Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni 16-03

மதுரையைச் சேர்ந்த மாத்ருபா4ஷா நாடக விருத்தி கர்தா என்ற சிறப்புப் பட்டம் பெற்றவரும் முதன்முதலில் ஹெட்டெ3 ஜொமை திரைப்படத்தை தயாரித்து திரையரங்கில் திரையிட்ட பெருமைக்குரியவருமான வி.கே. நீலாராவ் தமது சங்கீத மாணவர்களின் வேண்டுக் கோளுக்கிணங்க ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளின் கீர்த்தனைகள் மற்றும் வேங்கடசூரி இராமாயணக் கீர்த்தனைகள் சிலவற்றை ஸ்வர ஸாகித்யங்களுடன் பத்தகமாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக சமூகப்பிரமுகர்கள் மொழிவளர்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் சபைகளிடமிருந்து நன்கொடைகள் அனுப்பும்படி வேண்டுகிறார். ரூபாய் ஐநூறும் அதற்குமேலும் கொடுப்பவர்கள் பெயர் புத்தகத்தில் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.

நன்கொடைகள் கீழ்கண்ட வங்கி கணக்கு மூலம் அனுப்பலாம். V.K.Neelarao, Bank of India, Jaihindpuram Branch, SB A/C No. 823910110012257 IFSC Code No. BKID0008239


 

ராஜ்கோட், ஸெளராஷ்ட்ர பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட ஸெளராஷ்ட்ர ஹெரிட்டேஜ் சேர் மற்றும் ஸெளராஷ்ட்ரக் கல்லூரி இணைந்து சென்ற 20-03-2017ல் ஸெளராஷ்ட்ரக் கல்லூரியில் உள்ள வெள்ளிவிழா அரங்கில் காலை 11.00 மணியளவில் கசின்.ஆனந்தம் எழுதிய பாண்ட3வுந் கெ2தொ ஆடியோ மற்றும் வீடியோ பதிவு செய்யும் மாபெரும் தொடக்கவிழா நிகழ்வு நடைப்பெற்றது. ஸெளராஷ்ட்ரக் கல்லூரி முதல்வர் முனைவர் ராமலிங்கம் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் முனைவர் கோவர்தனன் தலைமையுரையாற்றினார். ஸெளராஷ்ட்ர ஹெரிட்டேஜ் சேர் இணைஇயக்குனரான பேராசிரியர். முனைவர் ரவிசிங் ஜாலா இந்த ஆய்வுப்பட்டறை பற்றிய விளக்கம் அளித்தார். இந்த பாண்ட3வுந் கெ2தொ பதிவு செய்யும் பணிக்கு ரூபாய் ஒரு லட்சம் ஸெளராஷ்ட்ர பல்கலைக்கழகத்தின் ஹெரிட்டேஜ் சேர் வழங்குகிறது. சுமார் 50 மணிநேரத்திற்கு பதிவு இருக்கவேண்டும் என்றும் கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்த்துறை தலைவர் குபேந்திரன்ää நாகேஸ்வரன் மற்றும் முனைவர் தா.கு. சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரைக்குப் பின் கசின்.ஆனந்தம் தமது பாண்ட3வுந் கெ2தொவிலிருந்து சில சிறப்பம்சங்களை விவரித்துப் பேசினார். ஸெளராஷ்ட்ர மொழியை எழுதப்படிக்கக் கற்றுக்கொண்ட மாணவ-மாணவிகள் ஸெளராஷ்ட்ர எழுத்தில் சுமார் பத்து பக்கங்கள் எழுதி சாதனை படைத்தமைக்கு பேராசிரியர் ஜாலா சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். ஸெளராஷ்ட்ர ஹெரிட்டேஜ் சேர் இணைஇயக்குனர் பேராசிரியர் தாமோதரன் நன்றி கூறினார். 


 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 6 =