டு முன்னோர்கள் வழிகாட்டியபடி நடந்து கொண்டால் சபை சிறப்பான முன்னேற்றம் நோக்கிச் செல்லும். 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 6 =