Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
aNivakuthu....ShrEyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.5 16th April  2018 Issue: 16


 

அணிவகுத்து வாருங்கள்!

 

இலக்கியம் என்பது அந்த மொழிப்பேசுவோரின் வாழ்ந்த முறை கலாச்சாரம் பண்பாடு நாகரீகம் இவற்றின் பிரதிபலிப்பாகும். ஏதாவது ஒரு வடிவத்தில் அந்த இலக்கியங்கள் மக்களிடம்போய் சேரவேண்டும். சிறுபான்மை மொழியினராகிய நாம் நமது இலக்கியங்களை வளர்க்க எழுத்தைப் பிரச்னையாக்கி இதுவரை காலந்தாழ்த்தியது போதும். அனைவருக்கும் தெரிந்த வரிவடிவத்தில் இலக்கியங்களை படைத்து இலக்கிய வளர்ச்சிக்கு வித்திடவேண்டுமே தவிர எழுத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இலக்கிய வளர்ச்சிக்கு தடைப்போடக்கூடாது. அது பல தலைமுறைக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பது எனது கருத்து. அதற்காக நாம் நமது ஸெளராஷ்ட்ர எழுத்தை கற்றுக்கொள்வதையும் கற்;றுக்கொடுப்பதையும் தவிர்த்துவிடக் கூடாது. அது ஒரு புறம் நடந்துகொண்டிருக்கவேண்டும். இலக்கியப் படைப்புகள் ஒருபுறம் வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.
சில மொழி ஆர்வலர்கள்கூட அடிக்கடி இராமராய் லிபி என்று குறிப்பிடுவது வருத்தமாகத்தான் உள்ளது. ஸெளராஷ்ட்ரீ லிபி என்று சொல்வதால் எதுவும் குறைந்துவிடப் போவதில்லை. மாறாக நம் மொழிக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு ஸெளராஷ்ட்ரீ லிபி என்று குறிப்பிடவேண்டும் என்று வேண்டுகிறேன். இதனால் பல தவறான முன்னுதாரணங்களை தவிர்க்கலாம் என்பதே என் கருத்து.
ஸெளராஷ்ட்ரர்கள் இந்த லிபி பிரச்னையில் மூழ்கி மொழி வளர்ச்சி என்ற பாதையை அடைத்து விட்டார்கள். அதையும் மீறி ஒரு சில புத்தகங்கள் வெளிவந்துள்ளன. காரணம் மொழி வளர்ச்சிக்கு இலக்கயங்களே முதன்மை காரணம் என்பதை புரிந்த கொண்ட இலக்கிய காத்தாக்கள்தான். நாகரி லிபி மற்றும் புதிதாக வந்த லிபி என்று பார்த்தால்கூட தனியாக ஸெளராஷ்ட்ர லிபிக்குள்ள தகுதியும் மக்களிடம் உடன்பாடும் அதிகம் என்றே சொல்லலாம். ஸெளராஷ்ட்ரீ லிபியை இளைஞர்கள் கற்றுக்கொள்கிறார்கள். கற்று தருகிறார்கள். மற்ற லிபிகளைப் பற்றி சொல்ல எதுவுமில்லை. அது சமூகத்திற்கே தெரியும். 
வாய் கிழிய பேசுவார்கள். வளர்ச்சிக்கு தடையாய் இருப்பார்கள். அமைதியாக இருந்து ஆக்கப்பூர்வமான பணியில் ஆர்வம் காட்டி அசர வைப்பவர்கள்தான் ஸெளராஷ்ட்ரீ லிபிக்கு ஆதரவான ஆர்வலர்கள். உதாரணத்திற்குப் பாருங்கள் முகநூலில் ரோமன் லிபியிலும் தமிழ் எழுத்திலும் ஸெளராஷ்ட்ரீயில் தங்களது பதிவுகளை செய்கிறார்கள். ஒருவரது உணர்வுகளை மற்றவர்கள் புரிந்து கொள்ள துணைசெய்வதுதான் மொழி. தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி ஸெளராஷ்ட்ர இலக்கியங்களை படைக்கும் முறை பல தலைமுறைகளாக நடந்து வருகிறது. முன்பு விட்ட துளிர் இன்று விருட்சமாக மாறி வருகிறது. அதற்க்hக இப்படியே விட்டுவிடக் கூடாது என்ற கருத்தில்தான் ஸெளராஷ்ட்ரீ லிபியில் பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு ஊரிலும் நடந்து வருகிறது. 
ஆர்வலர்கள் அணிவகுத்து வாருங்கள்! படைப்பாளிகள் படையெடுத்து வாருங்கள்! நம் இனிய தாய்மொழிக்கு பலவகையாலும் சிறப்பு செய்து உலகமெல்லாம் பரப்பும் வழி செய்வோம்!

இலக்கியம் என்பது அந்த மொழிப்பேசுவோரின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் இவற்றின் பிரதிபலிப்பாகும். ஏதாவது ஒரு வடிவத்தில் அந்த இலக்கியங்கள் மக்களிடம்போய் சேரவேண்டும். சிறுபான்மை மொழியினராகிய நாம் நமது இலக்கியங்களை வளர்க்க எழுத்தைப் பிரச்னையாக்கி இதுவரை காலந்தாழ்த்தியது போதும். அனைவருக்கும் தெரிந்த வரிவடிவத்தில் இலக்கியங்களை படைத்து இலக்கிய வளர்ச்சிக்கு வித்திடவேண்டுமே தவிர எழுத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இலக்கிய வளர்ச்சிக்கு தடைப்போடக்கூடாது. அது பல தலைமுறைக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பது எனது கருத்து. அதற்காக நாம் நமது ஸெளராஷ்ட்ர எழுத்தை கற்றுக்கொள்வதையும் கற்றுக்கொடுப்பதையும் தவிர்த்துவிடக் கூடாது. அது ஒரு புறம் நடந்துகொண்டிருக்கவேண்டும். இலக்கியப் படைப்புகள் ஒருபுறம் வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.


சில மொழி ஆர்வலர்கள்கூட அடிக்கடி இராமராய் லிபி என்று குறிப்பிடுவது வருத்தமாகத்தான் உள்ளது. ஸெளராஷ்ட்ரீ லிபி என்று சொல்வதால் எதுவும் குறைந்துவிடப் போவதில்லை. மாறாக நம் மொழிக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு ஸெளராஷ்ட்ரீ லிபி என்று குறிப்பிடவேண்டும் என்று வேண்டுகிறேன். இதனால் பல தவறான முன்னுதாரணங்களை தவிர்க்கலாம் என்பதே என் கருத்து.


ஸெளராஷ்ட்ரர்கள் சிலர் இந்த லிபி பிரச்னையில் மூழ்கி மொழி வளர்ச்சி என்ற பாதையை அடைத்து விட்டார்கள். அதையும் மீறி ஒரு சில புத்தகங்கள் வெளிவந்துள்ளன. காரணம் மொழி வளர்ச்சிக்கு இலக்கயங்களே முதன்மை காரணம் என்பதை புரிந்த கொண்ட இலக்கிய காத்தாக்கள்தான். நாகரி லிபி மற்றும் புதிதாக வந்த லிபி என்று பார்த்தால்கூட தனியாக ஸெளராஷ்ட்ர லிபிக்குள்ள தகுதியும் மக்களிடம் உடன்பாடும் அதிகம் என்றே சொல்லலாம். ஸெளராஷ்ட்ரீ லிபியை இளைஞர்கள் கற்றுக்கொள்கிறார்கள். கற்று தருகிறார்கள். மற்ற லிபிகளைப் பற்றி சொல்ல எதுவுமில்லை. அது சமூகத்திற்கே தெரியும். 


வாய் கிழிய பேசுவார்கள். வளர்ச்சிக்கு தடையாய் இருப்பார்கள். அமைதியாக இருந்து ஆக்கப்பூர்வமான பணியில் ஆர்வம் காட்டி அசர வைப்பவர்கள்தான் ஸெளராஷ்ட்ரீ லிபிக்கு ஆதரவான ஆர்வலர்கள். உதாரணத்திற்குப் பாருங்கள் முகநூலில் ரோமன் லிபியிலும் தமிழ் எழுத்திலும் ஸெளராஷ்ட்ரீயில் தங்களது பதிவுகளை செய்கிறார்கள். ஒருவரது உணர்வுகளை மற்றவர்கள் புரிந்து கொள்ள துணைசெய்வதுதான் மொழி. தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி ஸெளராஷ்ட்ர இலக்கியங்களை படைக்கும் முறை பல தலைமுறைகளாக நடந்து வருகிறது. முன்பு விட்ட துளிர் இன்று விருட்சமாக மாறி வருகிறது. அதற்காக இப்படியே விட்டுவிடக் கூடாது என்ற கருத்தில்தான் ஸெளராஷ்ட்ரீ லிபியில் பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு ஊரிலும் நடந்து வருகிறது. 


ஆர்வலர்கள் அணிவகுத்து வாருங்கள்! படைப்பாளிகள் படையெடுத்து வாருங்கள்! நம் இனிய தாய்மொழிக்கு பலவகையாலும் சிறப்பு செய்து உலகமெல்லாம் பரப்பும் வழி செய்வோம்!

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 8 =